• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

பைசன்(காளமாடன்) -விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

by Tamil2daynews
October 18, 2025
in விமர்சனம்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
பைசன்(காளமாடன்) -விமர்சனம்
வாழை படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் பைசன் காளைமாடன். இப்படத்தில் ஹீரோவாக துருவ் விக்ரம் நடித்துள்ளார்.இவருடன் இணைந்து பசுபதி, அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ் கே. பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
தனது கவித்துவமான கதை சொல்லும் நடையால் மாரி செல்வராஜ் நம்மை இன்னொரு முறை வியக்கவைத்திருக்கிறார். திருநெல்வேலி தூத்துக்குடி நிலப்பரப்பிற்கு நம்மை கூட்டிச் செல்கிறார். அந்த மண்ணின் கோபத்தையும் வலியையும் பல்வேறு குறியீடுகளின் வழி கடத்துகிறார். மனத்தி கணேசனின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இப்படம் ஒரு இளைஞரின் வாழ்க்கையில் சாதி மற்றும் பிற காரணங்களால் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களை பேசுகிறது.

இந்த பைசன்(காளமாடன்).

சொந்த ஊர் கபடி அணியிலேயே சேர்த்துக்கொள்ளப்படாத இளைஞன், இந்திய கபடி அணியில் இடம்பிடிக்கும் போராட்டமே பைசன். அந்த முயற்சிக்கு என்னென்ன தடைகள், யார் யாரின் உதவிகள், முன்னால் நிற்கும் சவால்கள் என அனைத்தையும் நிதானமான திரைக்கதை மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்.

பைசனின் கதைகளம் 90களில் நடைபெறுகிறது. மணத்தி கணேசனின் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு புனைவு சேர்த்து எடுக்கப்பட்டிருந்தாலும், அதில் இன்னும் சில முக்கிய நிஜ கதாபாத்திரங்களை கொண்டுவந்துள்ளார் இயக்குனர். அதுவும் தென்மாவட்ட கதைகளம் என்பதால் 90 காலகட்டத்தில் நடந்த சாதி கலவரத்தை திரைக்கதை வாயிலாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதற்காக வெங்கடேசன் பண்ணையார், பசுபதிபாண்டியன் கதாபாத்திரங்களை வேறு பெயர்களுடன், அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வேறு வடிவிலும் பயன்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்.

பைசன் கபடி வீரரின் வாழ்க்கைப் படமாக இருந்தாலும் அதில் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடையாளத்திற்காக சண்டையிடுவதாக வசனம் பேசும் கந்தசாமி கதாபாத்திரம் சாதிக்க துடிக்கும் பட்டியலின இளைஞனுக்கு உதவும் வகையிலும், தன்முன் இருக்கும் தடைகளை உடைக்கும் பாண்டியராஜா கதாபாத்திரம், “எல்லாரும் சமம் என்று தொடங்கிய சண்டையை நைசா மறந்துடானுங்க” என வசனம் பேசும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டு தரப்பில் இருக்கும் தவறுகளை அந்த கதாப்பாத்திரங்கள் வாயிலாக கூறியுள்ளார். அதற்காக எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.

முதல்பாதி துருவ் விக்ரம், கபடி வீரராக சந்திக்கும் சவால்கள், வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனை, வலியுடன் கலந்த தவிப்பு என நகர்கிறது. அதேபோல் இரண்டாம்பாதி துருவின் இலக்கை நோக்கிய பயணம், அதில் இருக்கும் தடைகள், சம்பந்தமே இல்லாமல் அவன் மேல் வரும் சந்தேகம், அதன் பின் இருக்கும் அரசியல் என நகர்கிறது.

இந்தப் படத்தில் மணத்தி கணேசன் கதாபாத்திரத்தில் வணத்தி கிட்டுவாக துருவ் விக்ரம், வெங்கடேச பண்ணையார் கதாபாத்திரத்தில் கந்தசாமியாக லால், பசுபதி பாண்டியன் கதாபாத்திரத்தில் பாண்டியராஜாவாக அமீர் நடித்துள்ளனர். அதேபோல் துருவின் தந்தைக் கதாபாத்திரத்தில் பசுபதி, அக்காவாக ரெஜினா விஜயன், மாமன் பொண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்.

இதில் அனைவரின் நடிப்பும் சிறப்பாக இருந்தாலும், தகப்பனாக மகனுக்கு எதுவும் நடந்தவிடக்கூடாது என்ற தவிப்பையும், மகனின் வெற்றியின் பின் இருக்கும் வைராக்கியம் கலந்த பூரிப்பையும் நிறைவாக தந்துள்ளார் பசுபதி.

தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகியவை கதைக்களத்திற்கு தகுந்தார் போல கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை ஓகே என்றாலும், சந்தோஷ் நாராயணன் – மாரி செல்வராஜ் காம்போவை மிஸ் செய்யும் உணர்வு மேலோங்குகிறது.

பைசன் படத்தின் நின்று நிதானமாக பயணிக்கும் திரைக்கதை சில இடங்களில் சோர்வைக் கொடுக்கிறது. அதேபோல் மாரி செல்வராஜின் முந்தைய படங்களின் சில காட்சிகளை வேறு இடத்தில், வேறு கதையில், வேறு நடிகர்களின் நடிப்பில் பார்க்கும் எண்ணத்தையும் கொடுக்கிறது. அதேபோல் அனுபமா பரமேஸ்வரன் கதாபாத்திரம் படத்திற்கு தேவையே இல்லை என்றே தோன்ற வைக்கிறது.

படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடிக்கும் ஒரே பிள்ளைர் அமீர் கதாபாத்திரம் மட்டுமே இடைவேளைக்கு பின் அவர் வரும் காட்சியில் கைதட்டல் விசில் பறக்கின்றன.

அந்த கதாபாத்திரம் இல்லாமல் படத்தைப் பார்த்தாலும் எந்த பாதிப்பும் கதைக்கு இல்லை. அது இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சில நிமிட காட்சிகளை குறைத்திருக்கலாம்.

அதேபோல் துருவ் மட்டுமே சிறந்த வீரர், அவர் மட்டுமே ரைடு சென்று பாயிண்டுகளை குவிக்கிறார் என்ற வகையில் காட்சிகளை இடம்பெற செய்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் பைசன் நிறை குறைகளை சமமாக கொண்ட ஒரு காள மாடன்.

மொத்தத்தில் பைசன் என்றால் வீரன். இதில் அந்த வீரம் கொஞ்சம் கம்மிதான்.
Previous Post

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : ‘தி டார்க் ஹெவன் ‘படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

Next Post

டீசல் – விமர்சனம் ரேட்டிங் – 3.5 / 5

Next Post

டீசல் - விமர்சனம் ரேட்டிங் - 3.5 / 5

Popular News

  • முன்னணி தயாரிப்பாளர் ஆர். ரவீந்திரன், டிரைடென்ட் ஆர்ட்ஸின் 22வது படத்தை சுல்தான் ஜசானி மற்றும் சேத்தன் தியோலேகர் ஆகியோரோடு இணைந்து தயாரிக்கிறார்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹைக்கூ – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

    0 shares
    Share 0 Tweet 0
  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.