ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்

by Tamil2daynews
August 19, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாகும் நிதி அகர்வால்

 

‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடிகை நிதி அகர்வால் நடிக்கிறார் என்பதனை அப்படத்தின் இயக்குநரான மாருதி, ட்வீட் செய்து உறுதிப்படுத்தி இருக்கிறார்.

திறமை மிக்க இந்த இரண்டு கலைஞர்கள் வெள்ளி திரையில் தோன்றுவதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அண்மையில் புகழ்பெற்ற இயக்குநரான மாருதி, நடிகை நிதி அகர்வாலுக்கு ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என ட்வீட்டரில் தெரிவித்தார். ஆச்சரியமான மற்றும் மகிழ்ச்சிகரமான இந்நிகழ்வால் ட்விட்டர் சமூக வலைதளம் பரபரப்பானது. பல்வேறு தரப்பினர் இது தொடர்பாக பல விசயங்களை முன் வைத்தனர். மேலும் மாருதியின் டிவிட் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. அதன் பிறகு ‘ராஜா டீலக்ஸ்’ எனும் படத்தில் நடிகை நிதி அகர்வால் கதையின் நாயகியாக நடிக்கிறார் என்றும், அவர் நட்சத்திர நடிகரான பிரபாஸுடன் திரையை பகிர்ந்து கொள்கிறார் என்றும், தெரிவித்தவுடன் ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றனர்.

கிசுகிசுக்கள்… உறுதிப்படுத்தப்படாத செய்திகள்… வதந்திகள்… என இயங்கும் திரையுலகில், வழக்கத்திற்கு மாறாக இயக்குநர் மாருதியின் டிவிட்.. புத்துணர்ச்சியூட்டும் புதிய செயலாக பார்க்கப்பட்டது. அத்துடன் அவருடைய டிவிட்டில் ‘எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள் மற்றும் விரைவில் படப்பிடிப்பு தளத்தில் உங்களை காணலாம்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். இதனால் மாருதி இயக்கத்தில் விரைவில் தயாராகவிருக்கும் மெகா திரைப்படத்தில் நிதி அகர்வாலின் ஈடுபாட்டை இந்த ட்வீட் உறுதிப்படுத்துகிறது. மேலும் ‘ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸிற்கு ஜோடியாக நடிக்கும் நடிகை யார்? என்று யூகித்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கும், அவரை பின்தொடர்பவர்களுக்கும்.. உற்சாகமிக்க இத்தகைய செய்தியினால் அவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது.‌
చేతి నిండా సినిమాలు కానీ రిలీజ్ ఎప్పుడూ.. | Heroine Nidhi Agarwal Movies With Pawan Kalyan And Prabhas Details, Nidhi Agarwal, Heroine Nidhi Agarwal, Nidhi Agarwal Movies ,pawan Kalyan ,prabhas, Raja Deluxe Movie, Hariharaகதை சொல்லும் திறமை மற்றும் நட்சத்திர நடிகர்- நடிகைகளை ஒன்றிணைப்பதில் உள்ள திறமைக்கு பெயர் பெற்ற இயக்குநரான மாருதி… நிதி அகர்வால் மற்றும் பிரபாஸை ஒன்றிணைத்து மீண்டும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு நட்சத்திரக் கலைஞர்களும் முந்தைய திரையுலக பயணங்களில் தங்களது திறமையை நிரூபித்திருப்பதால், அவர்களின் முழுமையான ஒத்துழைப்பு தரமான சினிமா அனுபவத்திற்கு உறுதியளிக்கிறது.‌

நிதி அகர்வால் தனது கவர்ச்சியான நடிப்பு மற்றும் அட்டகாசமான அழகு மூலம் புகழ்பெற்றவர். மில்லியன் கணக்கிலான மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கைவசம் வைத்திருப்பவர். பல்துறை நிபுணரான பிரபாஸுடன் அவர் ஜோடியாக நடிப்பது முன் எப்போதும் இல்லாத எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. ரசிகர்கள் இந்த செய்தியை தொடர்ந்து கொண்டாடி வருவதால், ஆற்றல் நிரம்பிய இந்த ஜோடி, திரையில் நிகழ்த்தும் மாயாஜாலத்தை காண ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த ஜோடியின் ரசாயன மாற்றத்தையும், திரையில் நிகழ்த்தும் அற்புதத்தையும் கற்பனை செய்து வருகின்றனர்.

‘ராஜா டீலக்ஸ்’ திரைப்படத்திற்கு அனைத்து இடங்களிலும் உள்ள திரைப்பட ஆர்வலர்களின் ஆர்வத்தை தூண்டியிருக்கும் மாபெரும் திரைப்படமாகும். இயக்குநர் மாருதி தலைமையில் அவர் நுட்பமாக அமைத்திருக்கும் நட்சத்திர நடிகர்களால் படம் வெற்றி பெறும் என்பதை உறுதியாக சொல்லலாம். இயக்குநர் மாருதியின் டிவிட்.. சமூக ஊடக தளங்களில் தொடர்ந்து வைரல் ஆகி வருவதால், இந்த ‘ராஜா டீலக்ஸ்’ படத்தை பற்றிய உற்சாகம் நாள்தோறும் தீவிரமடைந்து வருகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது.

இயக்குநர் மாருதியின் டிவிட்- ‘சினிமா இன்னும் கற்பனை செய்யக்கூடிய மந்திரத்தை நினைவூட்டுகிறது’. ‘ராஜா டீலக்ஸ்’ படத்தை பற்றிய புதிய தகவல்களுக்காகவும், வெளியாகவிருக்கும் புதிய பிரத்யேக காணொளிகளுக்காகவும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் இந்த திரைப்படம் பொழுதுபோக்கின் எல்லையை மறு வரையறை செய்வதற்கும், இந்திய சினிமாவில் புதிய வரையறைகளை உண்டாக்கவும் தயாராகவுள்ளது என்பது மட்டும் உறுதி.

Previous Post

“மாமன்னன்” திரைப்படத்தின் 50வது நாள் வெற்றி விழா கொண்டாட்டம் !!

Next Post

கும்பாரி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

Next Post

கும்பாரி படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

    0 shares
    Share 0 Tweet 0
  • இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

    0 shares
    Share 0 Tweet 0
  • மூன்று நண்பர்களை காதலிக்கும் நாயகியாக மேக்னா நடிக்கும் ‘நான் வேற மாதிரி’..!

    0 shares
    Share 0 Tweet 0
  • நாகேஷ் எனும் மகா கலைஞன்..!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் பாலாவின் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கு

September 20, 2023

“சீரன்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

September 20, 2023

திருவிழா போல நடைபெற்ற மன்சூர் அலிகானின் ‘சரக்கு’ இசை விழா..!

September 20, 2023

நயன்தாரா நடிப்பில் உருவாகும் மண்ணாங்கட்டி சின்ஸ் 1960

September 20, 2023
மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

மோகன்லால் நடிக்கும் ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

September 18, 2023

கே.எஸ்.ரவிக்குமார் வெளியிட்ட “பூங்கா நகரம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!

September 18, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!