• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் பரத் மோகன் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

by Tamil2daynews
April 8, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் பரத் மோகன் இயக்கத்தில் ‘இன்று நேற்று நாளை 2’

 

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் பேனரில் சி வி குமார் தயாரிப்பில் 2015ம் ஆண்டு வெளிவந்த ‘இன்று நேற்று நாளை’ அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்ற திரைப்படம் ஆகும். இதன் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘அயலான்’ வெற்றி படத்தையும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் ஒன்பது வருடங்களுக்கு பிறகு ‘இன்று நேற்று நாளை’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பு தற்போது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இன்று நேற்று நாளை 2’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
ரவிக்குமார் எழுத்தில் உருவாகும் இந்த புத்தம் புதிய, சுவாரசிய காலப்பயணத் திரைப்படத்தை பரத் மோகன் இயக்குகிறார். சி வி குமாரிடம் ‘மாயவன்’ திரைப்படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய இவர், ‘இக்லூ’ மற்றும் ‘இப்படிக்கு காதல்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

‘கஜினிகாந்த்’, ‘இப்படிக்கு காதல்’, ‘பொய்க்கால் குதிரை’ உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பல்லு ‘இன்று நேற்று நாளை 2’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். நடிகர்‍கள் மற்றும் இதர தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும்.திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் பரத் மோகன், “ஒரு புதிய கதைக்கருவோடு 2015ல் வெளியான ‘இன்று நேற்று நாளை’ மக்களை கவர்ந்து பெரிதும் பேசப்பட்டது. அதன் இரண்டாம் பாகத்தை, அதுவும் அத்திரைப்படத்தை தயாரித்த சி வி குமார் அவர்கள் தயாரிப்பிலும், இயக்குநர் ரவிக்குமார் எழுத்திலும் இயக்குவது பெரும் மகிழ்ச்சி. காலப்பயண கதையான ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படமும் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடிக்கும்,” என்று கூறினார்.

தங்கம் சினிமாஸ் எஸ் தங்கராஜ் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி வி குமார் தயாரிப்பில் இயக்குநர் ரவிக்குமார் எழுத்தில் பரத் மோகன் இயக்கத்தில் உருவாகவுள்ள ‘இன்று நேற்று நாளை 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கவுள்ளது.

Previous Post

‘டபுள் டக்கர்’ – விமர்சனம்

Next Post

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் ‘டீன்ஸ்’ டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

Next Post

இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் புதிய சாகச திரில்லர் திரைப்படம் 'டீன்ஸ்' டிரெய்லர் மற்றும் இசை புதுமையான முறையில் வெளியீடு

Popular News

  • முகேன் ராவ் நடிக்கும் ‘மைலோ’ (Milo) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜீவாவின் ‘தகப்பன்’ திரைப்படம் வரும் டிசம்பர் 24-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஹைக்கூ’ திரைப்படத்திற்கு கிடைத்து வரும் நேர்மறையான வரவேற்பால் திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் உருவாகும் புதிய தமிழ் படத்தில் இணைந்தார் ருக்மிணி வசந்த்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ஏகன் நடிப்பில் வெளியாகியுள்ள ’ஹைக்கூ’ திரைப்படத்தில் மெளனமான ஒரு கதாபாத்திரமாக இசையை கொண்டு வரும் வாய்ப்பு கிடைத்தது!” – இசையமைப்பாளர் சித்து குமார்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

‘இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிள்’ திரைப்படம் வெளியான முதல் வாரத்திலேயே மனோரமாமேக்ஸ் ஓடிடி தளத்தில் 15 மில்லியன் நிமிடங்களுக்கும் அதிகமான பார்வை நேரத்தைப் பதிவு செய்தது!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் நான் நடித்த கதாபாத்திரம் என் மனதுக்கு நெருக்கமானது” – நடிகை ஸ்ரீதேவி!

October 25, 2026

ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

October 25, 2026

யோகி பாபு நடிக்கும் ‘சிங்காரம்’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

October 25, 2026

‘ரெபெல் ஸ்டார்’ பிரபாஸ் நடிக்கும் ‘ஃபௌஜி’ படத்தின் பிரத்யேகக் காணொளி வெளியீடு!

October 25, 2026

“‘ஹைக்கூ’ திரைப்படத்தில் எனது கதாபாத்திரம் பெண்களின் ஆழமான உணர்வுகளைப் பிரதிபலிக்கிறது”- நடிகை ஃபெமினா ஜார்ஜ்!

October 25, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.