• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் !

by Tamil2daynews
March 13, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அநீதிக்கு எதிராகப் போராடும் நாய் !

 

விலங்குகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட பல படங்கள் தமிழ் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. இவ்வரிசையில் நன்றியுணர்ச்சிக்குப் பெயர் போன நாயை மையமாக வைத்து தமிழில் புதிய படத்தை இயக்குகிறார் அறிமுக இயக்குநர் நிதின் வேமுபதி. இவர் உக்ரைனில் மருத்துவப் படிப்பு முடித்தவர். சினிமா மீதுள்ள தீராக்காதலால் மருத்துவப் பணியை விட்டுவிட்டு தமிழ்நாட்டிற்கு வந்து பல குறும்படங்களை இயக்கி இப்பட வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

சமீபத்தில் வெளியாகி சக்கைக்போடு போடும் ‘மஞ்சும்மல் பாய்ஸ் ‘போல இப்படமும் கொடைக்கானல் பின்னணியில் எடுக்கப்படுகிறது. இப்படத்தில் பயிற்சி பெற்ற ஜான்சி என்ற போலீஸ் நாய் கதையின் நாயகனாக நடிக்கிறது.

திரை நட்சத்திரங்களை எடுத்துக் கொண்டால்  எஸ்.ஏ சந்திரசேகர், பாலாஜி சக்திவேல், ஒய்.ஜி மகேந்திரன், சரவண சுப்பையா, சத்யன், அயலி மதன், இந்திரஜா ரோபோ சங்கர், ஜார்ஜ் மரியான், கவிதா பாரதி மற்றும் பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் ஒளிப்பதிவை தலைக்கூத்தல் படத்தின் ஒளிப்பதிவாளரான மார்டின் டான்ராஜும், படத்தொகுப்பை பல தேசிய விருதுகளை வென்ற பி.லெனின் அவர்களும், கலையை அ.வனராஜும் மேற்கொண்டுள்ளனர்.
 பெயரிடப்படாத இப்படத்தை  “கனா புரொடக்சன்ஸ்” மூலம் தயாரிக்கிறார் டிராஃபிக் ராமசாமி படத்தின் இயக்குநர் விக்கி.
“மனிதர்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவது என்பது இயல்பு. ஒரு நாய் தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்துப் போராடுவதே இக்கதையின் சிறப்பம்சம்” என்கிறார் இப்படத்தின் இயக்குநர் நிதின் வேமுபதி.
Previous Post

மலையாள திரைப்படமான “பேரடைஸ்” டிரைலரை வெளியிட்டார் மணிரத்னம்.

Next Post

இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்

Next Post

இந்தியாவின் உள்ள எக்ஸ் தளத்தின் சிறந்த ஹேஸ்டாக்குகள் : ரெபெல் ஸ்டார் பிரபாஸிற்கு முதலிடம்

Popular News

  • டபுள் ஆக்குபன்சி படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய்யின் த.வெ.க. முதல் மாநில மாநாட்டுக்கு சைக்கிளில் செல்லும் நடிகர் சௌந்தரராஜா

    0 shares
    Share 0 Tweet 0
  • “சபரி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கடத்தல் திரைப்பட டிரெய்லர் வெளியீடு விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

June 9, 2026

சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம் சார்பில் மறைந்த தலைவர் கே.ராஜன் திருவுருவப் படத் திறப்பு மற்றும் நினைவேந்தல் கூட்டம்: தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமையில் திரையுலகினர் நெகிழ்ச்சி அஞ்சலி!

June 9, 2026

கீது மோகன் தாஸ் பிறந்தநாள் கொண்டாட்டம் : பிரத்யேக BTS காணொலியை வெளியிட்ட ‘டாக்ஸிக்’ படக்குழு

June 9, 2026

‘சிங் கீதம்’ படத்தின் முன் வெளியீட்டு விழா

June 9, 2026

‘நோவா’ படத்தில் ஆக்சன் காட்சிகளில் மிரட்டி இருக்கும் ‘பியார் பிரேமா காதல்’ புகழ் ரைசா வில்சன்

June 9, 2026

விறுவிறுப்பான படப்பிடிப்பில் வேகமாக தயாராகும் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரமின் ‘லைட் வெயிட் பேபி’

June 9, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.