• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

இன்று முதல் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘கொலை’ திரைப்படம்…

by Tamil2daynews
July 21, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

இன்று முதல் பிரம்மாண்டமாக வெளியாகும் ‘கொலை’ திரைப்படம்…

 

தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் இல்லாத நடிகர்கள் நட்சத்திர அந்தஸ்தை எட்டுவது இனிமேல் எட்டாக்கனிதான் என்ற சூழல் நிலவி வந்த காலத்தில் 2012 ஆம் ஆண்டு நான் என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் விஜய்ஆண்டனி சென்டிமென்ட், சகுனங்கள் என புரையோடிப்போன தமிழ் சினிமாவில்  பெயர் வைப்பதில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி தயாரிப்பாளராக, நடிகராக, இசையமைப்பாளராக, இயக்குநராக வெற்றிகண்டவர் விஜய்ஆண்டனி. வணிக லாபத்துக்காக படம் தயாரிக்கும் திரைப்பட துறையில் பிச்சைக்காரன், நம்பியார், சைத்தான், திமிரு புடிச்சவன், எமன், கொலைகாரன், இந்தியா பாகிஸ்தான் என எதிர்மறையான பெயர்களை படத்திற்கு சூட்டி மே 19 அன்று வெளியான பிச்சைகாரன் – 2 தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் குறுகிய நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் வசூலில் சாதனை நிகழ்த்தியதன் மூலம்தென்னிந்திய சினிமாவில் 100 கோடி ரூபாய் வியாபார நடிகராக வளர்ந்திருக்கும் நட்சத்திர நடிகர் விஜய்ஆண்டனி நடிப்பில் நாளை வெளிவர இருக்கும் படம் கொலை க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் விஜய் ஆண்டனி, டிடெக்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை ‘விடியும் முன்’ படத்தின் இயக்குனர் பாலாஜிகுமார் இயக்கியுள்ளார்.”
Vijay Antony's 'Kolai' gets a release date - The Hinduஅவருடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பற்றி நடிகர் விஜய் ஆண்டனி கூறுகிறபோது “தனிப்பட்ட முறையில், நான் சிறுவயதிலிருந்தே மர்டர்-மிஸ்டரி த்ரில்லர்களின் சிறந்த ரசிகன். சந்தேகத்திற்கு இடமின்றி இது உலகளாவிய ரசிகர்களைக் கொண்ட ஜானர். பாலாஜி  குமார் ஸ்கிரிப்டை விவரித்தபோது கதைக்களம் மற்றும் என் கதாபாத்திரம் இரண்டுமே மிகவும் தீவிரமாக இருந்ததை உணர்ந்தேன். ஒவ்வொரு நடிகரும் தனது சினிமா வாழ்க்கையில ஒருமுறையாவது இதுபோன்ற கேரக்டரில் நடிக்க விரும்புவார்கள். அது போன்ற இந்த வாய்ப்பை ’கொலை’ வழங்கியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இது தனக்குள்ளேயே உள்ள குழப்பமான சவால்களை எதிர்த்துப் போராட வேண்டிய மற்றும் மர்மத்தை உடைக்க வேண்டிய ஒரு கதாபாத்திரம் என்று நான் சொல்வேன். அதுமட்டுமின்றி, படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் அதிக முக்கியத்துவம் உள்ளது.
தனது சக நடிகர்களுடன் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட விஜய் ஆண்டனி மேலும் கூறுகையில், “இந்தப் படத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் மிகத் திறமையானவர்கள். முதல் படத்திலேயே தனது திறமையை நிரூபித்த நடிகை ரித்திகா சிங், அடுத்தடுத்த தனது படங்களில் நடிப்பின் புதிய பரிமாணங்களை நிரூபிக்க ஆர்வம் காட்டி வருகிறார். இந்தப் படத்திலும் சிறப்பாக நடித்துள்ளார். இந்தப் படம் வெளியான பிறகு மீனாட்சி சவுத்ரிக்கு அதிக ரசிகர் பட்டாளம் இருக்கும் என்று நான் நம்புகிறேன். ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா ஷங்கர் என அனைவரும் ‘கொலை’யை தங்களது நடிப்பால் பிரமாதப்படுத்தியிருக்கிறார்கள்”.
Kolai sneak peek vijay antony ritika singh balaji k kumar girishh gopalakrishnan‘கொலை’ திரைப்படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் வருமா? என்ற கேள்விக்கு, “’கொலை’யின் உலகம் இன்னும் பல பாகங்களுடன் விரிவடைவதைக் காண நான் ஆர்வமாக உள்ளேன். எங்கள் தயாரிப்பாளர்கள் ஏற்கனவே இந்த யோசனையை தெரிவித்துள்ளனர். விரைவில் இது குறித்து வரும் காலத்தில் அறிவிப்போம்”  என்றார்.
’கொலை’ திரைப்படத்தை இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த மிஸ்ட்ரி திரில்லர் கதைக்கு கிரீஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்திருக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விடியும் முன் படத்தை இயக்கியபாலாஜி குமார் எழுதி இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் ரித்திகா சிங் தவிர, ராதிகா சரத்குமார், முரளி சர்மா, சித்தார்த்தா சங்கர், அர்ஜுன் சிதம்பரம் மற்றும் பலர் நடித்துள்ளனர். ’கொலை’ திரைப்படத்தைசக்தி ஃபிலிம் ஃபேக்டரி தமிழ்நாடு முழுவதும் 300 திரைகளில் வெளியிடுகிறது. தமிழ்நாட்டை போன்றே தெலுங்கில் விஜய்ஆண்டனிக்கு ரசிகர் வட்டம் உருவாகியுள்ளது பிச்சைக்காரன், பிச்சைக்காரன் – 2 தமிழ்நாட்டுக்கு இணையாக பாக்ஸ்ஆபீசில் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது அதனால் 300க்கும் மேற்பட்ட திரைகளில்
ஆந்திரா – தெலங்கானா மாநிலத்தில் வெளியாகிறது.
கர்நாடகா மாநிலத்தில்75 திரைகளிலும்
கேரள மாநிலத்தில் – 60 திரைகளிலும்
வட இந்திய மாநிலங்களில் – 35 திரைகளிலும்
வெளிநாடுகளில் – 250 திரைகளும்ஆக மொத்தம்1020 திரைகளில் உலகம் முழுவதும் கொலை படம் வெளியாகிறது
Tags: kolaikolai moviekolai movie tamilkolai tamil movieRitika Singhritika singh tamil moviesritka singh tamil moviestamil moviesVijay Antonyvijay antony kolai movievijay antony tamil movies
Previous Post

‘கொலை’ படத்தின் உயிர் நாடியே இவர்கள்தான்..!

Next Post

சத்திய சோதனை- விமர்சனம்

Next Post

சத்திய சோதனை- விமர்சனம்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.