‘கொலை’ படத்தின் உயிர் நாடியே இவர்கள்தான்..!
பாலாஜி குமார் இயக்கத்தில் இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் & லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘கொலை’. ஜூலை 21ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, நடிகை ரித்திகா சிங், நடிகை மீனாட்சி செளத்ரி உள்ளிட்டப் பலரும் நடித்துள்ளனர். .
படத்தின் இணைத் தயாரிப்பாளரும் நடிகருமான சித்தார்த்த சங்கர் பேசியதாவது,
“லோட்டஸ் பிக்சர்ஸ் சார்பாக நான் பேச வந்துள்ளேன். எங்களுக்கு இதுநாள் வரை ஊடக நண்பர்கள் கொடுத்து வந்த ஆதரவுக்கு நன்றி. ’சார்பாட்டா’ படத்தில் ஆர்யா மாஸ் செய்துள்ளார். இதன் இரண்டாம் பாகத்திற்கு நாங்கள் காத்திருக்கிறோம். ’கொலை’ படக்குழுவினருக்கு நன்றி! விஜய் ஆண்டனி சார்தான் என்னை ‘சைத்தான்’ படம் மூலம் நடிகராக அறிமுகப்படுத்தினார். இப்போது மீண்டும் ‘கொலை’ மூலம் அவருடன் இணைந்திருக்கிறேன். நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இந்தப் படத்தில் இருப்பது எனக்கு பெருமை”
இயக்குநர் பாலாஜி குமார்,
“விஜய் ஆண்டனி இல்லாமல் இந்தப் படம் கிடையாது. அவர்தான் கதை மீது நம்பிக்கை வைத்து தயாரிப்பாளர்களை கன்வின்ஸ் செய்தார். படத்தில் ப்ளாஷ்பேக் அதற்குள் ப்ளாஷ்பேக் என பார்வையாளர்களின் கவனத்தைக் கோரும் படம் இது. நம் ஊரின் வளம் அனைவருக்கும் தெரியும்படி இதில் கொண்டு வந்திருக்கிறேன். ஒளிப்பதிவு, இசை என அனைத்து தொழில்நுட்ப விஷயங்களையும் படத்திற்காக அற்புதமாக செய்திருக்கிறார்கள். விஜய் ஆண்டனியிடம் இயல்பாகவே ஒரு குறும்பு உள்ளது. அதையும் கொண்டு வர வேண்டும், அதே சமயத்தில் அவர் கொஞ்சம் சீரியஸாகவும், வயதான தோற்றத்திலும் இருக்க வேண்டும். அதை சிறப்பாக செய்திருக்கிறார். நடிகை மீனாட்சியும் சிறப்பாக நடித்துள்ளார். ரித்திகா, அர்ஜூன் சிதம்பரம் என மற்ற நடிகர்களும் நன்றாக நடித்துள்ளனர். பார்த்துவிட்டு உங்கள் ஆதரவைக் கொடுங்கள்”.என்று அன்போடு வேண்டுகோள் வைத்தார்…