ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

by Tamil2daynews
February 2, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின்  “தசரா” திரைப்பட டீசர் !!

 

இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர், துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர்,  நேச்சுரல் ஸ்டார் நானி, ஸ்ரீகாந்த் ஒதெலா, சுதாகர் செருகுரி, SLV சினிமாஸின் “தசரா” படத்தின்  ரத்தமும் சதையுமான அதிரடி   டீசரை வெளியிட்டனர்
உலகின் மக்கள் அனைவரும் எளிதில் உணர்ந்துகொள்ளும் வகையிலான உணர்வுகளைப் பேசும் படம் மொழிகளைக் கடந்து ஜெயிக்கிறது. உணர்வுகளை ஆழமாகப் பேசும் மண் சார்ந்த திரைப்படமானது எளிதில் புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும்போது அது அனைத்திந்தியர்களுக்கான படமாக மாறிவிடுகிறது. நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி வரும் “தசரா” அதை உறுதி செய்வதாக அமைந்துள்ளது. ரத்தமும் சதையுமாக ஒரு மண் சார்ந்த வாழ்வைக் காட்டும் தசரா படத்தின் டீசரை,  இந்தியத் திரை பிரபலங்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, தனுஷ், ஷாஹித் கபூர்,  துல்கர் சல்மான், ரக்ஷித் ஷெட்டி ஆகியோர் வெளியிட்டனர்.
தீமைக்கு எதிரான நன்மையின் வெற்றியைக் குறிக்கும்  தசரா திருவிழா, இந்தியா முழுவதும் மிகவும் மகிழ்ச்சியுடனும் ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.  இந்த  கொண்டாட்டங்களில் ராவணன் உருவ பொம்மைகளை எரிப்பது ஒரு பகுதி. இந்த  தசரா திரைப்படம் தீமைக்கெதிரான நன்மையின் வெற்றியை சித்தரிக்கும். இந்தியாவெங்குமுள்ள அனைத்து பார்வையாளர்களையும் கவரும் வகையில் அசத்தலாக இருக்கிறது தசரா டிரெய்லர்.
நடிகர்களின் முழுமையான மாற்றம் மற்றும் நிலக்கரி சுரங்கங்களில் பணிபுரியும் மக்களின் உலகத்தை,  அவர்கள் பின்பற்றும் பழக்கவழக்கங்களைக் காட்டுவது என, தசரா  டீஸர் ஒரு புதிய அனுபவத்தை வழங்குகிறது. முதல் பிரேமில் தரணி (நானி) ஒரு பெரிய ராவணன் சிலைக்கு முன்னால் நிற்பது  காட்டப்படுகிறது. தெலுங்கானாவின் கோதாவரிக்கானி சுற்றுப்புறத்தில் அமைந்துள்ள வீரலப்பள்ளி கிராமத்தில் நடக்கும் கதை.  சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தில் உள்ள மக்கள் கஷ்டத்தை மறக்க  மது அருந்துவது வழக்கம். அந்த மக்களின் வாழ்க்கை வண்ணமயமாக இல்லை. அங்கு வாழும் தரணியின் உலகம் மிகவும் காட்டுத்தனமானது. சில தீய சக்திகள் கிராமத்தில் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் போது தரணியின் கோபம் பொங்கி எழுகிறது.
இந்தப் படம் நடிகர் நானியின் படமட்டுமல்ல,  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒதெலாவின் கனவுப்படைப்பு.  இருவருமாக இணைந்து ஒரு பிரம்மாண்டமான படைப்பை நமக்குத் தந்துள்ளார்கள். ஸ்ரீகாந்த் ஒதெலாவின் உருவாக்கம்  ஒரு அறிமுக இயக்குநரைப் போல் இல்லை. காட்சி மற்றும் கதை சொல்லும் பாணி  கதாநாயகன் மற்றும் எதிரிகள் பங்குபெறும் ஆக்சன் காட்சிகள் அனைத்தும் மிரட்டலாக உள்ளது. ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தலாக முன்னெப்போதும் பார்த்திராத அனுபவத்தைத் தருகிறது
டீஸர் உண்மையில் ஒரு புதிய உலகைக் காட்டுகிறது.  நானியின் வெறித்தனத்தனமான தோற்றம், அவருடைய குணாதிசயம்,  பேச்சு, பாவனை, உடல்மொழி நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது. நானி கத்தியின் குறுக்கே விரலை வைத்து நெற்றியில் ரத்தம் பூசுவது அவரது கலக மனப்பான்மையைக் காட்டுகிறது.  ஷைன் டாம் சாக்கோவும் சாய் குமாரும் நெகட்டிவ் வேடங்களில் தோன்றியுள்ளனர்.
ஒளிப்பதிவாளர் சத்யன் சூரியன் ISC யின் தலைசிறந்த ஒளிப்பதிவில், சிங்கரேணி நிலக்கரிச் சுரங்கத்தின் நிலத்திற்குள் நாமே நுழைந்தது போல் உள்ளது.  ரகிதா ரகிதாவின் ஒலி அமைப்புடன், சந்தோஷ் நாராயணனின் துடிப்பான பின்னணி இசை காட்சிகளை வேறொரு நிலைக்கு உயர்த்துகிறது. எடிட்டர் நவின் நூலி உடைய டீஸர் கட் சிறப்பாக உள்ளது.  SLV சினிமாஸின் பிரமாண்ட தயாரிப்பு நம்மை மிரளச் செய்கிறது. படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக அவினாஷ் கொல்லா, நிர்வாக தயாரிப்பாளராக விஜய் சாகந்தி பணியாற்றுகின்றனர்.
இந்த டீசர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை வானளாவ உயர்த்துகிறது.
“தசரா” திரைப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 மார்ச் 2023 வெளியாகிறது.
நடிகர்கள் : நானி, கீர்த்தி சுரேஷ், சமுத்திரகனி, சாய் குமார், ஜரீனா வஹாப் மற்றும் பலர்.
தொழில்நுட்பக் குழு:
இயக்கம் – ஸ்ரீகாந்த் ஒதெலா
தயாரிப்பு –  சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் – ஸ்ரீ லக்‌ஷ்மி  வெங்கடேஸ்வரா சினிமாஸ்
ஒளிப்பதிவு –  சத்யன் சூரியன் ISC
இசை – சந்தோஷ் நாராயணன்
எடிட்டர் – நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் – அவினாஷ் கொல்லா
நிர்வாகத் தயாரிப்பாளர் – விஜய் சாகந்தி
சண்டைப்பயிற்சி – அன்பறிவு
மக்கள் தொடர்பு –  சதீஷ்குமார் – சிவா (AIM)
Previous Post

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

Next Post

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Next Post

'மைக்கேல்' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

Popular News

  • செங்களம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • அப்புக்குட்டிக்கு மீண்டும் தேசிய விருது கிடைக்கும் என்கிறார் “சூரியனும் சூரியகாந்தியும்” படத்தை இயக்கியுள்ள இயக்குனர் ஏ.எல்.ராஜா.

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய், பிரபு தேவா இவர்களை விட, டாஸ்மாக் முன்பு குடிமகன் ஆடுகிறான்! –இயக்குனர் பேரரசு

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏப்ரல் மாதம் வெளியாகும் ” ரஜினி ” படம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

செங்களம் – விமர்சனம்

March 25, 2023

N4 – விமர்சனம்

March 25, 2023

பருந்தாகுது ஊர்க்குருவி – விமர்சனம்

March 25, 2023

ஆனந்த விகடன் விருதுகளை அள்ளிய “பொன்னியின் செல்வன்” திரைப்படம் !!

March 25, 2023

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளம், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸாக ‘லேபிள்’ தொடரை அறிவித்துள்ளது!!

March 25, 2023

வீரப்பனின் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கும் மாவீரன் பிள்ளை பட இசை வெளியீட்டு விழா ஹைலைட்ஸ்

March 25, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!