• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல் “மனசிலாயோ” வெளியானது!

by Tamil2daynews
September 12, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும்  ‘வேட்டையன்’ படத்தின் முதல் பாடல்  “மனசிலாயோ”  வெளியானது!

 

லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைப்படமான ‘வேட்டையன்’ படத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட முதல் பாடலானது வெளியாகியுள்ளது, மேலும் இது ரசிகர்கள் மற்றும் இசை ஆர்வலர்களிடையே உற்சாகத்தை அதிகரித்துள்ளது. “மனசிலாயோ” என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் பாடல், ஆற்றல்மிக்க தாளங்கள் மற்றும் ஆத்மார்த்தமான மெல்லிசைகளின்  கலவையாக மட்டுமல்லாமல், இது படத்தின் கருப்பொருள்களான வலிமை, உறுதிநிலை மற்றும் அதிரடியான காட்சிகள் ஆகியவற்றின் சாரத்தை முழுமையாகப் படம் பிடிக்கிறது.

சமகால மற்றும் பாரம்பரிய தமிழ் மற்றும் மலையாள இசையில் வேரூன்றிய ஒரு இசையமைப்பை உருவாக்கியுள்ளார் இசையமைப்பாளர் அனிருத், மேலும் இது இளைய தலைமுறை மற்றும் பாரம்பரிய இசை பிரியர்களுக்கு ஒரு விருந்தாக அமைகிறது. இந்தப் பாடலானது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகழ்பெற்ற பாடகர் ‘மலேசியா’ வாசுதேவனின் சக்திவாய்ந்த குரலால் உருவாக்கப் பட்டுள்ளது, மேலும் அவரது குரலுடன் யுகேந்திரன் மற்றும் தீப்தி சுரேஷ் ஆகியோரின் குரல்கள் ‘சூப்பர்’ சுப்பு மற்றும் விஷ்ணு எடவன் ஆகியோரது வரிகளுக்கு உயிரூட்டியுள்ளது.
Imageஇந்த முதல் பாடல் சமூக ஊடகங்களில் வெளியாகி  ஏற்கனவே நேர்மறையான ஆதரவை பெற்றுள்ளது, ரசிகர்கள் பாடலின் உற்சாகமூட்டும் தாளத்தையும் கலைஞர்களின் கிளர்ச்சியூட்டும் பாட்டு திறனையும் பாராட்டியுள்ளனர். வெளியான சில மணி நேரங்களிலேயே, இந்த பாடல் தரவரிசையில் உயர்ந்ததோடு மட்டுமல்லாமல் பல்வேறு தளங்களில் பிரபலமடைந்து வருகிறது.

த.செ. ஞானவேல் இயக்கத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் கதாநாயகனாக நடிக்கும் ‘வேட்டையன்’ அதிரடியான காட்சிகள் நிறைந்த சமூகக் கருத்துள்ள திரைப்படம் ஆகும். மேலும் தனித்துவமான ஒலிக்கலவையானது உயர்தரமான அதிரடி காட்சிகள், உணர்ச்சிமிக்க மற்றும் பிரம்மிக்க வைக்கும் காட்சிகளின் தொகுப்பை வழங்கவுள்ளதாக படம் உறுதியளிக்கிறது. இத்திரைப்படத்தில் பிரமிப்பூட்டும் வகையில் பாலிவுட் ‘மெகா ஸ்டார்’ அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன், ரோகிணி மற்றும் அபிராமி உள்ளிட்ட  நட்சத்திர பட்டாளமே முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அக்டோபர் 10,2024 அன்று வெளியிட திட்டமிடப்பட்டுள்ள இப்படத்தின்  எதிர்பார்ப்பை இந்த முதல் பாடல் அதிகரிக்கும் என்று ‘வேட்டையன்’ குழு  நம்புகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள இத்திரைப்படம் பான்-இந்தியா சினிமா அனுபவத்தை அளிக்கும் என படக்குழு உறுதியளிக்கிறது.

நடிகர்கள் :-
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த்,அமிதாப் பச்சன்,மஞ்சு வாரியர்,ஃபஹத் பாசில்,ராணா டகுபதி,ரோகிணி,அபிராமி,ரித்திகா சிங்,துஷாரா விஜயன்

படக்குழு :-
தயாரிப்பு நிறுவனம் : லைகா புரொடக்ஷன்ஸ்
தயாரிப்பாளர் : சுபாஸ்கரன்
நிர்வாகத் தலைமை(லைகா புரொடக்ஷன்ஸ்) : ஜி கே எம் தமிழ்குமரன்
இயக்கம் :  த.செ.ஞானவேல்
இசை :  அனிருத் ரவிச்சந்தர்
ஒளிப்பதிவு : எஸ். ஆர். கதிர்
படத்தொகுப்பு : பிலோமின் ராஜ்
கலை இயக்கம் : கே. கதிர்
சண்டைப் பயிற்சி : அன்பறிவ்
நடன இயக்கம் : தினேஷ்
கிரியேட்டிவ் இயக்குனர் : பி கிருத்திகா
ஒப்பனை: பானு, பட்டணம் ரஷீத்
ஆடை வடிவமைப்பு : அனு வர்தன், தினேஷ் மனோகரன்
மக்கள் தொடர்பு : ரியாஸ் K அஹ்மத்
Previous Post

நடிகை சங்கீதா கல்யாண் குமார், வெளிவரவிருக்கும் ‘பராரி’ படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளார்!

Next Post

சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸா’க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோத்தா’ மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும் ஷபீர் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Next Post

சார்பட்டா பரம்பரை' படத்தில் 'டான்ஸிங் ரோஸா'க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் 'கிங் ஆஃப் கோத்தா' மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும் ஷபீர் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

Popular News

  • முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • கேன்ஸ் திரைவிழாவில் மிரட்டிய “தாழ் திறவா” – திகில் கிளப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • நண்பன் அழைத்து வராமல் இருக்க முடியுமா? – அதிரடி பட விழாவில் சஞ்சு சாம்சன்..!!

    0 shares
    Share 0 Tweet 0
  • வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் (Vels Film International) தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கும் புதிய படம் கோலகல ஆரம்பம் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ZEE5 ஒரிஜினல் சீரிஸ் வழங்கும், பிரசாந்த் பாண்டியராஜ் நடிக்கும் “வாரண்ட்” சீரிஸ் டிரெய்லர் அறிமுக விழா !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜி.டி. நாயுடு வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நடிகர் மாதவன் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது!

May 24, 2026

நடிகர் மோகன்லாலின் திரைப்பயணத்தை கொண்டாடும் விதமாக, ஜியோஹாட்ஸ்டார் ‘மோகன்லால் – தி கம்ப்ளீட் ஆக்டர்’ திரைப்பட விழாவில் 115 கல்ட் கிளாசிக்ஸ் மற்றும் பிளாக்பஸ்டர் படங்களை ஸ்ட்ரீம் செய்து கொண்டாடுகிறது!

May 24, 2026

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், ஒய் ஜீ எம்-ன் ‘சாருகேசி’ படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோவை வெளியிட்டார்

May 24, 2026

முன்னணி நடிகர் கௌதம் கார்த்திக் வெளியிட்ட ‘பாதாம்கீர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் போஸ்டர் !!

May 24, 2026

நடிகர் சத்ய தேவ் நடிக்கும் ‘சமவர்த்தி’ படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

May 24, 2026

மெகா ஸ்டார்’ சிரஞ்சீவி நடிக்கும் #Chiru158 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்குகிறது

May 24, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.