• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘என்டிஆர் நீல்’ பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது!

by Tamil2daynews
August 11, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘என்டிஆர் நீல்’ பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது!

 

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக ‘என்டிஆர்நீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2024 தொடங்கி இருப்பதால், என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.
ரசிகர்களை குஷிப்படுதுத்தும் வகையில், இந்தப் படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என வெளியீட்டுத் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.பிளாக்பஸ்டர் ஹிட்களுக்கு பெயர் போன இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது தனித்துவமான மாஸ் விஷன் மூலம் என்டிஆரின் திரை இருப்பை புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல இருக்கிறார். இது நிச்சயம் திரைத்துறையில் புதிய அலையை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இப்படத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்டத்தை போலவே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் பேனரின் கீழ் கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி மற்றும் ஹரி கிருஷ்ணா கொசராஜு ஆகியோர் தயாரிக்கின்றனர். புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சலபதி நிர்வகிப்பார்.

நடிகர்கள்: மாஸ் நாயகன் என்.டி.ஆர்.

தொழில்நுட்ப குழு:
தயாரிப்பு வடிவமைப்பு – சலபதி,
ஒளிப்பதிவு- புவன் கவுடா,
இசை – ரவி பஸ்ரூர்,
தயாரிப்பாளர்கள் – கல்யாண் ராம் நந்தமுரி, நவீன் யெர்னேனி, ரவிசங்கர் யலமஞ்சிலி, ஹரி கிருஷ்ணா கொசராஜு
எழுத்து, இயக்கம் – பிரசாந்த் நீல்

Previous Post

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து டெரிஃபிக் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அறிமுகப்படுத்தியுள்ளார்!

Next Post

’பேச்சி’ படத்தின் இரண்டாம் பாகம்! – தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட்

Next Post

’பேச்சி’ படத்தின் இரண்டாம் பாகம்! - தயாரிப்பாளர் கோகுல் பினாய் கொடுத்த அப்டேட்

Popular News

  • தொடரும் – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • ’மையல்’ திரைப்படத்தின் ஆடியோ மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!

    0 shares
    Share 0 Tweet 0
  • பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • “நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா”

    0 shares
    Share 0 Tweet 0
  • “நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

ஜோரா கைய தட்டுங்க பட டிரெய்லர் வெளியீட்டு விழா !!

May 11, 2025

ZEE5-இன் “அய்யனா மானே” சீரிஸ், 5 கோடி ஸ்ட்ரீமிங் நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது !

May 11, 2025

சந்தானம் நடிக்கும் ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ படத்தின் வெளியீட்டிற்கு முன் நிகழ்வு

May 11, 2025

“நடிகர் சூரி நடிக்கும் ‘மாமன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா”

May 11, 2025

‘காந்தா’ படத்தில் நடிகை பாக்யஸ்ரீ போர்சேவின் வசீகரிக்கும் கதாபாத்திரத் தோற்றம் வெளியாகியுள்ளது!

May 11, 2025

“நடிப்புக்குத் தீனி போடும் கதைகள் நடிக்கவே விருப்பம்” – நடிகை பிரியா பிரகாஷ் வாரியர்!

May 11, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.