• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து டெரிஃபிக் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அறிமுகப்படுத்தியுள்ளார்!

by Tamil2daynews
August 10, 2024
in சினிமா செய்திகள்
0
நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து டெரிஃபிக் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அறிமுகப்படுத்தியுள்ளார்!
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து டெரிஃபிக் வில்லன் ஆரவ்வின் மைக்கேல் கதாபாத்திரத்தை இயக்குநர் மகிழ் திருமேனி அறிமுகப்படுத்தியுள்ளார்!

 

நடிகர் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தில் இருந்து இன்று (ஆகஸ்ட் 9) நடிகர் ஆரவ்வின் கேரக்டர் லுக்கை படக்குழு வெளியிட்டுள்ளது. அவரது ஸ்டைலான தோற்றம் ரசிகர்கள் மத்தியில் அவரது பாத்திரம் எப்படியானதாக இருக்கும் என்ற ஆர்வத்தினை உருவாக்கியுள்ளது. நடிகர் அஜித் குமாரின் திரைப்படங்களில் பொதுவாக அனைத்து நடிகர்களுக்கும் குறிப்பாக வில்லன்களுக்கு வலுவான கதாபாத்திரம் இருக்கும். மகிழ் திருமேனி இயக்கத்தில், லைகா புரொடக்‌ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் அஜித் குமார் கதாநாயகனாக நடித்திருக்க, படக்குழுவினர் மற்ற நடிகர்களின் கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி வருகின்றனர்.
இந்த படத்தில் ஆரவ் கதாபாத்திரம் நல்லவரா கெட்டவரா என்பது பற்றி இயக்குநர் மகிழ் திருமேனி கூறியிருப்பதாவது, “பல கதைகளுடனும் திருப்பங்களுடனும் வரும் வில்லன் மைக்கேல் நிச்சயம் உங்கள் கவனத்தைக் கவர்வான். ‘மைக்கேல்’ கதாபாத்திரத்தை நான் உருவாக்கி முடித்ததும், இந்தியத் துறையில் பல பெரிய நடிகர்களின் பெயர்கள் தோன்றிக்கொண்டே இருந்தன. ஆனால், ஆரவ்வின் திறமை பக்கம் என் மனம் சாய்ந்தது. ‘கலகத்தலைவன்’ படத்தின் போதே அவரது அர்ப்பணிப்பை நான் பார்த்திருக்கிறேன். அந்த விஷயம்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரை தேர்வு செய்ய வைத்தது. ஆரவ்வின் பெயரை அஜித் சாரிடம் நான் சொன்னபோது, இயக்குநரின் தேர்வில் தலையிடுவதில்லை என்று சொல்லி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். என்னுடைய சாய்ஸ் சரியானது என்று ஆரவ்வும் நிரூபித்து இருக்கிறார். சில ஷெட்யூல் முடித்த பிறகு அஜித் சாரும் ஆரவ் மீது தன் திருப்தியை வெளிப்படுத்தினார்” என்றார்.’விடாமுயற்சி’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து முடிந்துள்ளது. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

த்ரிஷா கதாநாயகியாக நடிக்க, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் வில்லனாக நடிக்கிறார். மற்ற நட்சத்திர நடிகர்கள் ஆரவ், ரெஜினா கசாண்ட்ரா, நிகில், ரவி ராகவேந்திரா, சஞ்சய், தஸ்ரதி, ரம்யா, காசிம், ஜவன்ஷிர், ரஷாத் சஃபராலியேவ், விதாதி ஹசனோவ், துரல் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சன் டிவி சாட்டிலைட் உரிமையைப் பெற்றுள்ளது மற்றும் நெட்ஃபிலிக்ஸ் அஜித் குமாரின் ‘விடாமுயற்சி’ படத்தின் திரையரங்குக்கு பிந்தைய ஓடிடி உரிமையைப் பெற்றுள்ளது.

தொழில்நுட்ப குழு:
இயக்குநர் – மகிழ் திருமேனி,
இசை – அனிருத்,
ஒளிப்பதிவு – ஓம் பிரகாஷ்,
எடிட்டர் – என்.பி.ஸ்ரீகாந்த்,
கலை இயக்குநர் – மிலன்,
ஸ்டண்ட் மாஸ்டர் – சுப்ரீம் சுந்தர்,
ஆடை வடிவமைப்பாளர் – அனு வர்தன்,
நிர்வாகத் தயாரிப்பாளர் -சுப்ரமணியன் நாராயணன்,
தயாரிப்பு நிர்வாகி – ஜே கிரிநாதன் / ஜே ஜெயசீலன்,
ஸ்டில்ஸ் – ஜி. ஆனந்த் குமார்,
விளம்பர வடிவமைப்பாளர் – கோபி பிரசன்னா,
விஎஃப்எக்ஸ்- ஹரிஹரசுதன்,
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா,
ஹெட் ஆஃப் லைகா புரொடக்ஷன்ஸ் – ஜிகேஎம் தமிழ் குமரன்,
தயாரிப்பாளர் – சுபாஸ்கரன்

Previous Post

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட சீனு ராமசாமியின் ‘நினைவில் ஒளிரும் ஜிமிக்கி கம்மல்’

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் ‘என்டிஆர் நீல்’ பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது!

Next Post

மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிப்பில், மாஸ் நடிகர் என்டிஆர், பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் அடுத்து இணையும் ஆக்‌ஷன் திரைப்படம் 'என்டிஆர் நீல்' பிரம்மாண்ட பூஜையுடன் தொடங்கப்பட்டது!

Popular News

  • ரூம்பாய் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • கேரளா நிலச்சரிவு நிவாரண பணிகளுக்கு உதவிய ஜோதிகா, கார்த்தி, சூர்யா

    0 shares
    Share 0 Tweet 0
  • “பூக்கி” – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் சூரி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி இணையும், புதிய படத்திற்கு “மாமன்” எனப் பெயரிடப்பட்டுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • மீண்டும் காதல் கதையில் சித்தார்த் நடிக்கும் “மிஸ் யூ”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

சென்னை ரசிகர்களை உற்சாகப்படுத்த வரும் பாடகர்கள் வேடன், அறிவு, அசல் கோலார்

April 17, 2026

ரூம்பாய் – விமர்சனம்

April 17, 2026

துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” ( I Am Game ) – படப்பிடிப்பு நிறைவு, ஆகஸ்ட் 2026 உலகமெங்கும் வெளியாகிறது !!

April 17, 2026

மிஸ்டர் எக்ஸ் – விமர்சனம்

April 17, 2026

“கான் சிட்டி” முதல் சிங்கிள் வெளியீடு…, வைரலாகும் கொரியன் ஃபேமிலி சாங் “ரா ரா ரங்கையா” குத்துப்பாடல்!

April 17, 2026

சீயான் பிறந்தநாள் கொண்டாட்டமாக அறிவிக்கப்பட்ட “சீயான் 63” புதிய படம் !!

April 17, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.