ராகுல் மூவி மேக்கர்ஸ் (ராகுல் தேவா) மற்றும் அபிமன்யு கிரியேஷன்ஸ் (பிரசாத் ராமசந்திரன்) இணைந்து தயாரித்துள்ள சுயாதீன படம் “மாயக்கூத்து”.
சமூகத்தில் படைப்பாளிகளின் பொறுப்புணர்வை சுட்டிக்காட்டும் இப்படம் ஒரு கற்பனை கலந்த திரில்லர் வடிவில் உருவாகியுள்ளது. மேலும், இப்படம் சீரான பொருட்செலவில் நேர்த்தியாகவும் தரமாகவும் படைக்கப்பட்டுள்ளது. படத்தின் அனைத்து தயாரிப்பு வேலைகளும் முடிந்து, இப்போது வெளியீட்டுக்கான பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இப்படத்தில் முன்னணி நடிகர்களான டெல்லி கணேஷ், மு ராமசாமி மற்றும் சாய் தீனா அவர்களுடன், முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் நாகராஜன் மற்றும் பல வளரும் நடிகர்களான பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் ரேகா நடித்திருக்கின்றனர்.
கேப்டன் மில்லர், டான் மற்றும் சாணி காயிதம் படங்களின் படத்தொகுப்பாளரான நாகூரன் ராமசந்திரன் இந்த படத்தின் படத்தொகுப்பினைச் செய்துள்ளார்.
இப்படத்திற்கு கயமை கடக்க, சூப்பர் டூப்பர் மற்றும் நீத்தோ படங்களின் ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.