• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்!

by Tamil2daynews
November 11, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் சிறப்புப் பாடலில் நடிகை ஸ்ரீலீலா நடனமாடுகிறார்!

 

மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘புஷ்பா 2’ படத்தில் இடம்பெறும் சிறப்பு பாடலில் தென்னிந்தியாவின் சென்சேஷனல் நடிகை ஸ்ரீலீலா நடனமாட இருக்கிறார். பிளாக்பஸ்டர் படமான ‘புஷ்பா: தி ரைஸ்’ஸின் தொடர்ச்சியான ‘புஷ்பா2: தி ரூல்’ படத்தில் தேசிய விருது வென்ற நடிகர் அல்லு அர்ஜுன் சந்தன கடத்தல்காரர் புஷ்பா ராஜாகவும் மற்றும் அவரது மனைவியாக நடிகை ராஷ்மிகா மந்தனா, ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். இதில் நடிகை ஸ்ரீலீலா சிறப்புப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை அதிகமாக்கியுள்ளது.
Imageஇந்த செய்தியை படக்குழு அற்புதமான போஸ்டருடன் ரசிகர்களுக்கு அறிவித்துள்ளது.

‘புஷ்பா: தி ரைஸ்’ படத்தில் இடம்பெற்ற ‘ஊ அண்டாவா’ பாடல் உலகளவில் மிகவும் பிரபலமான பாடல்களில் ஒன்றாக மாறியுள்ளது. இப்போது, ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தென்னிந்தியாவின் நடன ராணியான ஸ்ரீலீலாவுடன் இணைந்து மீண்டும் ஒரு ஹிட் பாடலைக் கொடுக்க உள்ளார். இந்த ஆண்டின் மிகப்பெரிய படத்தில் ஒரு சிறப்புப் பாடலுக்கு நடனமாட ஸ்ரீலீலா பொருத்தமானவர். மேலும், டிரெய்லர் அறிவிப்பு விரைவில் வரவிருக்கும் நிலையில், சிறப்புப் பாடல் குறித்த இந்த லேட்டஸ்ட் அப்டேட் ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலுக்கு கணேஷ் ஆச்சார்யா கோரியோகிராஃப் செய்துள்ளார்.

சமீபத்திய படங்களில் தனது திறமையான நடிப்பு மற்றும் நடனத்தால் கவனம் ஈர்த்து வரும் ஸ்ரீலீலா ‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் நடனமாட இருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்.

‘புஷ்பா 2: தி ரூல்’ படத்தில் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பகத் பாசில் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ‘புஷ்பா 2: தி ரூல்’ படம் உலகம் முழுவதும் டிசம்பர் 5, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்த இப்படத்தின் இசை உரிமையை டி சீரிஸ் கைப்பற்றியுள்ளது.

Previous Post

அல்லு அரவிந்த் வழங்கும் – நாக சைதன்யா, சாய் பல்லவி, சந்து மொண்டேடி, பன்னி வாஸ், கீதா ஆர்ட்ஸ் இணையும் – “தண்டேல்” திரைப்படம், பிப்ரவரி 7, 2025 அன்று வெளியாகிறது !!

Next Post

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

Next Post

ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் பிரபாஸ் ஆகியோர் இந்திய சினிமாவில் ஒரு புதிய சகாப்தத்தை துவக்கி, மூன்று திரைப்பட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்

Popular News

  • மாலா மணியன் தயாரிப்பில் குட்டி ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிறகு’ ; உலக மகளிர் தினத்தில் சிறப்பு காட்சி திரையிடல்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜுவி-2 விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • சமூக அக்கறையில் விஜய்சேதுபதியின் “கடைசி விவசாயி”

    0 shares
    Share 0 Tweet 0
  • ” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள் “

    0 shares
    Share 0 Tweet 0
  • முதலமைச்சர் எடப்பாடி வியந்து பாராட்டிய அமைச்சர் யார் தெரியுமா?

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மனிதன் தெய்வமாகலாம் – விமர்சனம்

April 12, 2026

தேனிசை தென்றல் தேவா வெளியிட்ட “தீயோர் கூடம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

April 12, 2026

நடிகர் அஜித் குமாரின் கமர்ஷியல் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘அமர்க்களம்’ ஏப்ரல் 24 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியாகிறது!

April 12, 2026

TN (2026) தங்க நட்சத்திரம் – விமர்சனம்

April 12, 2026

Lik (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) – விமர்சனம்

April 12, 2026

“மிஸ்டர் எக்ஸ் வேறு.. துரந்தர் வேறு” ; தெளிவுபடுத்திய இயக்குநர் மனு ஆனந்த்

April 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.