‘சாமானியன்’ விமர்சனம்
எக்ஸட்ரா என்டர்டெயின்மென்ட் மதியழகன் தயாரிப்பில் இசைஞானியின் இசையில்’மக்கள் நாயகன்’ ராமராஜன் நீண்ட இடைவெளிக்குப்பின் நடித்திருக்கும் படம் ‘சாமானியன்’ இப்படத்தை இயக்கியிருக்கிறார் ராகேஷ்.
கதாநாயகனின் (ராமராஜனின்) மகள் வீடு கட்ட பேங்கில் லோன் வாங்கி கட்ட முடியாமல் பேங்க் ஊழியர்கள் மற்றும் ரவுடிகளின் தொந்தரவால் அவமானம் தாங்க முடியாமல் கணவன் மனைவி குழந்தையுடன் ஒரு விபரீத முடிவை எடுகிறார்கள் ராமராஜன் அவருடைய நண்பர்களின் உதவியுடன் தன் மகளின் குடும்பத்திற்கு நேர்ந்த கதிக்கு காரணமான பேங்க் ஊழியர்கள் மற்றும் ரவுடிகளை என்ன செய்தார் என்பதே படத்தின் விறுவிறுப்பான கதை.
படத்தின் இடைவேளை காட்சி எதிர்பாராத திருப்பம்.மிகப்பெரிய ஒரு விபத்துக்கு பின் நடிக்க வந்திருக்கும் மக்கள் நாயகன் ராமராஜனுக்கு ஒரு வாழ்த்துக்கள். படத்தில் ஆரம்பக் காட்சியே அதிர வைக்கும் இவர் திரையில் தோன்றும் போது பஸ்ஸில் மதுரை மரிக்கொழுந்து பாடல் ஒலிக்கும் தியேட்டரில் கைத்தட்டல் பறக்கும். நடிப்பு பற்றி சொல்ல வேண்டுமென்றால் சற்று வசனம் பேசும்பொழுது பழைய உச்சரிப்பு வரவில்லை அது கொஞ்சம் இயக்குனர் கவனம் செலுத்தி இருக்கலாம்.
எம் எஸ் பாஸ்கர் எப்பொழுதுமே ஒரு நடிகன் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடிப்பதில் இவருக்கு நிகர் இவரே. முதல் பாதியில் நல்ல தந்தையாகவும் இரண்டாம் பாதியில் தன் மகனுக்கு நேர்ந்த கொடுமைக்கு பழிவாங்கும் தந்தையாக மிகவும் அருமையாக நடித்திருக்கிறார்.
நடிகவேள் மகன் இளையவேல் ராதாரவி பற்றி சொல்லவா வேண்டும் பாய் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் அவரையும் சும்மா சொல்ல முடியாது நன்றாகவே அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்து முடித்திருக்கிறார்.
எம் எஸ் பாஸ்கரின் மகனாக வரும் லியோனியின் மகன் நன்றாக நடித்திருக்கிறார் அவருக்கு அடுத்தடுத்த தமிழ் படங்களில் வாய்ப்புகள் அதிகம் வரும்.
ராமராஜனின் மகளாக நடித்திருக்கும் பெண்ணும் முதல் படம் என்று தெரியாமல் நடிப்பில் நல்ல மெருகேற்றி நடித்திருக்கிறார் அதுவும் அந்த பிரசவ காட்சிகளில் அவரை நடிப்பு எதார்த்தம்.
இசைஞானியின் இசை படத்திற்கு பக்க பலம் அங்கங்கே ஒலிக்கும் பழைய ராமராஜனின் பாடல்கள் காதில் ரீங்காரம் இடுகின்றன பின்னணி இசை அபாரம்.
தம்பிக்கோட்டை படத்தை இயக்கிய ராகேஷ் இயக்கியிருக்கிறார் படத்தின் கதை பார்த்தால் நிறைய இது மாதிரி கதைகள் வந்து வட்டது இருந்தாலும் படத்தில் சில சுவாரசியமான காட்சிகளை வைத்து முதல் பாதியில் விறுவிறுப்பாகவும் இரண்டாம் பாதியில் நம்மை நெஞ்சை நெகிழ வைத்து அழ வைக்கிறார் இயக்குனர்.
படத்துல ஒரே ஒரு குறை தான் முன்னாள் ராணுவ வீரனான இருக்கும் ராமராஜனுக்கு ரிட்டையர்டு பணமே சில பல லட்சங்கள் வந்திருக்கும் அப்படி வந்திருக்கும் பொழுது இவரின் மகள் பேங்க்ல மண்டியிட வேண்டிய அவசியம் என்ன என்பது நம் மனதில் எழுவது தவிர்க்க முடியாத ஒன்று மொத்தத்தில் இந்த சாமானியன் படம் பார்க்கும் ஒவ்வொரு சாமானியனுக்கும் ஏற்கனவே ஏற்பட்ட வலி என்றுதான் சொல்ல வேண்டும்.