• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

by Tamil2daynews
February 1, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

இசையமைப்பாளர் – பின்னணி பாடகர்- நட்சத்திர நடிகர் -தயாரிப்பாளர்- என பன்முக ஆளுமை கொண்ட ‘ இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா..’  எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கிங்ஸ்டன்’ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்ய பாரதி, அழகம் பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி , சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.  வசனத்தை தீவிக் எழுத, படத்தொகுப்பு பணியை ஷான் லோகேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை எஸ். எஸ். மூர்த்தி மேற்கொள்ள, அதிரடியான சண்டை காட்சிகளை திலீப் சுப்பராயன் அமைத்திருக்கிறார். கடல் பின்னணியில் ஃபேண்டஸி அட்வென்ச்சர் ஜானரிலான இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது. தினேஷ் குணா கிரியேட்டிவ் புரொடியூசராக பொறுப்பேற்றிருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழுவதுமாக நிறைவடைந்து இருக்கிறது.  தற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்ததுடன் படத்தை பற்றிய எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது. இதனைத் தொடர்ந்து எதிர்வரும் மார்ச் மாதம் 7 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும்  திரையரங்குகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ராசா ராசா..’ எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்தப் பாடலை பாடலாசிரியர் யுகபாரதி எழுத பின்னணி பாடகரும், இசையமைப்பாளரும், நட்சத்திர நடிகருமான ஜீ.வி. பிரகாஷ் குமார் மற்றும் பின்னணி பாடகி சுப்லாஷினி ஆகியோர் இணைந்து பாடி இருக்கிறார்கள்.  மெலோடியாக வெளியாகி இருக்கும் இந்த பாடல்… அனைத்து தரப்பு இசை ரசிகர்களின் வரவேற்பையும், ஆதரவையும் பெற்று வருகிறது.

https://youtu.be/pu_4BrmUZIs

Previous Post

நாக சைதன்யா நடிக்கும் ‘தண்டேல்’ படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Next Post

“ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு”

Next Post

"ஃபேன்டஸி-ஹாரர், த்ரில்லர் திரைப்படமான அகத்தியா, வரும் பிப்ரவரி 28, 2025 அன்று பிரமாண்டமாக , திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிப்பு"

Popular News

  • 418 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • பரத் – ராஜேஷ் மாதவன் இணையும் கலகலப்பான ஃபேமிலி என்டர்டெய்னர்! பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹன்சா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் பிரம்மாண்டமான OTT சீரிஸ்கள்!

    0 shares
    Share 0 Tweet 0
  • அர்ஜுன் தாஸ் நடிப்பில் சைக்கலாஜிக்கல் கிரைம் திரில்லராக தயாராகும் ‘ஜான் டோ- John Doe’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு’

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா! ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ. 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு ரூ. 13.78 லட்சம் நிதியுதவி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘ஹைக்கூ’ ரசிகர்களின் மனதைத் தொடும் ஃபீல் குட் என்டர்டெயினர் திரைப்படம்”- இயக்குநர் யுவராஜ் சின்னசாமி!

October 23, 2026

நாய்ஸ் அண்டு கிரைன்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ‘கோயம்பத்தூர் மாப்பிள்ளை’ திரைப்படம் டிசம்பர் 24 அன்று உலகெங்கும் வெளியாகிறது

October 23, 2026

சட்டமும் நீதியும்-2 – விமர்சனம்

October 23, 2026

418 – விமர்சனம்

October 23, 2026

“ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் ‘ஹைக்கூ’” நடிகர் ஏகன்

October 23, 2026

யஷ் ராஜ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே மோதும் அதிரடி கேங்ஸ்டர் கதையான ‘அக்கா’ வெப் தொடரின் டிரெய்லரை வெளியிட்டது நெட்ஃபிளிக்ஸ்!

October 23, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.