‘ நினைவெல்லாம் நீயடா’ – விமர்சனம்
ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்ந்தால் எதுவும் கெட்டுப் போகாது என்பது பழமொழி.
இதுவே இப்படத்தின் தாரக மந்திரம்.
நடிப்பு: பிரஜன், யுவலட்சுமி , சினாமிகா,. முத்துராமன், மனோபாலா, யாசர், அபி நட்சத்திரா, ஆர் வி உத்யகுமார், பி எல் தேனப்பன்
ஆதிராஜன் இயக்கியிருக்கும் நினைவெல்லாம் நீயடா ஒரு பசுமையான காதல் படம் என்பதுடன் இசைஞானி இளையராஜாவின் தேன் சொட்டும் இசையில் மலர்ந்திருக்கும் புது காதல் ரோஜா.
பிரஜன் காதல் சோகத்தில் கவலையுடன் பழைய நினைவுகளை ஆசை போட அவரது பள்ளிப் பருவ காதல் காட்சிகள் தொடங்கு கின்றன.
தேவதை போல் வருகிறார் யுவலட்சுமி அவரைக் கண்டதும் யாரும் காதல் கொள்வார்கள். அப்படித்தான் அவரது சக வகுப்பு தோழனும் காதல் கொள்கிறான். 90ஸ் ஸ்கூல் கிட்ஸ் போல் சுவலட்சுமிடம் காதலை சொல்ல தயங்குவதும் ஆனால் அவரை விட்டு பிரியாமல் நட்புடன் இருப்பதும் இளமை துடிப்பான நகர்வுகள்.
எப்படியாவது யுவலட்சுமியிடம் காதலை சொல்ல வேண்டும் என்று எண்ணும் பிரஜன் அவரிடம் காதல் கடிதத்தை கொடுத்துவிட்டு என்ன சொல்வாரோ என்று காத்திருக்கும் காட்சிகள் படபடப்பு.
குடும்பத்தார் வற்புறுத்தலின் பேரில் மனிஷா யாதவை பிரஜன் திருமணம் செய்து கொள்வது கண்மூடி கண் திறப்பதற்குள் மருத்துவமனையில் பைத்தியமாக மனிஷா இருப்பது, குடிகாரனாக பிரஜன் மாறுவதெல்லாம் ஏதோ ஒரு பிளாஷ்பேக்கை உள்ளடக்கி இருக்கிறது என்பதை உணர்த்துகிறது.
அமெரிக்கா சென்ற யுவலட்சுமி வளர்ந்து ஆளாகி சினாமிகாவாக திரும்பியதும் தன் காதலன் பிரஜனை கேட்டு தோழிகளிடம் பொய்க் கோபம் கொள்வதும் பிரஜனை கண்டவுடன் அவரை மணந்து கொள்ள எண்ணுவதும் நிஜ காதலின் பிரதிபலிப்பு. ஆனால் ஒரு கட்டத்தில் தான் பிரஜனின் காதலி யுவலட்சுமி அல்ல என்று பெரிய குண்டை தூக்கிப் போடும்போது அப்படி யென்றால் யுவலட்சுமிக்கு என்னவானது என்று அறிய மனம் துடிக்கிறது.
படத்தின முதல் பாதி இந்தக்கால அலைகள் ஓய்வதில்லை ஆக காதல் மணம் வீசுகிறது.பிரஜனின் பள்ளி தோழராக வரும் ரெடின் கிங்ஸ்லி அவ்வப்போது காமெடி பட்டாசுகள் வெடிக்கிறார் .
80, 90 காலகட்டங்களில் இளைய ராஜாவின் இசை பெரு வெள்ளம் பெருகி ஓடியது அதை மீண்டும் மடை மாற்றி நினைவெல்லாம் நீயடா படத்தில் கொண்டு வந்து காதுகளில் பாய்ச்சி இருக்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.
ராஜாவின் பாடல்கள் ஒவ்வொரு முறை கேட்கும் போதும் தேனில் ..பாகுவை சேர்த்தது போல் இனிமை கூடிக் கொண்டே செல்கிறது. மீண்டும் ஒரு முறை பாடல்கள் கேட்க தூண்டுகிறது.
ராயல் பாபு படத்தை தயாரித்திருக்கிறார்.
ராஜா பட்டாச்சார்ஜி காதல் மென்மை குறையாமல் பதிவு செய்துள்ளார்.
படம் முழுவதும் பழைய படங்கள் வாடை அதிகம் வீசுகிறது. அதை இயக்குனர் சற்று தவிர்த்திருக்கலாம்.