நம் இந்திய நாட்டின் முதுகெலும்பான தொழில் விவாயம் இந்த இரண்டு தலைமுறையாக இளைஞர்கள் தங்களின் பூர்வீகத்தை விட்டு இடம்பெயர்ந்து படிப்பிற்காகவும் தொழிற்காகவும் முழுதாக இடம்பெயர்ந்து தற்பொழுது நகரத்திலேயே வாழ்ந்து வருகின்றனர நகரத்திற்கு இடம்பெயரும் இளைய சமுதாயம், நம் கலாச்சாரத்தையும், வாழ்வியலையும், விவசாயத்தின் மேன்மையையும் அப்படியே உதறி தள்ளிவிட்ட விவசாயத்தின் அருமையை எடுத்துச் சொல்லும் அழுத்தமான படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குடும்பத்துடன் ரசிக்கும் அழகிய படைப்பாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் G.கிருஷ்ணன்.
இப்படத்தின் அறிமுக நடிகர் கதிர் நாயகனாக நடித்துள்ளார். மியாஶ்ரீ நாயகியாக நடித்துள்ளார். போஸ் வெங்கட், சங்கிலி முருகன், இளவரசு, YSD சேகர், சூசன், ஶ்ரீ ரஞ்சனி ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு மாயவரம், தஞ்சாவூர், அரியலூர் , சென்னை மற்றும் திருவள்ளூர் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படத்தின் முக்கியமான காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் மூன்று பாடல்கள் இடம்பெற்றுள்ளது.