• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய, “திரு மாணிக்கம்” திரைப்படம், ZEE5 ஓடிடி தளத்தில் வெளியாகிறது !

by Tamil2daynews
January 23, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டிய, “திரு மாணிக்கம்” திரைப்படம்,  ZEE5  ஓடிடி தளத்தில் வெளியாகிறது ! 

 

இந்தியாவின் மிகப்பெரிய முன்னணி  வீட்டு வீடியோ ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் பன்மொழி கதைசொல்லியான ZEE5, புத்தம் புதிய ப்ளாக்பஸ்டர், திரு மாணிக்கம், திரைப்படம் 24 ஜனவரி 2025 முதல்,  ஓடிடி தளத்தில் ப்ரீமியர் செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.  . ஐந்தாம் வேதம், ரகுதாதா மற்றும் டிமாண்டி காலனி போன்ற வெற்றிப் படைப்புகளைத் தொடர்ந்து, ZEE5 மீண்டும் ஒரு அற்புதமான  ஃபேமிலி டிராமா  திரைப்படத்துடன் ரசிகர்களை அசத்தவுள்ளது. 2024 ஆம் வருடத்தில் வெளியான மிகச்சிறந்த படங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்ட, “திரு மாணிக்கம்” திரைப்படத்தை, இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர்  சமுத்திரக்கனியுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அனன்யா, பாரதிராஜா மற்றும் ஜசீனா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நல்லவனாக இருப்பதற்கே, பெரும் எதிர்ப்பை எதிர்கொண்டாலும், இறுதியில் நாயகனின் மனிதநேயம் எப்படி வெற்றி பெறுகிறது என்பதைக் காட்டும் இப்படம், ஜனவரி 24 முதல், கன்னடம் மற்றும் மலையாள டப்பிங் பதிப்புகளிலும் கிடைக்கும்.

திரு மாணிக்கம் திரைப்படம், தமிழ்த் திரையுலகில் மிகப்பெரும் அலையை உருவாக்கியது.  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உட்படப் பல முன்னணி நட்சத்திரங்கள் இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர்.   இப்படம் குறித்து  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குறிப்பிடுகையில்… இது மிக “அற்புதமான படைப்பு”, இப்படத்தின் ஆழமும், உணர்வுகளும் படம் முடிந்த பின்னும் நம்மை விட்டு அகலவில்லை. இயக்குநர் நந்தா பெரியசாமிக்கு தமிழ்த்திரையுலகில் மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது. சமுத்திரக்கனி, பாரதிராஜா உட்பட அனைவரும் மிகச்சிறந்த நடிப்பை வழங்கியுள்ளனர், படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார். மேலும் ஆர்யா முதல் ஐஏஎஸ் இறையன்பு வரை, பல முன்னணி ஆளுமைகள் பலரும், இப்படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். ரசிகர்கள், விமர்சகர்கள் என அனைவரிடமும் பாராட்டைப் பெற்ற, திரு மாணிக்கம் படத்தை, ஜனவரி 24 அன்று ஓடிடியில் கண்டுகளியுங்கள்.
ZEE5 இன் தலைமை வணிக அதிகாரியும், ZEE Entertainment Enterprises Ltd இன் தலைமை தொழில்நுட்பம் மற்றும் தயாரிப்பு அதிகாரியுமான சிவக்குமார் சின்னசாமி கூறுகையில்..,

இந்த வருடத்தின் மிகச்சிறந்த படைப்பான “திரு மாணிக்கம்” திரைப்படத்தை,  ZEE5 க்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். உலகளாவிய ரசிகர்களைக் கவர்ந்த, ஐந்தாம் வேதம், ரகுதாதா, மற்றும் டிமாண்டி காலனி 2 ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து,  தமிழ் சினிமாவின் ஒரு அரிய ரத்தினமான திரு மாணிக்கம் திரைப்படம் ஓடிடியில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நாங்கள் நம்புகிறோம்.  திரையரங்குகளில் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்ற  இப்படம், இப்போது ஓடிடி மூலம் அனைவரையும் மகிழ்விக்க வருகிறது.

ஒவ்வொரு குடும்பமும் கட்டாயம் பார்க்க வேண்டிய திரைப்படம் என, இப்படத்தை மனதாரப் பாராட்டியதற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சாருக்கு நாங்கள் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். திரு மாணிக்கம் நன்மை மற்றும் நேர்மையின் மதிப்பை எடுத்துரைத்து, எல்லா வயதினரையும் ஈர்க்கும் கதையாக  அமைந்துள்ளது. ZEE5 மூலம் தொடர்ந்து நல்ல கதைக்களத்தில், சிறந்த படைப்புகளை, எங்களது பார்வையாளர்களுக்கு வழங்குவதில் பெருமை கொள்கிறோம்.

இயக்குநர் நந்தா பெரியசாமி பகிர்ந்துகொண்டதாவது..,

திரு மாணிக்கம் ஒரு நம்பமுடியாத பயணம், இப்போது ZEE5 இல் திரையிடப்படுவதைக் கண்டு நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். திரையரங்குகளில் ரசிகர்களின் இதயத்தைக் கவர்ந்த இப்படம், இப்போது ஓடிடி மூலம் அனைவரையும் மகிழ்விக்கவுள்ளது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், சிவகுமார், ஆர்யா, ஐஏஎஸ் இறையன்பு, இயக்குநர் அமீர், நித்திலன் சுவாமிநாதன், தமிழரசன் பச்சமுத்து, கார்த்திக் சுப்பராஜ் போன்ற திரைத்துறை ஜாம்பவான்கள் தந்த அங்கீகாரத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். அவர்களின் வார்த்தைகள், எனக்கும் ஒட்டுமொத்த குழுவிற்கும் மிகப்பெரிய ஊக்கமாக அமைந்தது. இப்படைப்பை உருவாக்கியதில் முழு  அர்ப்பணிப்புடன் உழைத்த நடிகர்கள் மற்றும் குழுவினருக்கு நன்றி. ஓடிடி மூலம் உலகளாவிய பார்வையாளர்கள் இப்படத்தைக் கண்டு மகிழ்வதைக் காணவும்,  அவர்களின் கருத்துக்களைக் காணவும் ஆவலோடு உள்ளேன்.

 நடிகர் சமுத்திரக்கனி  பகிர்ந்துகொண்டதாவது..,

“ஒரு நடிகராக என்னால் என்ன செய்ய முடியும் என்ற எல்லையைத் தாண்டி, எனக்குச் சவாலான பாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டுமென்பதில்,  நான் எப்போதும் நம்பிக்கை வைத்திருக்கிறேன். திரு மாணிக்கம் திரைப்படம் எனக்குப் புதுமையான மற்றும் ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது.  இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். பெரிய வணிகப் படங்களில்  பணியாற்றும் அதே நேரத்தில், திரு மாணிக்கம் போன்ற சிறிய ரத்தினங்களிலும் பல வருடங்களாக, என்னால் பணியாற்ற முடிந்தது பெருமை. இப்போது ZEE5 மூலம், இப்படம் பரந்த பார்வையாளர்களைச் சென்றடைவதில் நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அர்த்தமுள்ள கதைகளை ரசிகர்கள் எப்போதும் கொண்டாடுவார்கள். பெருமைப்படக்கூடிய ஒரு  படைப்பில் நானும்  ஒரு இருப்பதில் மகிழ்கிறேன்.

திரு மாணிக்கம் படத்தின் கதை, லாட்டரி கடை உரிமையாளரான மாணிக்கத்தை (சமுத்திரக்கனி) பற்றியது. மாணிக்கம் பரிசு விழுந்த 1.5 கோடி மதிப்புள்ள  டிக்கெட்டை, உரியவரிடம்  திருப்பித் தர, அவரைத் தேடிப் புறப்படுகிறார். நேர்மைக்கும்   செல்வத்தின் மீதுள்ள மோகத்திற்கும்  இடையில் சிக்கித் தவிக்கிறார். நேர்மைமிக்க அவரது உன்னதமான செயல் தொடர்ச்சியான சவால்களைச் சந்திக்கிறது. இது அவரது குடும்பத்தில் சிக்கல்களையும் மற்றும் மாறிப்போன சமூகத்தின்  அழுக்கையும்   அம்பலப்படுத்துகிறது.  மாணிக்கம் தனது நேர்மையைக் காப்பாற்ற,  குடும்பத்தையும், சமூகத்தையும் எப்படிச் சமாளிக்கிறார் அதில் எப்படி ஜெயிக்கிறார் என்பது தான் இந்தப்படம்.

ஜனவரி 24, 2025 முதல் ZEE5 இல் பிரத்தியேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படும், திரு மாணிக்கம் திரைப்படத்தின் டிஜிட்டல் பிரீமியரைத் தவறவிடாதீர்கள்!

ZEE5  பற்றி
ZEE5 என்பது இந்தியாவின் முன்னணி ஓடிடி தளம் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கு பன்மொழியில்  கதைசொல்லும் ஒரு தளமாகும். ZEE5 ஆனது Global Content Powerhouse, ZEE Entertainment Enterprises Limited (ZEEL) நிறுவனத்தில் இருந்து உருவானது. அனைவருக்கும் பிடித்தமான ஒரு வீடியோ ஸ்ட்ரீமிங் தளமாக, நுகர்வோருக்கு இந்த தளம் இருந்து வருகிறது; இது 3,500 படங்களுக்கு மேல் உள்ளடக்கிய ஒரு விரிவான தளம் மற்றும் பலவிதமான கதைகள்  கொண்ட ஒரு பெரும் திரை  நூலகத்தை இது பார்வையாளர்களுக்கு வழங்குகிறது; 1,750 டிவி நிகழ்ச்சிகள், 700 ஒரிஜினல் மற்றும் 5 லட்சம் மணிநேர உள்ளடக்கங்கள். 12 மொழிகளில் (ஆங்கிலம், இந்தி, பெங்காலி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மராத்தி, ஒரியா, போஜ்புரி, குஜராத்தி மற்றும் பஞ்சாபி) சிறந்த ஒரிஜினல் படங்கள், இந்திய மற்றும் சர்வதேச திரைப்படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், இசை, குழந்தைகள் நிகழ்ச்சிகள், Edtech, Cineplays, செய்திகள், Live TV, மற்றும் ஆரோக்கியம், வாழ்கை முறை சார்ந்த உள்ளடக்கங்கள் இதில் உள்ளன. உலகளாவிய தொழில்நுட்ப அமைப்பாளர்களின் கூட்டாண்மையிலிருந்து உருவான ஒரு வலுவான மற்றும் ஆழமான தொழில்நுட்ப அடுக்கு இது.  பல சாதனங்கள் மற்றும் பல சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஏற்றவாறு  12 மொழிகளில் தடையற்ற மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்கும் அனுபவத்தை ZEE5  வழங்குகிறது.
Previous Post

“படம் பார்க்கும் பார்வையாளர்கள் தங்களை பொருத்திக் கொள்ளும் கதையாக ‘குடும்பஸ்தன்’ இருக்கும்” – நடிகர் மணிகண்டன்!

Next Post

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.

Next Post

பிரைன் டச் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் டாக்டர் R முருகானந்த் தயாரிப்பில், இயக்குநர் G.கிருஷ்ணன் இயக்கத்தில், கதிர், மியாஶ்ரீ நடிப்பில், சமூக அக்கறை மிக்க படைப்பாக, ஏர் பூட்டிய தமிழனின் வரலாற்றைப் போற்றும் படைப்பாக, உருவாகியுள்ள திரைப்படம் “பூர்வீகம்”.

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.