
இந்த பைசன்(காளமாடன்).
பைசனின் கதைகளம் 90களில் நடைபெறுகிறது. மணத்தி கணேசனின் கதாபாத்திரத்தை எடுத்துக்கொண்டு புனைவு சேர்த்து எடுக்கப்பட்டிருந்தாலும், அதில் இன்னும் சில முக்கிய நிஜ கதாபாத்திரங்களை கொண்டுவந்துள்ளார் இயக்குனர். அதுவும் தென்மாவட்ட கதைகளம் என்பதால் 90 காலகட்டத்தில் நடந்த சாதி கலவரத்தை திரைக்கதை வாயிலாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதற்காக வெங்கடேசன் பண்ணையார், பசுபதிபாண்டியன் கதாபாத்திரங்களை வேறு பெயர்களுடன், அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களை வேறு வடிவிலும் பயன்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்.
பைசன் கபடி வீரரின் வாழ்க்கைப் படமாக இருந்தாலும் அதில் அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அடையாளத்திற்காக சண்டையிடுவதாக வசனம் பேசும் கந்தசாமி கதாபாத்திரம் சாதிக்க துடிக்கும் பட்டியலின இளைஞனுக்கு உதவும் வகையிலும், தன்முன் இருக்கும் தடைகளை உடைக்கும் பாண்டியராஜா கதாபாத்திரம், “எல்லாரும் சமம் என்று தொடங்கிய சண்டையை நைசா மறந்துடானுங்க” என வசனம் பேசும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளன. அதாவது இரண்டு தரப்பில் இருக்கும் தவறுகளை அந்த கதாப்பாத்திரங்கள் வாயிலாக கூறியுள்ளார். அதற்காக எழுதப்பட்டிருக்கும் வசனங்கள் சிறப்பாக அமைந்துள்ளன.
இந்தப் படத்தில் மணத்தி கணேசன் கதாபாத்திரத்தில் வணத்தி கிட்டுவாக துருவ் விக்ரம், வெங்கடேச பண்ணையார் கதாபாத்திரத்தில் கந்தசாமியாக லால், பசுபதி பாண்டியன் கதாபாத்திரத்தில் பாண்டியராஜாவாக அமீர் நடித்துள்ளனர். அதேபோல் துருவின் தந்தைக் கதாபாத்திரத்தில் பசுபதி, அக்காவாக ரெஜினா விஜயன், மாமன் பொண்ணாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளனர்.
தொழில்நுட்பத்தை பொறுத்தவரையில் ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகியவை கதைக்களத்திற்கு தகுந்தார் போல கச்சிதமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. நிவாஸ் கே பிரசன்னாவின் பின்னணி இசை ஓகே என்றாலும், சந்தோஷ் நாராயணன் – மாரி செல்வராஜ் காம்போவை மிஸ் செய்யும் உணர்வு மேலோங்குகிறது.
படத்தை ஒட்டுமொத்தமாக தாங்கிப் பிடிக்கும் ஒரே பிள்ளைர் அமீர் கதாபாத்திரம் மட்டுமே இடைவேளைக்கு பின் அவர் வரும் காட்சியில் கைதட்டல் விசில் பறக்கின்றன.
அந்த கதாபாத்திரம் இல்லாமல் படத்தைப் பார்த்தாலும் எந்த பாதிப்பும் கதைக்கு இல்லை. அது இல்லாமல் இருந்திருந்தால் இன்னும் சில நிமிட காட்சிகளை குறைத்திருக்கலாம்.
அதேபோல் துருவ் மட்டுமே சிறந்த வீரர், அவர் மட்டுமே ரைடு சென்று பாயிண்டுகளை குவிக்கிறார் என்ற வகையில் காட்சிகளை இடம்பெற செய்துள்ளனர். ஒட்டுமொத்தத்தில் பைசன் நிறை குறைகளை சமமாக கொண்ட ஒரு காள மாடன்.