• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்

by Tamil2daynews
February 1, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ட்ரெண்டிங்கில் இருக்கும் அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கரின் ‘ஒன்ஸ்மோர்’ பட பாடல்

தமிழில் மாபெரும் வரவேற்பை பெற்றிருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்

தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகும் பான் இந்திய இசையமைப்பாளரான ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் உருவாகி, ‘ஒன்ஸ்மோர்’ எனும் படத்தில் இடம்பெற்ற ”வா கண்ணம்மா..’ எனும் பாடல் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருவதுடன் ஆயிரக் கணக்கிலான ‘ ரீல்ஸ் ‘களிலும் இடம் பிடித்து புதிய மைல்கல் பயணத்தை தொடங்கி இருக்கிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ ஒன்ஸ்மோர் ‘ எனும் திரைப்படத்தில் அர்ஜுன் தாஸ் , அதிதி ஷங்கர் ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராஜ்கமல் கவனித்திருக்கிறார். இளமை துள்ளலுடன் கூடிய பொழுதுபோக்கு படைப்பாக தயாராகி வரும் இந்த திரைப்படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் தயாரித்திருக்கிறார்.
Vaa Kannamma |Once More |Arjun Das,Aditi Shankar |Hesham Abdul WahabVignesh SrikanthYuvraj - YouTube
‘ஹிருதயம்’, ‘குஷி’, ‘ஹாய் நன்னா ” ஆகிய பான் இந்திய அளவில் வெற்றி பெற்ற படங்களுக்கு இசையமைத்து  முன்னணி நட்சத்திர இசையமைப்பாளராக உயர்ந்திருக்கும் ஹேஷாம் அப்துல் வஹாப்  ‘ ஒன்ஸ்மோர் ‘ படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். இவரின் இசையில் ‘ ஒன்ஸ்மோர் ‘ படத்தில் இடம்பெற்ற இரண்டு பாடல்கள் வெளியாகி, இசை ரசிகர்களின் கவனத்தை கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து திருமண வைபவத்தை கொண்டாடும் வகையில் ‘ வா கண்ணம்மா..’  என்ற பாடலை படக் குழுவினர் பொங்கல் விடுமுறை தினத்தன்று வெளியிட்டனர். இந்த பாடலை பாடலாசிரியர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் எழுத , இசையமைப்பாளரும் பின்னணி பாடகருமான ஹேஷாம் அப்துல் வஹாப் மற்றும் பின்னணி பாடகி உத்ரா உன்னிகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.  தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரம் – பண்பாடு – இசை- திருக்குறளுடன் தொடங்கும் பாடல் வரிகள்- இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப்பின் திரை தோன்றல்- என பல சுவாரசியமான அம்சங்கள் இடம் பிடித்திருப்பதால் இந்தப் பாடல் இதுவரை ஐந்தரை மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது. அத்துடன் இந்த பாடலை இளைய தலைமுறையினரின் சமூக வலைதள நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் படக்குழுவினர் இந்தப் பாட்டுக்கு நடனமாடி ரீல்ஸாகவும் வெளியிட்டனர். இதனால் உற்சாகமடைந்த 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் இந்த பாடலுக்கு நடனம் ஆடி அதனை அவர்களின் சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றினர். இதுவும் தற்போது ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

இந்த பாடலுக்கான மெட்டு- பாடல் வரிகள் – இசை – நடனம் – காட்சி அமைப்பு – என அனைத்தும் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ப இருந்ததால் ‘வா கண்ணம்மா..’ சமூக வலைதளவாசிகளால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் உற்சாகமடைந்த இசை ரசிகர்கள் அனைவரும் தமிழில் அறிமுகமாகும் ஹேஷாம் அப்துல் வஹாப்பிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் ஹாட்டின் + பூங்கொத்து இமோஜிகளுடன் தெரிவித்து வருகின்றனர்.
Vaa Kannamma from Once More crosses 5.8 million viewsதற்போது இப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிக்கட்டத்தை எட்டி இருக்கிறது. விரைவில் படத்தின் முன்னோட்டம் மற்றும் வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாக கூடும் என படக்குழுவினர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

அர்ஜுன் தாஸ்- அதிதி ஷங்கர் – ஹேஷாம் அப்துல் வஹாப் – மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் – கூட்டணியில் தயாராகி வரும் ‘ஒன்ஸ்மோர்’ படத்தில் இடம்பெற்ற ‘வா கண்ணம்மா..’ எனும் பாடல் புதிய சாதனையை படைத்து வருவதால் இசையமைப்பாளர் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமடைந்துள்ளனர்.

https://www.youtube.com/watch?v=9fyOu2dxgOY
Previous Post

விஜய் ஆண்டனியின் 25வது படம் ‘ சக்தி திருமகன் ‘!

Next Post

2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள்

Next Post

2024 டிசம்பர் 31 அன்று முடிவடைந்த காலாண்டு / ஒன்பது மாதங்கள் காலஅளவிற்கான நிதிசார் முடிவுகள்

Popular News

  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

    0 shares
    Share 0 Tweet 0
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்

    0 shares
    Share 0 Tweet 0
  • வள்ளுவன் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பாக்ஸ் ஆபீஸ் வசூலில் புதிய சரித்திரம் படைத்த ‘தந்தை’ சிரஞ்சீவி – ‘மகன்’ ராம்சரண்

June 16, 2026

நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

June 16, 2026

‘லவ் ஓ லவ்’ டீசர் வெளியீட்டு விழா : காதல், கலாட்டா, காமெடி… ரசிகர்களை கவரும் ‘லவ் ஓ லவ்’ டீசர்!

June 16, 2026

நடிகர் அஜய் கார்த்தி நடிக்கும் ‘டார்க்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 16, 2026

அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

June 16, 2026

ஜூலை 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் ப்ரீமியர் ஆகும் சூப்பர் சுப்பு’!

June 16, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.