இயக்குநர் பாலா – அருண் விஜய் கூட்டணியில் உருவான வணங்கான் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

அங்கு, கண் தெரியாத, மாற்றுத் திறனாளி குழந்தைகள் மற்றும் சிறார்களிடம் மிக அன்புடன் கோட்டி நடந்துகொள்கிறார். அங்கு, வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களிலேயே கண் தெரியாத பெண்களுக்கு ஒரு அவலம் நிகழ்கிறது. அதைச் செய்தது யார்? மாற்றுத் திறனாளிகளை நாம் சரியாக நடத்துகிறோமா? என்கிற கேள்விகளுடன் உருவாகியிருக்கிறது வணங்கான்.
கதாநாயகன் அருண் விஜய் நடிப்பு வேற லெவல். வாய் பேச இயலாதவராக நடித்து நம்மை கலங்க வைத்துவிட்டார். ஒவ்வொரு காட்சியிலும் ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் இவருடைய நடிப்பு மனதை தொடுகிறது.

இயக்குநர் பாலா எடுத்துக்கொண்ட கதைக்களத்திற்கு முதல் பாராட்டுக்கள். சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை சுட்டிக்காட்டி, அதற்கு தண்டை இப்படித்தான் இருக்க வேண்டும் என திரைக்கதையை நேர்த்தியாக கொண்டு சென்ற விதம் சிறப்பாக இருந்தது.
முதல் பாதியில் அருண் விஜய்க்கும் ரோஷ்ணி பிரகாஷுக்கும் இடையிலான காதல் காட்சிகள் கவனம் ஈர்க்கவில்லை. மற்றபடி படத்தில் குறை என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை. இடைவேளை மற்றும் கிளைமாக்ஸ் காட்சி படத்தின் மிகப்பெரிய பலம்.

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் பாடல்கள் சிறப்பு. சாம் சி.எஸ் பின்னணி இசை மிரட்டலாக இருந்தது. ஒப்பனை மற்றும் ஆடை வடிவமைப்பு பக்கா. ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங் படத்தின் பலம்.
முதல்முறையாக ஒரு சமூக அக்கறை உள்ள கதையை கையில் எடுத்திருக்கிறார் பாலா அதில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
இப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்து இருப்பது இன்னும் கூடுதல் பலம்.
கயவர்களிடம் இருந்து பெண்களை பாதுகாக்கும் கதையொட்டமுள்ள இந்த வணங்கான் நம்மை மிரள வைத்து விட்டான்.
சூர்யா விட்ட ஜாக்பாட்டை அருண் விஜய் அடித்திருக்கிறார்.