• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

மெட்ராஸ்காரன் – விமர்சனம்

by Tamil2daynews
January 12, 2025
in விமர்சனம்
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மெட்ராஸ்காரன் –  விமர்சனம் 

ஊரார் வியக்கவும் பெற்றோர், உறவினர்கள் மகிழவும் தனது திருமணத்தைப் புதுக்கோட்டை அருகேயுள்ள சொந்த கிராமத்தில் நடத்த ஏற்பாடு செய்கிறார், சென்னையில் வேலை செய்யும் சத்யா (ஷேன் நிகம்). அவருடைய காதலியும் மணப்பெண்ணுமான மீரா (நிஹாரிகா), திருமணத்துக்காக, முதல்நாளே புதுக்கோட்டை வந்து சேர்கிறார். விடுதியில் தங்க வைக்கப்பட்டிருக்கும் அவரைக் காண, செல்போன் பேசியபடி காரை ஓட்டிச் செல்கிறார் சத்யா. வழியில் நிறைமாதக் கர்ப்பிணியான கல்யாணி (ஐஸ்வர்யா தத்தா) மீது காரை மோதிவிடுகிறார். அந்த ஊர் மக்கள் சத்யாவைப் பிடித்துக் கொள்கிறார்கள். பிறகு அவரின் திருமணம் நடந்ததா? கல்யாணிக்கும் வயிற்றிலிருக்கும் அவரது குழந்தைக்கும் என்னவானது என்பதை நோக்கிக் கதை நகர்கிறது.

ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாகத் திருமண வீட்டிலிருந்து தொடங்கும் முதல்பாதிப் படம், விபத்துக்குப் பின் நடக்கும் சங்கிலித் தொடர் திருப்பங்களால் முடிந்ததே தெரிய வில்லை. நாயகனின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டு, அவனுடைய உறவுகள், நண்பர்களை நிம்மதி இழக்கச் செய்த கதையின் முக்கியச் சம்பவத்தில், உண்மையாகவே என்ன நடந்தது என்பதை விவரிக்கும் இரண்டாம் பாதியில் முடிச்சு அவிழும் தருணங்கள், பல படங்களில் பார்த்த பழைய அவியல். என்றாலும் நாயகனுக்கும் வில்லனுக்குமான மோதலும் விலகலும் முன்னிறுத்தும் உணர்வு பாராட்டும்படி அமைக்கப்பட்டிருக்கிறது.
Madraskaaran' movie review: Shane Nigam and Kalaiyarasan headline an outdated action drama - The Hindu
கதையின் முக்கியச் சம்பவம் நிகழத் தூண்டுகோலாக இருப்பது நாயகி கதாபாத்திரம். ஆனால், இரண்டாம் பாதியில் நாயகிக்கு எந்தப் பங்கும் இல்லாமல் இயக்குநர் முற்றாகத் துடைத்துப் போட்டது விறுவிறுப்பாக நகர்ந்த திரைக்கதையில் வலிந்து தோண்டப்பட்ட பள்ளம். நாயகனாக நடித்துள்ள ஷேன் நிகம், மலையாள வாசனை வீசும் தமிழ் பேசினாலும் நடிப்பில் அழுத்தமான முத்திரையைப் பதிக்கிறார். துரை சிங்கமாக வரும் கலையரசன், தனது கதாபாத்திரத்தின் சிக்கலை உணர்ந்து நடித்திருக்கிறார். அவர் நடிப்பை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பு இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு, ஆக்‌ஷன் பிளாக்குகளில் மல்லுக்கு நிற்பவராக முதன்மைப்படுத்தப்பட்டிருப்பது எடுபடவில்லை.
1722581837Madraskaaran-Tamil-Movie-Pics-3.jpg

மீராவாக வரும் நிஹாரிகா நடிப்பிலும் நடனத்திலும் கவர்கிறார். ஐஸ்வர்யா தத்தா திறமையைக் காட்ட இறுதிக்கட்டக் காட்சி கைகொடுக்கிறது. கருணாஸ், கீதா கைலாசம் கவனிக்க வைக்கிறார்கள். புதுக்கோட்டை அதன் சுற்று வட்டாரப் பகுதிகளைத் தனது ஒளிப்பதிவில் அழகாகப் பதிவு செய்து கதைக் களத்தை உணர வைக்கிறார், பிரசன்னா எஸ்.குமார். பின்னணி இசை மற்றும் பாடல்களில் கவனம் ஈர்க்கிறார், சாம் சி.எஸ்.படத்தொகுப்பாளர் வசந்த குமார், 2 வருடத்துக்கான ‘டைம் லேப்ஸை’ உணர வைப்பதில் கோட்டை விட்டதுடன் இரண்டாம் பாதியின் தேவையற்ற துருத்தல்களை வெட்டிச் சரி செய்யத் தவறியிருக்கிறார்.

அழுத்தமான முக்கிய சம்பவத்தைக் கொண்ட கதையில் இரண்டாம் பாதியில் மலிந்திருக்கும் நீட்டல்களையும் கூறியது கூறலையும் தவிர்த்திருந்தால் ‘மெட்ராஸ்காரன்’ இன்னும் அழகாக இருந்திருப்பான்.
Previous Post

கேம் சேஞ்சர் – விமர்சனம்

Next Post

வணங்கான் – விமர்சனம் 4/5

Next Post

வணங்கான் - விமர்சனம் 4/5

Popular News

  • ஆகஸ்ட் 7 முதல் தமிழிலும் கிடைக்கும் ZEE5-இல் பிரம்மாண்ட டிஜிட்டல் பிரீமியருக்கு தயாராகும் ‘லெனின்’

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்த சுதந்திர தினத்தில், 26/11 பயங்கரவாத தாக்குதலின்போது தைரியமாக நின்று போராடிய பெயரிடப்படாத நாயகர்களின் சொல்லப்படாத கதையை கொண்டுவருகிறது இந்தி ZEE5-இன் பாரத் பாக்ய விதாதா

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மானின் ‘ஐ ம் கேம்- I Am Game’ திரைப்படத்தின் முதல் பாடல் வெளியீடு: ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் !

    0 shares
    Share 0 Tweet 0
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026

‘அடடா’ பாடல் மூலம் தமிழ் சினிமா நினைவுகளை ராப் இசையில் கொண்டு வரும் கில்லா கே மற்றும் பால் டப்பா

August 12, 2026

அட்லி வழங்கும், விஜய் சேதுபதி நடிக்கும் ‘பத்தா’ – அக்டோபர் 1ம் தேதி திரையரங்குகளில் வெளியீடு!

August 12, 2026

‘சேயோன்’ திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வருகிறது, அதன் இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு மதுரையில் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியது.

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.