ராமாயணா: தி லெஜன்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா சினிமா விமர்சனம்
கோசலா இராஜ்ஜியத்தில் உள்ள அயோத்தியின் இளவரசரான ராமரின் வாழ்க்கை பற்றி இந்த அனிமேஷன் கதையில் விவரிக்கப்படுகிறது. இந்து தெய்வமான விஷ்ணுவின் ஏழாவது அவதாரமான கருதப்படுகிறார் ராமர். பல போர்களில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடும் ராமர், மிதிலாவின் இளவரசி சீதாவை போட்டியில் வில்லை உடைத்து திருமணம் செய்து கொள்கிறார். மன்னர் தசரதர் வயோதிகம் காரணமாக ராமருக்கு பட்டாபிஷேகம் செய்;ய நினைக்கிறார். இதனை கேள்விப்படும் மனைவி கைகேயி மன்னர் தசரதரிடம் தான் பெற்ற இரண்டு வாக்குறதிகளை நினைவுகூறி முதலில் ராமரை 14 ஆண்டுகள் நாடு கடத்த வேண்டும் எனவும், தன் மகன் பரதனுக்கு முடிசூட வேண்டும் என்று வலியுறுத்துகிறார். இதனை ஏற்கும் ராமர் மன்னர் தசரதரின் கட்டளைப்படி அயோத்தியிலிருந்து வெளியேறி மனைவி சீதா, தம்பி லட்சுமணனுடன் வனவாசத்திற்கு செல்கிறார். மகன் ராமரின் நினைவால் தசரதர் இறக்க அதன் பிறகு பரதன் மன்னரின் வாரிசாக மாறுகிறார். இந்நிலையில் வனவாசத்தில் இலங்கை அரசன் இராவணனின் தங்கை சூர்;ப்பனகை ராமர் மீது ஆசைப்பட, அவளது மூக்கை லட்சுமணன் அறுக்க, அங்கிருந்து செல்லும் சூர்ப்பனகை ராமரை பழி வாங்க நினைத்து தன் அண்ணன் ராவணனிடம் சீதையின் அழகை பற்றி சொல்ல அவளைக் கடத்துகிறான் ராவணன். படத்தின் இரண்டாம் பகுதி, ராமர் கடத்தப்பட்ட சீதையை தேடிச் செல்லும் போது ஜடாயு பறவையின் உதவி, அனுமனின் நட்பு, வானரப்படையின்; உதவியுடன் கடல் தாண்டி சென்று ராமர் ராவணனுடன் போரிட்டு தன் மனைவி சீதையுடன் அங்கிருக்கும் அடிமைகளையும் மீட்டு, பின்னர் அயோத்திக்கு சென்று அரசராக முடிசூடி கொண்டது வரை ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் அனைவரும் பார்த்து ரசிக்கும்படி வடிவமைக்கப்பட்டு முடிவடைகிறது.
வால்மீகியின் ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட காட்சிகள், காவிய போர், இளவரசர் ராமரின் பிறந்த இடமான அயோத்தி, மிதிலாவில் சீதாவை மணப்பது, இளவரசர் ராமர் சீதை மற்றும் லக்ஷ்மணருடன் வனவாசம் கழித்த பஞ்சவடி காடு, சீதையை ராவணன் கடத்திச் செல்லும் போது அவரை காப்பாற்ற முயற்சிக்கும் ஜடாயு பறவை, அனுமான் சீதையை கண்டுபிடிப்பது பின்னர் இலங்கையை தீயால் துவம்சம் செய்து விட்டு வருவது, ராமர் அனுமனிடமிருந்து சீதையைப்பற்றி அறிந்து கொள்வது, ராமர் சேது பாலத்தின் உருவாக்கத்தையும், அனைத்து வனவிலங்குகளும் உதவி செய்வது, ராமர் மற்றும் ராவணன் இடையே நடந்த புகழ்பெற்ற மோதலின் போர்க்களம், ராவணனின் தம்பி கும்பகர்ணனின் பிரமாண்ட உருவம், வானரப்படை மற்றும் லட்சுமணனின் காயங்களை குணப்படுத்த சஞ்சீவனி மூலிகையை இமயமலையிலிருந்து கொண்டு வரும் ஹனுமானின் சாகச பயணம் என்று அனைத்தும் ஜப்பானிய அனிமேஷன் பாணியில் அழகாக வழங்கப்பட்டுள்ளன.
காவியக் கதையை மறுபரிசீலனை செய்வது தலைசிறந்த படைப்பாகும். இந்த மறுவடிவமைக்கப்பட்ட பதிப்பில் 4கே காட்சிகள், மேம்படுத்தப்பட்ட ஆடியோ மற்றும் அசல் ஆங்கிலப் பதிப்போடு புதிய இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் டப்பிங்கில் வெளிவந்துள்ளது.யுகோ சகோவால் உருவாக்கப்பட்டு கொய்ச்சி சசாகி மற்றும் ராம் மோகன் இயக்கிய இந்தத் திரைப்படம், கிட்டத்தட்ட 100,000 கையால் வரையப்பட்ட செல்களைப் பயன்படுத்தி 450 கலைஞர்களை உள்ளடக்கிய ஒரு அரிய இந்தோ-ஜப்பானிய கூட்டுப்பணியாகும். இது ஜப்பானிய கலை நுணுக்கத்தை இந்தியாவின் கதைசொல்லல் பாரம்பரியத்துடன் இணைந்து வெளிவந்துள்ளது.
1993ல் ஜப்பானிய தயாரிப்பு நிறுவனம்; தயாரித்த இப்படத்தில் இந்து கடவுள்கள் சித்தரிக்கப்பட்ட விதம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் இந்தப் படத்தை இந்தியாவில் திரையிட தடை விதிக்கப்பட்டது. தற்போது கிட்டதட்ட 31 ஆண்டுகள் கழித்து இந்த படத்தின் மீதான தடை நீக்கப்பட்டு தற்போது மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.
இளவரசர் ராமரின் புராணக்கதை ஒரு பழங்கால இதிகாசத்தின் இதயப்பூர்வமான வெளிப்பாடாக அனிமேஷன் வடிவில் அதற்கு ராமர் குரல் நடிப்பில் செந்தில்குமார், சீதையாக குரல் நடிப்பில் டி. மகேஸ்வரி, ராவணனாக குரல் நடிப்பில் பிரவீன் குமார், லட்சுமணன் குரல் நடிப்பில் தியாகராஜன், ஹனுமான் குரல் நடிப்பில் லோகேஷ் மற்றும் ஆரம்பம் முதல் இறுதிய வரை இடையிடையே கதையின் சம்பவங்களை அழகாக விவரித்துள்ளார் நரேட்டர் ரவூரி ஹரிதா.