• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“மேதகு 2” – விமர்சனம்

by Tamil2daynews
August 15, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
37
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“மேதகு 2” – விமர்சனம்

இலங்கையில்  சிங்கள  அரசால் தமிழர்களின் உரிமைகள் பறிக்கப் பட்டு, தமிழர்கள் படுகொ லைக்குள்ளாக்கப்பட்டபோது தமிழ்  மக்களின்  உரிமையை  மீட்கவும், தமிர்களையும் தமிழ் பெண்களை  காக்கவும் , தனி  தமிழீழம்  அமைக்கப்பதற்காகவும் பிரபாகரன் தமிழீழ விடுதலை புலிகள்  என்ற  இயக்கத்தை தொடங்கி அதில் தமிழ் இளைஞர் களை போராளிகளாக இணைத்து போர் பயிற்சி அளித்து சிங்கள அரசுக்கு எதிராக போராடினார்.

எல் டி டி ஈ இயக்கம் உருவானது எப்படி. அதன் நோக்கம்  என்ன வாக இருந்தது. அதற்கு தமிழக மக்களும், சில தலைவர்களும் எப்படி ஆதரவு தெரிவித்தார்கள் போன்ற வரலாற்று சம்பவங்களை மேதகு 2 விளக்குகிறது.

பிரபாகரன் வேடத்தில் கவுரி சங்கர் நடித்துள் ளார். அமைதியான  அதேசமயம் அழுத்தமான நடிப்பால்  மிளிர்கிறார்.

ஏற்கனவே கடந்த 2021ம்   ஆன்டு வெளியான மேதகு முதல்பாகத்தில் 1950-களில் இருந்து எப்படி எல்லாம் தமிழர்கள் பிரச்னை களை சந்தித்தார்கள், அவற்றை எப்படி துணிச்சலாக எதிர் கொண்டார்கள் என்பது  பற்றி  சொல்லப்பட்டி ருந்தது. இதில் தமிழீழ தலைவர் பிரபாகரனின் 21 வயது வரையிலான வாழ்வியல் மட்டுமே சொல்லப்பட்டிருந்தது.

தமிழர்களுக்கு துரோகம் இழைத்த ஒருவரை களை எடுப்பதாகவும் அவர்களை சிங்கள அரசு தேட ஆரம்பிக்க, அவர்கள் காட்டுக்குள் தலை மறைவு ஆவதாக வும் முதல் பாகம் முடிவடைந்தது. இந்த இரண்டாம் பாகத்தில் அடுத்த 12 வருட காலகட்டத்தில் என்ன நடந்தது என்பது காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

போராட்ட உணர்வு கொண்ட இளைஞர் களை ஒன்று சேர்த்து தமது உரிமையை மீட்டெடுப்பதற்காக புதிய இயக்கத்தை உருவாக்கு வதையும் அதற்காக அவர்கள் எதிர்கொள் ளும் சோதனைகள், அவர்களுக்கு ஏற்படும் உணர்வு மிக்க சம்பவங்கள், அதனால் ஏற்படும் இழப்புகள், தியாகங்கள், இயக்கம் உருவானது எப்படி, அதற்கு இந்தியாவில் இருந்து மறைந்த பாரத பிரதமர் இந்திரா காந்தி, மறைந்த தமிழக முதல்வர் எம்ஜிஆர் ஆகியோர் தமிழகத்தில் இவர்களுக்கு பயிற்சி பெற எப்படி உதவியாக இருந்தார்கள் என்ப தெல்லாம் இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறுகிறது.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் ஏற்பட்ட ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ளும்படி மத்திய அமைச்சர்  ஒருவர் பிரபாகரனை மிரட்டும் காட்சியும் அந்த மிரட்டலுக்கு பணியாமல் பிரபாகரன் வீட்டுச் சிறையில் அடைக்கப் படும் காட்சியும் அற்புதமாக படமாக்கப் பட்டுள்ளது. அதேபோல் அன்றைய தமிழக முதல்வர் எம் ஜி ஆர் எல் டி டி ஈ அமைப்பை அழைத்து பேசி அவர்க ளுக்கு பண உதவி அளிக்கும் காட்சியும்  தத்ரூபமாக படமக்கப்பட் டிருக்கிறது.

1981-ஆம் ஆண்டு தமிழர்களின் கலாச் சாரத்தை அழிக்க வேண்டும் என்கிற நோக்கத்தோடு யாழ் நூலகத்தை தீக்கிரை யாக்கிய துயரமான சம்பவம்,  1983- ஆம் ஆண்டு காலகட்டத்தில் இலங்கை முழுவதும் நாடளாவிய பகுதிகளில் தமிழர்களுக்கு எதிரான இன வன்முறை நடை பெற்ற கருப்பு ஜூலை கலவரத்தையும், அதனால் ஒன்றரை லட்சம் மக்கள் உலகெங்கும் அகதிக ளாக புலம் பெயர்ந்த துயர நிகழ்வையும் இதில் பதிவு செய்துள்ளனர்.

மேதகு முதல்பாகத் துக்கே தணிக்கை சான்று கிடைக்காததால் மேதகு 2 படத்துக்கும் தணிக்கை கிடைக்கப் போவதில்லை என்று பட தரப்பு கூறுகிறது. ஆனாலும்  இப்படம் அனைத்து மக்களுக்கும் சென்று சேர வேண்டும் என்பதற்காக இப் படத்ப தை வெளியிடுவதற் காகவே தமிழ்ஸ் ஓடிடி (tamils OTT) என்கிற புதிய ஓடிடி தளத்தையும் இக்குழு தொடங்கி யுள்ளது.

தியேட்டர்களில் படம் வெளியான சில நாட்களி லேயே தமிழ்ஸ் ஓடிடி தளத்தில் (www.tamilsott.com) இந்த படம் வெளியாக இருப்பதால், படத்தை திரையிட முடியாத இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகள் ஆகியவற்றில் உள்ள மக்களும் இந்தப்படத்தை பார்க்க முடியுமாம்.

மேதகு 2 படப்பிடிப்புக்கும் அனுமதி கிடைக்காத நிலையில் கொரில்லா பாணியில்  இதன் படப்பிடிப்பு நடத்தியதாக இயக்குனர் இரா.கோ யோகேந்திரன்  தெரிவித்தார்.வரும் ஆகஸ்ட்-19ஆம் தேதி இந்த படம் வெளிநாட்டு திரையரங் குகளில் உலகெங்கிலும் வெளியாக இருக்கிறது.

மேதகு படத்தை பகுதி பகுதியாக இயக்குவதை விட முழுவெப் தொடராக ஏழு அல்லது 8 பாகங் களாக உருவாக்கினால் அதன் உணர்வு இடை வெளியில்லாமல் தொடர்ச்சியாக மக்களை சென்றடையும்  அந்த முயற்சியை படக்குழு மேற்கொள்ள வேண்டும் என்பது தமிழின உணர்வாளர்களின் கருத்தாக உள்ளது.

Previous Post

பா.இரஞ்சித் தயாரிப்பில் கிரிக்கெட் விளையாட்டை மையமாகக்கொண்ட புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.

Next Post

ஜி-5ல் ஆகஸ்டு-19முதல் “யானை”

Next Post

ஜி-5ல் ஆகஸ்டு-19முதல் "யானை"

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே காம்போவின் ‘ஸ்ரீ ஸ்ரீ’ அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.