• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

’18 மைல்ஸ்’ மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகை மிர்னா!

by Tamil2daynews
August 31, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

’18 மைல்ஸ்’ மூலம் புதிய மைல்கல்லை எட்டியுள்ள நடிகை மிர்னா!

 

மனதின் தூய்மையான காதலை கருவாகக் கொண்டு உருவாகியுள்ளது ’18 மைல்ஸ்’. எல்லைகளையும் பல தடைகளையும் தாண்டி காலம் கடந்த உணர்வுகளோடு உருவாகியுள்ள இந்தக் கதையில் தூய்மையான காதலை உணரலாம். நடிகர்கள் அசோக் செல்வன் – மிர்னா நடிப்பில் உருவாகியுள்ள ’18 மைல்ஸ்’-ல் இருந்து சமீபத்தில் வெளியான கிளிம்ப்ஸில் கடினமான தருணங்கள், அன்பு, கண்ணைக் கவரும் காட்சிகள் எனப் பலவற்றை பார்க்க முடிந்தது. இதனை சதீஷ் செல்வகுமார் இயக்கி இருக்க சித்து குமார் இசையமைத்திருக்கிறார். பாடல் வரிகளை விக்னேஷ் ராமகிருஷ்ணா எழுதியிருக்கிறார்.

ஒரு அகதிக்கும் கடலின் சட்டத்தை இயற்றுபவருக்கும் இடையிலான பிணைப்பு, தியாகம், அன்பு மற்றும் இன்னும் பேசப்படாத பல உணர்வுகளையும் ’18 மைல்ஸ்’ பேசுகிறது. சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் தனது திறமையை நிரூபித்த நடிகை மிர்னா ’18 மைல்ஸ்’ கதையில் மேலும் அழுத்தமான நடிப்பைக் கொடுத்திருக்கிறார். அன்புக்கும் அரவணைப்பிற்கும் ஏங்கும் மனதை தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் மிர்னா. தனது கடமைக்கும் மனதிற்கும் இடையிலான அலைக்கழிப்பை தனது நடிப்பில் சரியாக பதிய வைத்திருக்கிறார் நடிகர் அசோக் செல்வன்.
இதில் நடித்த அனுபவம் குறித்து நடிகை மிர்னா பகிர்ந்திருப்பதாவது, “நடிப்புத் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதாபாத்திரம் கிடைப்பதுதான் ஒரு நடிகைக்கு உண்மையான அங்கீகாரம். அந்த வகையில், ஆழமான, இளகிய அதே சமயம் உண்மையான உணர்வுகளை நடிப்பில் கொண்டு வர வேண்டிய கதாபாத்திரம் ’18 மைல்ஸ்’-ல் எனக்கு கிடைத்திருக்கிறது. மெளனம், உணர்வுகள் மூலமே பெரும்பாலும் இந்தக் கதையில் நடித்திருக்கிறேன். வசனம் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். இப்படி ஒரு அற்புதமான வாய்ப்பு கொடுத்த இயக்குநர் சதீஷூக்கு நன்றி” என்றார்.நடிகர் அசோக் செல்வனுடன் பணிபுரிந்தது பற்றி பேசியதாவது, “தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரம் சிறப்பாக வர வேண்டும் என்பதில் அசோக் தெளிவாக இருந்தார். அவருடைய டெடிகேஷன் எனக்கும் இன்ஸ்பையரிங்காக இருந்தது. வெறும் நடிப்பு மட்டுமே என்றில்லாமல் அன்பு மற்றும் பொறுப்பு ஆகிய இரண்டையும் கையாள வேண்டும் என்ற இடத்தில் இருக்கும் இரு நபர்களின் கதை. ’18 மைல்ஸ்’ கிளிம்ப்ஸூக்கு கிடைத்த வரவேற்பு மகிழ்ச்சியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களும் கதையின் உணர்வை சரியாகப் புரிந்து கொண்டுள்ளனர். ’18 மைல்ஸ்’ வெளியாகும்போது ரசிகர்கள் எந்தளவிற்கு கதையின் உணர்வுகளுடன் தங்களைப் பொருத்தி பார்த்துக் கொள்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருக்கிறேன்” என்றார்.

இந்தத் தலைமுறை நடிகர்களில் திறமையும் அழகும் கொண்ட வெகுசிலரில் ஒருவராக வலம் வருகிறார் நடிகை மிர்னா. அடுத்தடுத்து தனது நடிப்புத் திறனை மேலும் மெருகேற்றும் விதமாக படங்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். அந்தப் படங்கள் குறித்தான அறிவிப்பு விரைவில் எதிர்பார்க்கலாம்.

Previous Post

நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்ட நட்டியின் “ரைட்” திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் !!

Next Post

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!

Next Post

Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் MRP Entertainment இணைந்து வழங்க, அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம் !!

Popular News

  • டைரி – விமர்சனம்

    பாரம்பரிய முறைப்படி நடந்த பூமி பூஜை! – மகிழ்ச்சியில் ‘ரூஃப்வெஸ்ட் நக்‌ஷத்ரா’ வாடிக்கையாளர்கள்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • விவசாயத்தை விட சினிமா எடுப்பது தான் கஷ்டமாக இருக்கிறது ” தடை அதை உடை ” படத்தின் இயக்குனர் அறிவழகன் முருகேசன் !!

    0 shares
    Share 0 Tweet 0
  • தொடர்மழை காரணமாக ‘ஆட்டி’ பட ரிலீஸ் தள்ளிவைப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • கரூரில் திரண்ட ‘சீயான்’ விக்ரம் ரசிகர்கள், ‘வீர தீர சூரன்- பார்ட் 2 ‘‌ படக் கொண்டாட்டம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.