• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

by Tamil2daynews
June 18, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்-  சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார்.

அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் – தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர். மேலும் இது தொடர்பான அனைத்து முன் தயாரிப்பு பணிகளும் நிறைவடைந்துள்ளன.

இப்படத்தில் நடிக்கும் முக்கிய நடிகர்களின் பட்டியலை தயாரிப்பாளர்கள் அண்மையில் ஒன்றன்பின் ஒன்றாக அறிவித்தனர். தபு, துனியா விஜய் குமார் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த பட்டியலில் தற்போது ‘தென்னிந்திய சினிமாவின் வசீகரம் ‘என போற்றப்படும் திறமையான நடிகை சம்யுக்தா முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
Imageஇது வழக்கமான கதாநாயகி வேடம் அல்ல. சம்யுக்தாவின் கதாபாத்திரம் கதையின் ஒருங்கிணைந்த பகுதியாகும். நடிப்பிற்கும், உணர்ச்சிபூர்வமான ஆழத்திற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. நடிகை சம்யுக்தா – இந்த படத்தின் கதை மற்றும் அவரது கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஆர்வமாக இருப்பதாகவும், படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் நாளை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

சென்னை மற்றும் ஹைதராபாத்தில் இப்படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பை நடத்துவதற்கான இடங்களை படக்குழுவினர் தேர்வு செய்துள்ளனர். இதன் வழக்கமான படப்பிடிப்பு ஜூன் மாத இறுதியில் தொடங்குகிறது.

பான் இந்திய அளவிலான இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய இந்திய மொழிகளில் வெளியிடப்படும். மேலும் நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த படம் இருக்கும்.

நடிகர்கள் :
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, துனியா விஜய் குமார்.

தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள் : பூரி ஜெகன்னாத் – சார்மி கவுர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
தலைமை நிர்வாக அதிகாரி : விஷூ ரெட்டி
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஹாஷ்டாக் மீடியா

Previous Post

ஹும் படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

Next Post

அஜித் விநாயகா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், நடிகர் விமல் நடிக்கும், காமெடி எண்டர்டெயினர் திரைப்படம், பூஜையுடன் துவங்கியது !!

Popular News

  • காதல் மற்றும் உறவுகளின் உணர்வுப்பூர்வமான கொண்டாட்டமாக வெளியான ‘ஹைக்கூ’ திரைப்படம் நவம்பர் 20 அன்று நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “கனவுகள், விடாமுயற்சி, சொந்த ஊரை விட்டு வெளியேறி வாழும் தமிழ் இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என அனைத்தையும் பேசும் கதைதான் ‘பீட்சா பாய்ஸ்’”…இயக்குநர் சேகர் கேசவ் சிரின்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்தியவான் சாவித்திரி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

“‘டெத் இரயில்வே பக்கா கமர்ஷியல் படம்”…’யாத்திசை’ இயக்குநர் தரணி ராசேந்திரன்!

November 22, 2026

ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் தன் மகள் அல்லு அர்ஹாவுக்கு சொன்ன நெகிழ்ச்சியான பிறந்தநாள் வாழ்த்து!

November 22, 2026

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு ‘தமிழினி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

November 22, 2026

‘டெலிவரி பாய்’ திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

November 22, 2026

பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், Vi. ஆனந்தின் கற்பனையில், நடிகர் பஞ்ச வைஷ்ணவ் தேஜ் நடிக்கும் ‘ஹனுமேன் 2: தி ரைஸ் ஆஃப் வானராஸ்’ (HanuMan 2: The Rise of Vanaras) – டைட்டில் போஸ்டர் வெளியீடு!

November 22, 2026

ஆகாயத்தில் ஒரு தாரகை (AOT) – விமர்சனம்

November 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.