STR 49: மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிலம்பரசன் டி.ஆர் – வெற்றிமாறன் இணையும் படத்தின் ப்ரோமோ வீடியோ அக்டோபர் 4 ஆம் தேதி வெளியாகிறது!
ரசிகர்களின் மனங்கவர்ந்த சிலம்பரசன் டி.ஆர். மற்றும் புகழ்பெற்ற திறமையான திரைப்பட இயக்குநர் வெற்றிமாறனின் கூட்டணிக்காக எதிர்பார்த்தவர்களின் காத்திருப்பு ஒரு முடிவுக்கு வரவுள்ளது. பரபரப்பான அறிவிப்பு வீடியோ மூலம் அதிர்வலைகளை உருவாக்கிய பிறகு, தற்பொழுது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட STR 49-இன் ப்ரோமோ வீடியோவை வெளியிடத் தயாராகி உள்ளது படக்குழு.
ப்ரோமோ வீடியோ வெளியாகவுள்ள இத்தருணத்தில், அதைப் பற்றிய எதிர்பார்ப்பு உச்சத்தை எட்டியுள்ளது. STR-இன் தோற்றம், படத்தின் களம் மற்றும் வெற்றிமாறன் உருவாக்கவிருக்கும் உலகம் ஆகியவற்றைக் காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் உள்ளனர். இந்த ப்ரோமோ வீடியோ, ரசிகர்களின் மனதை விட்டு நீங்காத மிக அற்புதமான ஒரு படத்திற்கான அடித்தளத்தை உருவாக்கும் என சினிமா துறையில் உள்ள ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
சிலம்பரசன் டி.ஆரின் ஆர்ப்பரிக்கும் திரை ஆளுமையும், வெற்றிமாறனின் தீவிரமான கதை சொல்லும் பாணியுடன் இணைந்து, தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் நாடகத்தை மறுவரையறை செய்யக்கூடிய ஒரு மைல்கல் சினிமாவாக STR 49 உருவாகி வருகிறது.