• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை’ டிரெய்லர் வெளியாகியுள்ளது!

by Tamil2daynews
September 27, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் த்ரில்லர் சீரிஸ் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்- திரையில் நீங்கள் கேமை தொடங்கலாம் ஆனால் ஒருபோதும் அது முடிவதில்லை’  டிரெய்லர் வெளியாகியுள்ளது!

 

ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில் நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் நடிப்பில் உருவாகியுள்ள தமிழ் த்ரில்லர் கதை ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’. இந்தக் கதைக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் ஒன்றிணைந்துள்ளது.

விளையாட்டு என்பது பொழுதுபோக்கிற்காக மட்டுமே! ஆனால், அந்த விளையாட்டே உங்களுக்கு வினையாக மாறினால்? அக்டோபர் 2 அன்று நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் ப்ரீமியர் ஆகும் ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தொடரின் தமிழ் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.  உங்கள் விர்ச்சுவல் உலகம் நிஜ வாழ்க்கையை சந்தித்தால் என்ன நடக்கும் என்பதை ரகசியங்கள் மற்றும் உண்மைக்கு நெருக்கமாக பேசவுள்ளது.

‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ தமிழ் த்ரில்லர் சீரிஸூக்காக நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்ட் மீண்டும் இணைந்துள்ளது. ராஜேஷ் எம். செல்வா இயக்கத்தில், தீப்தி கோவிந்தராஜன் திரைக்கதை எழுதியிருக்கிறார். அவருடன் இணைந்து செல்வா மற்றும் கார்த்திக் பாலாவும் திரைக்கதை எழுதியிருக்கிறார்கள்.  நடிகர்கள் ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் சந்தோஷ் பிரதாப் முன்னணி கதாபாத்திரங்களிலும் சாந்தினி, ஷ்யாமா ஹரிணி, பாலா ஹசன், சுபாஷ் செல்வம், விவியா சந்த், தீரஜ் மற்றும் ஹேமா ஆகியோர் துணை கதாபாத்திரங்களிலும் நடிக்கின்றனர். விர்ச்சுவல் உலகம் உண்மையான உலகத்தை சந்திக்கும்போது குடும்பம், உறவுகளில் எப்படி நம்பிக்கை இழக்க நேரிடுகிறது என்பதை இந்த தமிழ் த்ரில்லர் பேசுகிறது.
இயக்குநர் ராஜேஷ் எம். செல்வா பகிர்ந்து கொண்டதாவது, “இந்தக் கதை வெறும் த்ரில்லர் மட்டுமல்ல! இது நாம் வாழும் உலகின் பிரதிபலிப்பாகும். த்ரில்லர் கதையாக உருவாகியுள்ள இதில் குடும்பம் மற்றும் உறவுகள் பற்றியும் பேசியுள்ளோம். தற்போது விர்ச்சுவல் உலகம் வெறும் விர்ச்சுவல் உலகமாக மட்டும் இருப்பதில்லை. அது நம் வாழ்க்கையை சந்திக்கும்போது நிகழும் விளைவுகளை நம்மால் கட்டுப்படுத்த முடியாது.  என்னுடைய முதல் தமிழ் ஒரிஜினல்ஸ் நெட்ஃபிலிக்ஸ் மற்றும் அப்ளாஸ் எண்டர்டெயின்மெண்டுடன் இணைந்து பணியாற்றுவது எங்கள் படைப்புக்கு எல்லையற்ற சுதந்திரம் கொடுத்தது.  பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்த்து அவர்கள் கருத்துக்களை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளேன்” என்றார்.

தொடர் குறித்து நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் பகிர்ந்து கொண்டதாவது, “சுதந்திரமான கேமிங் டெவலப்பர் பெண் கதாபாத்திரத்தில் நடித்துப்பது எனக்கு புது அனுபவம். த்ரில்லர் ஜானரில் அமைக்கப்பட்ட என் கதாபாத்திரம் எனக்கே எதிராக திரும்பும்போது அவளால் தப்ப முடியவில்லை. ரியாலிட்டி அவளுக்கு சவாலானதாக உள்ளது. ஒவ்வொரு ஃபிரேமிலும் தீவிரம், ஆழத்தைக் கொண்டு வந்த இயக்குநர் ராஜேஷூடன் இணைந்து பணிபுரிந்தது மறக்க முடியாத அனுபவம். நெட்ஃபிலிக்ஸ் உடன் இணைந்ததன் மூலம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை சென்றடைய முடியும்” என்றார்.
அவசரம், பயம், மனிதத்தன்மை, பதட்டம் என அனைத்து உணர்வுகளும் டிரெய்லரில் உள்ளது. கேமில் ஒவ்வொரு க்ளிக்கும் உங்கள் சாய்ஸ். ஒவ்வொரு மாஸ்க்கும் உண்மையை மறைத்துள்ளது. ஒவ்வொரு உண்மையும் கேமை மாற்றும். இந்த கேம் நீங்கள் வெற்றி பெறுகிறீர்களா என்பதில்லை, நீங்கள் உருவாக்கிய உலகில் உங்களால் வாழ முடிகிறதா என்பதைப் பற்றியது!

நெட்ஃபிலிக்ஸில் அக்டோபர் 2 அன்று ‘தி கேம்: யூ நெவர் பிளே அலோன்’ பாருங்கள்!

நெட்ஃபிலிக்ஸ் பற்றி:
நெட்ஃபிலிக்ஸ் உலகின் முன்னணி பொழுதுபோக்கு சேவைகளில் ஒன்றாகும். 190 க்கும் மேற்பட்ட நாடுகளில் 300 மில்லியனுக்கும் அதிகமான கட்டண சந்தாதாரர்களைக் கொண்டு பல்வேறு ஜானர்கள் மற்றும் மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் விளையாட்டு போன்றவற்றைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் எப்படி வேண்டுமானாலும் பார்க்கலாம், இடைநிறுத்தலாம் மற்றும் மீண்டும் பார்க்கலாம். மேலும் எந்த நேரத்திலும் தங்கள் திட்டங்களை மாற்றலாம்.

Previous Post

“காந்தாரா” படத்தின் பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையில், தபால் துறை அஞ்சல் அட்டைகள் வெளியிடப்பட்டுள்ளது!!

Next Post

PK7 Studios தயாரித்து வழங்கும் “ஜாக்கி”

Next Post

PK7 Studios தயாரித்து வழங்கும் "ஜாக்கி"

Popular News

  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி வெளியிட்ட முனீஸ்காந்த் நடிக்கும் ‘தி டோர்ம்- The Dorm’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்

    0 shares
    Share 0 Tweet 0
  • ’நியூ அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ புரோமோவில் மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் மிகப்பெரும் வில்லனான ராபர்ட் டவுனி ஜூனியரின் கதை!

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெபெல் ஸ்டார் பிரபாஸ், கிரியேட்டிவ் டைரக்டர் ஹனு ராகவபூடி, பிரபல தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ், டி-சீரிஸ் இணைந்து வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பான் இந்தியா திரைப்படம் ‘ஃபௌஜி‘ – படத்திலிருந்து சுதந்திர தினத்தை தியாகத்திற்கு அர்ப்பணிக்கும் புதிய போஸ்டர் வெளியீடு !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஸ்டாண்ட் அப் காமெடியில் வரலாறு படைத்த கூத்து கலைஞர் மாயா எஸ். கிருஷ்ணன் ‌!!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.