• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

by Tamil2daynews
September 27, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் நடித்துள்ள ஜாரெட் லெட்டோ தனது ஹீரோ ஜெஃப் பிரிட்ஜஸ் பற்றி சிலாகிக்கிறார்!

 

‘டிரான்: ஏரஸ்’ படத்தில் ஜாரெட் லெட்டோ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது மறக்க முடியாத பயணமாக ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் இணைந்து பணியாற்றியதை சொல்கிறார். ஆஸ்கார் விருது வென்ற ஜெஃப் பிரிட்ஜஸ் உடன் படப்பிடிப்பு தளத்தில் ஒன்றாக நேரம் செலவழித்ததையும், 1982 ஆம் ஆண்டு கல்ட் கிளாசிக் படத்தில் கெவின் ஃபிளினை திரையில் கொண்டு வந்தது பற்றியும் சிலாகித்து பேசினார்.

பட புரோமோஷனில் பேசிய ஜாரெட், “அவர் என்னுடைய சிறந்த நண்பர். ஜெஃப் அன்பானவர், நகைச்சுவை உணர்வு கொண்டவர், பண்பானவர் என அவரைப்பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அதற்கு சரியாகப் பொருந்திப் போவார். படப்பிடிப்பு தளத்தில் அவருடன் செலவழித்த நேரம் என்றும் மறக்க முடியாது. எனக்கு அவருடன் நேரம் செலவிட இன்னும் சில நாட்கள் இருந்திருக்கலாம் எனத் தோன்றியது. எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். அவர் தன்னை சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதோடு, சிறந்த வாழ்க்கைக்கு உதாரணமாகவும் இருக்கிறார். அவர் முதல் முறையாக படப்பிடிப்பு தளத்திற்கு வந்தபோது, எல்லோரும் கைதட்டி வரவேற்றார்கள்” என்றார்.லெட்டோவைப் பொறுத்தவரை பிரிட்ஜஸ் வெறும் சக நடிகர் மட்டுமல்ல! அவர்தான் டிரானின் ஆன்மா. அவர் இல்லாமல் டிரான் படத்தைப் பற்றி யோசிப்பது கூட சாத்தியமற்றது என்கிறார் லெட்டோ.

பிரிட்ஜஸ் தனக்கு படப்பிடிப்பு தளத்தில் Air என செல்லப்பெயர் வைத்ததாகவும் மகிழ்வுடன் சொல்கிறார் லெட்டோ. “இத்தனை வருடங்களில் அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். உங்கள் ஹீரோவுடன் சேர்ந்து நீங்கள் நடிப்பது எத்தனை சிறப்பான தருணம்” என்றார்.
மேலும் சிறுவயதில் அவரைப் பார்த்து வியந்தது பற்றியும் கூறுகிறார், “12 வயது சிறுவனாக முதன் முதலில் அந்தப் படம் பார்த்தது என் வாழ்க்கையை மாற்றியது. அந்தப் படத்தின் தொழில்நுட்பம், கிரியேட்டிவிட்டி, ஃபன், அட்வென்ச்சர் எல்லாமே என்னை ஈர்த்தது. முதல் இரண்டு டிரான் படங்களில் அவர் நடிப்பில் மிரட்டியிருப்பார்.  அவருடன் இணைந்து பணியாற்றியது என் அதிர்ஷ்டம். அவரது வழியில் என்றும் நடக்க முயல்வேன்” என்றார்.

டிஸ்னியின் ‘டிரான்: ஏரஸ்’ அக்டோபர் 10, 2025 அன்று இந்திய திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.

Previous Post

இதுவரை கண்டிராத சினிமா அனுபவத்தை தர இருக்கும் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ படத்தின் புதிய டிரெய்லர் வெளியாகியுள்ளது!

Next Post

ஸ்ரீகாந்த் ஒதேலா – “தி பாரடைஸ்” படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

Next Post

ஸ்ரீகாந்த் ஒதேலா – "தி பாரடைஸ்" படத்திற்காக லெஜெண்ட்டரி மோகன் பாபுவை மீண்டும் வெள்ளித் திரைக்கு அழைத்து வருகிறார்!

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆட்டி – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • திரைப்பட தணிக்கை வாரியத்திடமிருந்து U சான்றிதழ் பெற்ற “அங்கீகாரம்” திரைப்படம் ஜூன் 26-ல் ரிலீஸ்.

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.