• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘காந்தாரா’ வெற்றிக்குப் பிறகு, அஜனீஷ் லோக்நாத் மற்றும் ‘மார்கோ’க்கு பிறகு தயாரிப்பாளர் ஷெரிப் முகமது ஆகியோர் — இப்போது ‘கட்டாளன்’ படம் மூலம் ஒன்றிணைகின்றனர் !

by Tamil2daynews
May 26, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘காந்தாரா’ வெற்றிக்குப் பிறகு, அஜனீஷ் லோக்நாத் மற்றும் ‘மார்கோ’க்கு பிறகு தயாரிப்பாளர் ஷெரிப் முகமது ஆகியோர்  — இப்போது ‘கட்டாளன்’ படம் மூலம் ஒன்றிணைகின்றனர் !

 

இந்தியா முழுவதும் மொழி எல்லைகளைக் கடந்து பெரும் வரவேற்பைப் பெற்ற ‘மார்கோ’ பட வெற்றிக்குப் பிறகு, Cubes Entertainments-ன் தயாரிப்பாளர் ஷெரிப் முகமது தனது அடுத்த  பிரம்மாண்ட  முயற்சியாக  — ‘கட்டாளன்’ படத்தை உருவாக்கி வருகிறார். இந்த அதிரடி பான்-இந்தியன் ஆக்ஷன் திரில்லரில் ஆண்டனி வர்கீஸ் (பெப்பே) முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார், இயக்குநர் பால் ஜார்ஜ் இப்படத்தை இயக்குகிறார்.

இப்படத்தை மேலும் விசேஷமாக்குவது, ‘காந்தாரா’-இன் இசைச் சாம்ராட்டான அஜனீஷ் லோக்நாத்தும் தயாரிப்பாளர் ஷெரிப் முகமதுமாகிய இருவரின் புதிய கூட்டணியாகும். மனதை பதறவைக்கும் பின்னணி இசைகளுக்குப் பெயர் பெற்ற அஜனீஷின் இசை ‘கட்டாளன்’-இன் திரை அனுபவத்தை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Image

“கட்டாளன்” படத்தின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது இணையத்தில் கவனம் ஈர்த்து வருகிறது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இந்த திரைப்படம் ஒரு தீவிரமான திரில்லராக, ஆக்சன் அதிரடிப் படமாக இருக்கும் என்பதைக் குறிக்கின்றது. போஸ்டரில், நடு காட்டுக்குள் பலர் செத்து விழுந்து கிடக்க, நடுவில் கொளுந்து விட்டு எரியும் நெருப்புக்கு மத்தியில், பிபி கையில் கோடாளியுடன் மிரட்டலாக தோற்றமளிக்கிறார்.

‘ஜெயிலர்’, ‘லியோ’, ‘ஜவான்’ மற்றும் ‘கூலி’ போன்ற திரைப்படங்களின் எழுத்துரு வடிவமைப்புகளை உருவாக்கிய Ident Labs நிறுவனம், ‘கட்டாளன்’ என்ற தலைப்புக்கான டைட்டில் டிசைனை செய்துள்ளது. போஸ்டரின் டைட்டில்  நாகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றின் பின்னணியில் மறைத்து உருவாக்கப்பட்டுள்ளது. படக்குழு பல ஆச்சரியங்களை டைட்டிலேயே வைத்திருக்கிறது.

தனது முதல் திரைப்படத்திலேயே, பெரிய கவனத்தைப் பெற்ற Cubes Entertainments நிறுவனம், இரண்டாவது படத்திற்கும், இப்போது அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ‘கட்டாளன்’ ஒரு மிகப்பெரிய திரையரங்க அனுபவமாக உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous Post

சூப்பர் ஸ்டார் ஃபிலிம்ஸ் பேனரில் சமீர் அலி கான் தயாரித்து இயக்கி நாயகனாக நடிக்கும் கலகலப்பான காதல் கதை ‘தமிழ் பையன் இந்தி பொண்ணு’

Next Post

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Next Post
ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் – காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, ‘மெட்ராஸ் மேட்னி’  திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும், சத்யராஜ் - காளி வெங்கட் கூட்டணியில் உருவாகியுள்ள, 'மெட்ராஸ் மேட்னி' திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Popular News

  • ‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘டிமான்ட்டி காலனி 2’ படப்பிடிப்பு நிறைவு

    0 shares
    Share 0 Tweet 0
  • ரஜினி, விஜய் படத்திற்கு மட்டும் தனி நீதியா? ‘இராமானுஜர்’ பட தயாரிப்பாளர் ஆவேசம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.