ADVERTISEMENT
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘தாராவி பேங்க்’ தொடருக்காக ‘கம்பெனி’யில் மோகன்லால் சாருடைய நடிப்பைப் போல கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்”- விவேக் ஆனந்த் ஓபராய்

by Tamil2daynews
November 30, 2022
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘தாராவி பேங்க்’ தொடருக்காக ‘கம்பெனி’யில் மோகன்லால் சாருடைய நடிப்பைப் போல கொடுக்க முயற்சி செய்திருக்கிறேன்”- விவேக் ஆனந்த் ஓபராய்

 

MX ஒரிஜினல் இணையத்தொடரான ‘தாராவி பேங்க்’ வலுவான கதைக்களத்தோடு தாராவி பகுதியில் நடைபெறும் ஒரு பரபரப்பான குற்றச் செயல்களை உள்ளடக்கிய கதை ஆகும். இது போன்ற ஒரு பரபரப்பான கதைக்களத்தோடு பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், இந்த இணையத் தொடரில் 10 எபிசோட்கள் இருக்கிறது. தாராவியின் பகுதிகளில் 30,000 கோடி ரூபாயை மையமாகக் கொண்டு பிரம்மாண்டமான நிதி சாம்ராஜ்யத்தை வழி நடத்தக் கூடிய பிடிக்க முடியாத ஒரு தலைவனை துரத்தும் அமைதியற்ற காவல்துறை அதிகாரியை பார்வையாளர்கள் இதில் பார்க்கப் போகிறார்கள்.
Vivek Oberoi: 'I don't have to work for money, I only do projects I believe in'இந்தத் தொடரில் JCP ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்திற்காக விவேக் ஆனந்த் ஓபராய் பரவலான பாராட்டுகளைப் பெற்று வருகிறார். இந்த காவல்துறை அதிகாரி ரூல் புக்கில் உள்ளபடி நடந்து கொள்ளாதவன். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால், விதிகளை தனக்கேற்றபடி மாற்றிக் கொள்பவன்தான் இந்த ஜெயந்த் கவாஸ்கர். அதேபோல, தன்னுடைய உயர் அதிகாரிகளிடமிருந்து வரும் ஆதரவை அவன் விரும்புவதில்லை, அவனுக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்வான்.
இப்போது, விவேக் ஓபராய் ‘தாராவி பேங்க்’ இணையத் தொடருக்கும் தன்னுடைய அறிமுகப் படமான ‘கம்பெனி’க்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றி நினைவு கூர்ந்துள்ளார். அதில் மும்பை காவல்துறையின் இணை ஆணையரான வீரப்பள்ளி சீனிவாசன் ஐபிஎஸ் என்ற நடிகர் மோகன்லாலின் கதாபாத்திரத்தில் இருந்து ‘தாராவி வங்கி’யில் தனது கதாபாத்திரத்திற்கான உத்வேகம் பெறப் படத்தை மீண்டும் பார்வையிட்டதாகவும் கூறியுள்ளார்.
Dharavi Bank' starring Suniel Shetty and Vivek Oberoi, trailer released today. See here for more!மேலும் இது குறித்து விவேக் பகிர்ந்திருப்பதாவது, “சிலருடைய நடிப்பு மட்டும்தான் உங்கள் மனதில் வாழ்நாள் முழுக்க பதிந்திருக்கும். ‘கம்பெனி’ என்னுடைய முதல் படமாக இருந்தாலும் அதுதான் நான் பல விஷயங்களைக் கற்றுக் கொண்ட களம். அஜய் தேவகனில் இருந்து மோகன்லால் வரையும் பல சிறந்த நடிகர்களுடன் வேலைப் பார்த்து நான் நிறையக் கற்றுக் கொண்டேன். உண்மையச் சொல்ல வேண்டும் என்றால் ‘தாராவி பேங்க்’ இணையத் தொடரில் நடிப்பதற்காக  வீரபள்ளி ஸ்ரீனிவாசன், ஐபிஎஸ் மும்பையின் இணை கமிஷனராக மோகன்லால் சார் நடித்தக் காட்சிகளை நான் மீண்டும் பார்த்தேன். ஒவ்வொரு காட்சிகளையும் அவர் அதில் எப்படி அணுகினார் என்பது எனக்குத் தெளிவாக நினைவில் உள்ளது”.

மோகன்லாலின் நடிப்புக் குறித்து பாராட்டி அவர் மேலும் கூறியிருப்பதாவது, “மோகன்லால் சாருடைய அந்த நடிப்பு அவருடைய தேர்ந்த அனுபவத்தில் இருந்து வந்ததால் எந்தவொரு சிரமமும் இல்லாமல் அவர் சிறப்பாக நடித்திருந்தார். அவர் அந்த கதாபாத்திரத்தை அணுகிய விதம், அதற்காகத் தன்னைத் தயார்படுத்திக் கொண்டது, படப்பிடிப்பில் அவர் நடந்து கொண்ட விதம் என எல்லா விஷயங்களுமே எனக்கு நினைவில் இருக்கிறது. அவருடைய சில நுட்பங்களை நானும் இதில் பயன்படுத்த முயற்சி செய்திருக்கிறேன். ஏனெனில், மும்பை போலீஸ் ஃபோர்சில் உள்ள பலரும் எனக்குத் தெரியும் மேலும் அவர்களுடைய வழிகாட்டுதலும் எனக்கு உதவியாக இருந்தது”.

ஜெயந்த் கவாஸ்கர் கதாபாத்திரத்தில் உள்ள உண்மையான சவால்களையும் அவர் பகிர்ந்து கொண்டார், “உண்மையில் இதில் கடினமான ஒரு விஷயம் என்னவென்றால், சரியான விதத்தில் நம்பும்படியாக என் நடிப்பை வெளிப்படுத்துவது மற்றும் அது உயிரோட்டமாக திரையில் கொண்டு வருவது போன்ற விஷயங்கள்தான். மோகன்லால் சார் போல அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறேன் என நம்புகிறேன்”.

Previous Post

15ம் ஆண்டில் தங்கர் பச்சானின் “ஒன்பது ரூபாய் நோட்டு” !

Next Post

எது நிஜம் என் கண்மணி’ வீடியோ ஆல்பம் பாடல்!

Next Post

எது நிஜம் என் கண்மணி' வீடியோ ஆல்பம் பாடல்!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • மேலாடையை கழற்றி போஸ் கொடுத்த  பிரபல தமிழ் நடிகை.

    7 shares
    Share 7 Tweet 0
  • இப்போது சினிமா உட்பட பல இடங்களில் ஜாதி அதிகமாகி விட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • காதலர்களின் ஆபத்தை சொல்லும் ” இன்னும் ஒரு காதல் பயணம் “

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘தக்ஸ்’ திரைப்பட டிரெய்லரை பிரபலங்கள் விஜய் சேதுபதி, துல்கர் சல்மான், ஆர்யா,அனிருத் & கீர்த்தி சுரேஷ் ஆகியோர் வெளியிட்டனர்!!!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

முதல்வர் ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் ஜெ.எம்.பஷீர்..!

February 2, 2023

ஹன்சிகா நடிப்பில் ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்ட ‘ஒன்றல்ல ஐந்து நிமிடம்’ .

February 2, 2023

‘மைக்கேல்’ திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!!

February 2, 2023

அதிரடியில் மிரட்டும் நேச்சுரல் ஸ்டார் நானியின் “தசரா” திரைப்பட டீசர் !!

February 2, 2023

அசோக்செல்வன், சாந்தனு, ப்ரித்வி இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது

February 2, 2023

திரில்லரான பொழுதுபோக்கு படம்; என்னுடைய கதையை ரசித்துக் கேட்டார் தளபதி விஜய்!- நடிகர் ஆர்.ஜே.பாலாஜி

February 2, 2023
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2023 Tamil2daynews.com.

No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2023 Tamil2daynews.com.

error: Content is protected !!