தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் – லிங்குசாமி – சீனு ராமசாமி- கௌதம் வாசுதேவ் மேனன்- சுசீந்திரன்- மற்றும் பலர் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ படத்தின் முன்னோட்டம் வெளியீட்டனர்..
தேசிய விருது பெற்ற நடிகரான அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்ற படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்களான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி- துல்கர் சல்மான்- சசிகுமார் – லிங்குசாமி – சீனு ராமசாமி- கௌதம் வாசுதேவ் மேனன்- சுசீந்திரன்- நட்டி என்கிற நட்ராஜ் – பிரேம்ஜி- மற்றும் முன்னணி நட்சத்திர நடிகைகள் ஆகியோர் இணைந்து அவர்களுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்.
படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பிளான் 3 ஸ்டுடியோஸ் மற்றும் மாதன்ஸ் குரூப் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ரோஜி மேத்யூ மற்றும் ராஜூ சந்ரா ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” குடி பழக்கத்திற்கு அடிமையான எளிய கிராமத்து மக்களின் வாழ்வியல் தொடர்பான சம்பவங்களை தழுவி இப்படத்தின் கதையும், திரைக்கதையும் அமைக்கப்பட்டிருக்கிறது. குடிப்பழக்கத்திலிருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், ஜனரஞ்சகமாகவும், அனைத்து தரப்பு ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையிலும் ‘பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ தயாராகி இருக்கிறது” என்றார்.