• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘NEEK’ புகழ் பவிஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்தார்!

by Tamil2daynews
October 30, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
2
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘NEEK’ புகழ் பவிஷ் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் கஸ்தூரி ராஜா தொடங்கி வைத்தார்!

 

Zinema Media and Entertainment Ltd. சார்பில் தினேஷ் ராஜ் வழங்க, Creative Entertainers & Distributors நிறுவனத்தின் ஜி. தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும், Production No.1 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கியது.

சமீபத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான “நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்” (NEEK) திரைப்படத்தின் மூலம் பாராட்டுகளைப் பெற்ற நடிகர் பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

புகழ் பெற்ற இயக்குனர் செல்வராகவன் மற்றும் Pan-Indian நடிகர் தனுஷ் அவர்களின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா, முதல் கிளாப் அடித்து படப்பிடிப்பை தொடங்கி வைத்தார் மற்றும் படக்குழுவினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இயக்குனர் செல்வராகவன் அவர்கள் தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.
“I’m Super, Super, super happy that Pavish is going to learn from master Dhananjheyan sir”. என்று குறிப்பிட்டிருந்தார்.

பவிஷ் கடந்த ஆறு மாதங்களாக பல இயக்குனர்களிடமிருந்து வந்த திரைக்கதைகளை கேட்டபின், இயக்குனர் மகேஷ் ராஜேந்திரன் அவர்களின் கதையை தேர்வு செய்துள்ளார்.

மகேஷ் ராஜேந்திரன், பிரபல இயக்குனர் லக்ஷ்மன் அவர்களின் “போகன்” மற்றும் “பூமி” போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அவர் தற்போது இளம் தலைமுறை ரசிகர்களுக்கான ஒரு ரொமான்டிக் என்டர்டெய்னர் படத்தை இயக்கி வருகிறார்.
தெலுங்கு திரைப்பட உலகில் இருந்து ஒரு புதிய நடிகை, யூடியூப் சென்சேஷன் எனப் பெயர் பெற்ற நாகா துர்கா, தமிழில் தனது முதல் திரையறிமுகத்தைச் செய்யவிருக்கிறார்.

பிரபல ஒளிப்பதிவாளர் பி.ஜி. முத்தையா ஒளிப்பதிவு செய்கிறார், ஆரண்ய காண்டம், மத கஜ ராஜா, விடா முயற்சி போன்ற படங்களுக்கு படத்தொகுப்பு செய்த தேசிய விருது பெற்ற என்.பி. ஸ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார், பல பெரிய பட்ஜெட் படங்களில் பணியாற்றிய மகேந்திரன் கலை இயக்குனராக பணியாற்றுகிறார், ஆடை வடிவமைப்பாளராக ஹர்ஷிகா பணியாற்றுகிறார், அபிஷேக் சண்டை காட்சிகளை இயக்குகிறார். மேலும், Think Music ஆதரவுடன் புதிய இசை திறமையாளர்கள் அறிமுகமாகவிருக்கிறார்கள் அவர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும், என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்தில் முக்கிய வேடங்களில் பிரபல நடிகர்கள் பலர் இடம்பெறுகின்றனர்.

படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை இயக்குனர் விஜய்-யின்  D Studios Post குழு மேற்கொள்கிறது.
Zinema Media and Entertainment Ltd மற்றும் Creative Entertainers & Distributors நிறுவனங்கள் இதற்கு முன் இணைந்து வெளியிட்ட “பிளாக்மெயில்” (BLACKMAIL) திரைப்படம் விமர்சகர்களிடமும் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே அணியினர் மீண்டும் இணைந்து இந்த இளம் தலைமுறையினருக்கான காதல் திரைப்படத்தை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று (அக்டோபர் 27, 2025) சென்னையில் பூஜையுடன் படக்குழுவினர் அனைவரும் கலந்துகொள்ள இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று, 2026 தொடக்கத்தில் முடிவடையும் படி திட்டமிடப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இயக்குனர்-எழுத்தாளர் மகேஷ் ராஜேந்திரன் கூறுகையில்,

இந்த திரைப்படம் இளம் தலைமுறை (Gen Z) ரசிகர்களும், குடும்பங்களும் ரசிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பல பிரபல நடிகர்களும் புதிய அம்சங்களும் இணைந்துள்ளதால், அனைத்து தரப்பினருக்கும் இது பிடிக்கும் என நம்புகிறேன்.

இந்த படம் மரபும் நவீனமும் கலந்த, ஆச்சரியம் மற்றும் கவிதை நிறைந்த காதல் கதையாக உருவாகி வருகிறது. 2026 கோடை வெளியீடாக இப்படம் இருக்கும். மேலும், இத்திரைப்படம் குறித்த கூடுதல் தகவல்களும், நடிகர் பட்டியலும் விரைவில் அறிவிக்கப்படும், என்றார்.

Zinema Media and Entertainment Ltd பற்றி,

Zinema Media and Entertainment Ltd என்பது திரைப்பட மேம்பாடு, தயாரிப்பு மற்றும் விநியோகம் ஆகிய துறைகளில் முன்னணி நிறுவனமாகும். மேலும் விளையாட்டு மற்றும் தொழில்நுட்ப துறைகளில் புதுமையான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பி.ஆர்.ஓ : ரேகா
டிஜிட்டல் ப்ரோமோஷன்ஸ் :Digitally N.S.ஜெகதீசன்

Previous Post

ஜிடிஎன் படத்தில் இருந்து வெளியாகியுள்ள முதல் பார்வை போஸ்டரில் ‘இந்தியாவின் எடிசன்’ ஆக நடிகர் மாதவனின் மாற்றம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது!

Next Post

பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்

Next Post

பைசன் திரைப்படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய தமிழக முதல்வர் திரு .மு,க ஸ்டாலின் அவர்கள்

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிரைம் வீடியோ ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • விஜய் ஆதிராஜ் இயக்கும் புதிய ஆக்ஷன் பொழுதுபோக்கு திரைப்படம் ‘நொடிக்கு நொடி’ பூஜையுடன் துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • Ashima Narwal’s inspiring and cherishing travel diaries 

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.