• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

by Tamil2daynews
December 14, 2024
in சினிமா செய்திகள்
0
ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

ஜீ. வி பிரகாஷ் குமார் நடிக்கும் ‘மெண்டல் மனதில் ‘ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

 

இசையமைப்பாளரும், முன்னணி நட்சத்திர நடிகருமான ஜீ. வி பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘மெண்டல் மனதில்’  எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரும், இயக்குநருமான தனுஷ் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘மெண்டல் மனதில்’ எனும் திரைப்படத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை மாதுரி ஜெயின் நடிக்கிறார். இவர்களுடன் முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடிக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஜீ.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பாலாஜி கவனிக்க, கலை இயக்கத்தை ஆர்.கே. விஜய் முருகன் மேற்கொள்கிறார். தினேஷ் குணா எக்சிக்யூட்டிவ் புரொடியுசராக பொறுப்பேற்றிருக்கும் இந்தத் திரைப்படத்தை பேரலல் யூனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்  ஜீ. வி. பிரகாஷ் குமார் தயாரிக்கிறார்.
Imageஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கதையின் நாயகனான ஜீ.வி. பிரகாஷ் குமார் வித்தியாசமாக தோன்றுவதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. அத்துடன் ‘7 ஜி ரெயின்போ காலனி ‘, ‘ஆடவரி மாதலக்கு அர்த்தலே வெருள’ ( தமிழில் – ‘யாரடி நீ மோகினி’) ஆகிய காதல் படைப்புகளுக்கு பிறகு மீண்டும் செல்வராகவன் இயக்கத்தில் காதல் திரைப்படமாக ‘மெண்டல் மனதில்’ உருவாகிறது என்பதால் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

இதனிடையே அழுத்தமான படைப்புகளை வழங்கி ரசிகர்களிடத்தில் நன்மதிப்பை பெற்றிருக்கும் இயக்குநர் செல்வராகவனின் இயக்கத்தில் முதன்முறையாக ‘இசை அசுரன்’  ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிப்பதால்.. ‘மெண்டல் மனதில்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான தருணத்தில் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்திலும், திரையுலக வணிகர்களிடத்திலும் ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சியான் 63

Next Post

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

Next Post

பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களை ‘தொட்டுத் தொடரும் கர்மா’ ; இயக்குநர் எம்எஸ்எஸ்-ஸின் புதிய படம்

Popular News

  • சர்தார் 2 – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • “இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

குரு சோமசுந்தரம் – அனுமோல் நடிக்கும் ‘பாரிஸ் கஃபே’ செப்டம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது!

September 11, 2026

“இம்மார்டல்” வெற்றியை கொண்டாடிய தயாரிப்பாளர் – ஜிவி பிரகாஷுக்கு RX100 பைக் பரிசு!

September 11, 2026

சர்தார் 2 – விமர்சனம்

September 11, 2026

இந்திய ரசிகர்களுக்கு மிகப்பிடித்த ஃபேமிலி திரில்லர் திரைப்படமான ‘த்ரிஷ்யம் தி கன்குலூஷன்’ (Drishyam The Conclusion) அக்டோபர் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

September 11, 2026

ஒரு புதிய துணிச்சலான Zee 5-ஐ அறிமுகப்படுத்துகிறது: இந்தியாவின் ஸ்ட்ரீமிங் அனுபவத்தை மறுவரையறை செய்கிறது

September 10, 2026

‘என்ன விலை’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

September 10, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.