E5 என்டர்டைன்மெண்ட் சார்பில் காமாட்சி* *ஜெயகிருஷ்ணன் தயாரிக்கும் படம் ‘பேரன்பும் பெருங்கோபமும்’
‘இசை ஞானி’ இளையராஜா இசையமைப்பில் உருவாகி வரும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ திரைப்படத்திற்காக காதலர் தினத்தன்று ‘வாலண்டைன் போஸ்டர்’ வெளியாகிறது.
இதில் நாயகனும், நாயகியும் இந்த மண்ணின் அசலான காதலர்களைப் பிரதிபலிப்பதால்.. இந்த போஸ்டர் இளைய தலைமுறையினரிடத்தில் பெரும் வரவேற்பு கிடைக்கும்.

ஜே.பி. தினேஷ்குமார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை ஞானி இளையராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை ராமர் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சரவணன் கவனித்திருக்கிறார். பி.ஆர்.ஒ ஜான்சன்.

”கதை நாயகனின் வாழ்வில் மூன்று வெவ்வேறு காலகட்டங்களில் நடைபெறும் சம்பவங்களின் தொகுப்பாக இப்படத்தின் கதை எழுதப்பட்டிருக்கிறது. சமூகத்தால் இழைக்கப்பட்ட தீமைகளை நாயகன் எப்படி எதிர்கொண்டான்? என்பதை விறுவிறுப்பான காட்சிகளுடனும், சுவாரசியமான திருப்பங்களுடனும் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.” என்றார்.