• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் ‘கருப்பு’. ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

by Tamil2daynews
June 21, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சூர்யா மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் பிரம்மாண்டப் படைப்பாக உருவாகும் ‘கருப்பு’.  ஆர்.ஜே. பாலாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

 

தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பல தரமான படங்களைத் தயாரித்து, தனக்கென தனி இடத்தைப் பெற்றுள்ள பெற்ற ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இந்தப் பிரமாண்ட படத்தை பெரும் பொருட்செலவில் தயாரிக்கிறது. இதுவரை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் எடுத்துள்ள புகழ்பெற்ற படங்களின் வரிசையில் மிக அதிக பொருட் செலவில் உருவாகும் திரைப்படம் ‘கருப்பு’.

அதேபோல், சிறிய அளவிலான ஆனால் சமுதாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய படங்களை இயக்கிய ஆர்.ஜே. பாலாஜி, ‘கருப்பு’ படத்தின் மூலம் பட்ஜெட், திட்டமிடல் மற்றும் மிகப்பெரிய நடிகர் பட்டாளம் என அவரும் ஒரு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியுள்ளார்.

சூர்யா மற்றும் த்ரிஷா இணை இருபது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஜோடி சேரும் படம் ‘கருப்பு’. அவர்களின் முந்தைய படங்களை ஒப்பிடும்போது, இத்திரைப்படத்தில் இருவருமே முற்றிலும் புதிய, வித்தியாசமான கதாபாத்திரங்களி தோன்றவுள்ளார்கள். முதல் பார்வை, டீசர், மற்றும் ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்த இடைவெளியில் வெளியாகவுள்ளன. அவை ரசிகர்களும், திரைப்பட விரும்பிகளுக்கும் தெளிவானப் புரிதலைக் கொடுக்கும். இந்திரன்ஸ், நட்டி, ஸ்வாஸிகா, அனகா மாயா ரவி, ஷிவதா மற்றும் சுப்ரீத் ரெட்டி உள்ளிட்ட பல நடிகர்கள் மற்றும் அனுபவமிக்க கலைஞர்களின் பட்டாளம் திரைப்படத்தில் இணைந்துள்ளனர்.

சாய் அபயங்கர் இசையமைக்க, பல மகத்தான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த ஜி.கே. விஷ்ணு ஒளிப்பதிவை கையாள்கிறார். கலைவாணன் படத்தொகுப்பை மேற்கொள்கிறார். விக்ரம் மோர் மற்றும் அன்பறிவு இரட்டையர்கள் என மூன்று சண்டைப் பயிற்சிக் கலைஞர்களும் தங்கள் அற்புதமான சண்டைக் காட்சிகளுக்காக நாடு முழுவதும் பாராட்டுகளைப் பெற்றவர்கள். இவர்கள் மூவரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் உயர்தர சண்டைக் காட்சிகளை அதிரடியாக வடிவமைத்துள்ளனர். விருது பெற்ற தயாரிப்பு வடிவமைப்பாளர் அருண் வெஞ்சரமூடு இந்தப் பிரமாண்டப் படத்திற்காக மிகப்பெரிய அரங்குகளை வடிவமைத்துள்ளார்.

‘கருப்பு’ திரைப்படத்தின் படப்பிடிப்பை பொருத்தவரை ஒரு சில நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. ஒரே நேரத்தில் இறுதி கட்ட வேலைகளையும் படக்குழு கவனித்து வருகிறது. தயாரிப்பாளர்கள் ஏற்கனவெ தெரிவித்தபடி, ‘கருப்பு’ ஒரு பண்டிகை நாள் கொண்டாட்டத்துக்கான திரைப்படமாக கச்சிதமாக இருக்கும். எனவே, வெளியீட்டு தேதி மற்றும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் மற்ற ஆச்சரிய அறிவிப்புகள் என்னவாக இருக்கும் என்று யூகித்துக் கொண்டிருங்கள். உங்களுக்காக ஒரு உயர்தர பொழுதுபோக்கு விருந்து தயாராகி வருகிறது!
Previous Post

DNA – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

Next Post

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Next Post

விக்ரம் பிரபு நடிக்கும் 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா

Popular News

  • Moonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

    0 shares
    Share 0 Tweet 0
  • சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

    0 shares
    Share 0 Tweet 0
  • காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

    0 shares
    Share 0 Tweet 0
  • வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

பிரம்மாண்டமாக நடைபெற்ற “யூத்” (youth) திரைப்பட முன் வெளியீட்டு விழா

March 15, 2026

சிறை” திரைப்பட வெற்றிவிழா !!

March 15, 2026

காட்டான்’ டிரெய்லர் முத்துவின் துண்டிக்கப்பட்ட தலையைச் சுற்றியுள்ள மர்மத்தை மேலும் விரிவாக்குகிறது

March 15, 2026

வெளவல்ஸ்’ (Vowels) – விமர்சனம்

March 15, 2026

ZHEN STUDIOS பெருமையுடன் வழங்கும் “நீ Forever” மார்ச் 27 முதல் திரையில் !!

March 15, 2026

கொலைச்சேவல் – விமர்சனம்

March 13, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.