• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!

by Tamil2daynews
October 11, 2025
in சினிமா செய்திகள்
0
கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ திரைப்படம் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகிறது !!

 

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில், முன்னணி நட்சத்திர நடிகர் கார்த்தி நடிப்பில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கியுள்ள “வா வாத்தியார்”  திரைப்படம், வரும் டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இப்படம் அறிவிக்கப்பட்ட நொடியிலிருந்தே படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தொடர்ந்து வித்தியாசமான களங்களில், அழகான படைப்புகளை வழங்கி அசத்தி வரும் நடிகர் கார்த்தி மற்றும் தனித்துவமான இயக்குநரான நலன் குமாரசாமி ஆகிய இருவரும் இணைகிறார்கள் என்றவுடனே, படத்தின் மீது பலமடங்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இந்த கூட்டணியின் மாயாஜாலத்தை திரையரங்கில் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றும் வகையில், இப்படம் வரும் 2025 டிசம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவித்து, ஒரு அசத்தலான போஸ்டரை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.
Imageஇப்படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்க, சத்யராஜ், ராஜ்கிரண், கிருத்தி ஷெட்டி, ஜி. எம். சுந்தர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.முன்னணி ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.‌ கலை இயக்கத்தை டி. ஆர். கே. கிரண் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை வெற்றி கையாண்டிருக்கிறார். அனல் அரசு சண்டை காட்சிகளை அமைத்திருக்கிறார்.

பெரும் பொருட்செலவில்  ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. ஈ. ஞானவேல் ராஜா இந்தத் திரைப்படத்தை பிரம்மாண்டமாக  தயாரித்திருக்கிறார்.  அறிவிப்பு போஸ்டரின் பின்னணியில் கூட்டம் ஆர்ப்பரிக்க,   கார்த்தி சில்லவுட்டில் கையில் சவுக்குடன் நிற்கும், இந்த அறிவிப்பு போஸ்டரில் உலகம் முழுதும் 05.12.2025 என வெளியீட்டு தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது  இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாகவுள்ளது. பெரும் ஆவலைத் தூண்டியுள்ள இப்படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டிருப்பது ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Previous Post

விருஷபா – நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

Next Post

எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் ‘பேட்டில்’ (‘Battle’)

Next Post
எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் ‘பேட்டில்’ (‘Battle’)

எலைட் டாக்கீஸ் கே. பாஸ்கரன் தயாரிப்பில் நாராயணன் இயக்கத்தில் அன்புடன் அர்ஜுன், ஆராத்யா நடிக்கும் 'பேட்டில்' ('Battle')

Popular News

  • பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

    0 shares
    Share 0 Tweet 0
  • “மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

    0 shares
    Share 0 Tweet 0
  • “ஜி.டி.என்.’ திரைப்படம் இன்றைய காலத்தின் தேவையாக உள்ளது”: தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் பாராட்டு…மாநிலம் முழுவதும் உள்ள மாணவர்கள் படத்தை பார்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தல்!*

    0 shares
    Share 0 Tweet 0
  • அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் கலர் யெல்லோ இணைந்து வழங்கும் இந்தியாவின் ஃபேன்டஸி குடும்பத் திரைப்படமான, யாமி கெளதம் கர் நடிப்பில் உருவாகியுள்ள ‘நய்யி நவெல்லி’!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

மாண்புமிகு முதலமைச்சர் C. ஜோசப் விஜயின் இறுதித் திரைப்படம் ஆகஸ்ட் 21 முதல் தமிழ் ZEE5-ல் ஸ்ட்ரீமிங்

August 22, 2026

பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம்

August 22, 2026

ஆன்ஷ்வா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் பிரபு ஏகாம்பரம் இயக்கி நடிக்கும் ‘மிடில் கிளாஸ் மாப்பிள்ளை’ (MCM)

August 22, 2026

இருமுடி கட்டு – விமர்சனம்

August 22, 2026

”நடிகர் கவுண்டமணிதான் இன்ஸ்பிரேஷன்”…நடிகர் அப்துல் லீ!

August 22, 2026

“மஹாவீர் கர்ணா”; டிசம்பர் 4, 2026 அன்று வெளியாகிறது!!

August 22, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.