மலையாள சினிமாவில் ஒப்பீட்டளவில் மாஸ் மசாலா ஆக்ஷன் படங்கள் குறைவு. கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கும் அங்கு அவ்வப்போது சில மாஸ் படங்கல் வெளியானாலும் அவற்றில் எப்போதும் ரசிகர்கள் மனதில் முதன்மையாக இடம்பெறும் படம் என்று ‘லூசிஃபரை’ சொல்லலாம். இயக்குநராக அறிமுகமான முதல் படத்திலேயே தனக்கென ஒரு இடத்தை பிடித்தார் நடிகர் பிருத்விராஜ் சுகுமாறன். தனது ஆதர்ச மோகன்லாலை அதுவரை எந்த இயக்குநரும் காட்டாத மாஸ் அவதாரத்தில் காட்டிருந்தார். மாபெரும் எதிர்பார்ப்புடன் இதன் இரண்டாம் பாகமாக வெளியாகியுள்ள ‘எல்2: எம்புரான்’
முதல்வரின் இந்த நடவடிக்கையால் கேரளாவில் மத வெறுப்பும், கலவரமும் எந்நேரமும் வெடிக்க காத்திருக்கிறது. இப்படியான சூழலில் கேரளாவின் ஒரே நம்பிக்கையாக கருதப்படும் குரேஷ் ஆப்ராம் என்கிற ஸ்டீஃபர்ன் நெடும்பள்ளி (மோகன்லால்), பத்திரிகையாளர் கோவர்தனின் (இந்திரஜித்) முயற்சியால் மீண்டும் என்ட்ரி கொடுக்கிறார். ஹீரோவால் தனது மாநிலத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வர முடிந்ததா? பால்ராஜ் உடனான அவருக்கு என்ன பகை? பால்ராஜுக்கும் சையது மசூதுக்குமான (பிருத்விராஜ்) தொடர்பு என்ன? – இப்படி பல கேள்விகளுக்கு பதில் சொல்கிறது ‘எல்2: எம்புரான்’.

ஒட்டுமொத்த படமும் இடைவேளை காட்சியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் வேளையில் இடைவேளை முடிந்து படம் பார்த்தால் மோகன் அவர்களுடைய மாஸ் காட்சிகள் அவருடைய என்ட்ரி கேமராமேன் அகலம் பண்ணியிருக்கிறார்.
படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய காட்சிகள் என்றால் நெடும்பள்ளியில் மேடையில் பேசிக் கொண்டிருக்கும் மஞ்சு வாரியார் மாவோயிஸ்டுகள் தாக்க காட்டுக்குள் பதறி ஓடும் அவரைக் காப்பாற்ற வரும் மோகன்லாலின் சண்டை காட்சி உலக தரத்திற்கு இணையானது ஸ்டண் மாஸ்டர் சில்வா பின்னி எடுத்திருக்கிறார்.
படத்தில் மோகன்லாலின் ஸ்டைலிஷ் அவர் நடந்து வரும் நடை உடை முக பாவனைகள் அனைத்தும் படத்தின் மாஸ் ரகம் ரசிகர்கள் கைதட்டி கொண்டாடுவார்கள்.
பிரித்திவிராஜ் ஒரு சில காட்சிகளே வந்தாலும் படத்தில் இயக்குனராக இருந்தும் ஸ்கோர் செய்கிறார்.
மஞ்சு வாரியர் டோமினோ தாமஸ் இருவரின் தங்களது பங்களிப்பை படத்தில் பக்காவாக கொடுத்திருக்கிறார்கள்.
பிரித்திவிராஜ் அவருடைய டைரக்ஷன் இல்ல சொல்ல போகணும்னா குஜராத் கலவர காட்சிகளை ரொம்பவும் அப்பட்டமாக காட்டாமல் நாசுக்காக காட்டி இருப்பது அவரின் இயக்குனரின் திறமை.
படத்தில் முக்கிய நாயகன் என்று சொன்னால் சண்டை பயிற்சி இயக்குனரை தான் சொல்ல வேண்டும் படத்தின் ஒவ்வொரு சண்டை காட்சிகளும் தெறிக்க விட்டிருக்கிறார் ஸ்டண்ட் சில்வா. அதிலும் படத்தின் இறுதி சண்டைக்காட்சி உலகத்தரம் வாய்ந்தது.
படம் சுமார் 3 மணி நேரம் ஓடினாலும் படம் பார்க்கும் பொழுது எங்கேயுமே சலிப்பை தட்டவில்லை அந்த அளவுக்கு விறுவிறுப்பான திரைக்கதையில் இயக்குனராக ஜொலிக்கிறார் பிருத்திவிராஜ்.
மொத்தத்தில் இந்த L2-எம்புரான் படம் விடுமுறைக்கு ஏற்ற விருந்து எல்லோரும் பார்க்கலாம்.