ரெஜினா கசான்ட்ரா நடிக்கும் “தி வைவ்ஸ்” (The Wives) – மதுர் பந்தார்க்கர் இயக்குகிறார்!
Rocket Boys, Jaat, Farzi, Kesari Chapter 2 போன்ற பிரபல ஹிந்தி வெப் சீரிஸ் மற்றும் திரைப்படங்களில் தனது துடிப்பான நடிப்பால் கவனம் பெற்ற ரெஜினா கசான்ட்ரா, இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மதுர் பந்தார்க்கருடன் புதிய படத்தில் நடிக்க தயாராக இருக்கிறார். இந்த புதிய திரைப்படம் “தி வைவ்ஸ்” எனும் தலைப்பில் உருவாகிறது.
தேசிய விருது பெற்ற இயக்குநர் மதுர் பந்தார்க்கர், Fashion, Page 3, Heroine போன்ற படங்களில் பெண்களின் உணர்வுகளையும் வாழ்க்கை பாதைகளையும் மையமாகக் கொண்டு கதைகளை இயக்கி உள்ளார். தற்போது, தி வைவ்ஸ் மூலமாக மீண்டும் அதே பாதையைத் தொடர்கிறார். இந்தப் படம், பெண்களின் வலிமை, உணர்வுகளின் அடுக்கு அடுக்கான வெளிப்பாடுகள் மற்றும் தைரியமான பார்வைகளைக் கூறும் திரைப்படமாக இருக்குமென சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.








