• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Advertisement
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

டிராக் மாறும் நடிகர் ரஹ்மான் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் #பேட்பாய்ஸ்

by Tamil2daynews
September 8, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

டிராக் மாறும் நடிகர் ரஹ்மான் எதிர்பார்ப்பை கூட்டியிருக்கும் #பேட்பாய்ஸ்

 

தமிழ்,மலையாளம்,தெலுங்கு,இந்தி மொழிகள் உட்பட 200க்கும் மேலான படங்களில் ஹீரோவாக நடித்த ரஹ்மான்,இப்பொழுது நடித்து வெளிவரவிருக்கும் படம் #பேட்பாய்ஸ். காதல்,செண்டிமெண்ட்,ஆக்‌ஷன் கேரக்டர்களில் நடித்திருந்தாலும், காமடியோடு கலந்த ஆக்‌ஷன் கேரக்டரில் இதுவே முதல் தடவையாக இதில் நடித்திருப்பது சிறப்பு. தனது வழக்கமான கேரக்டரிலிருந்து மாற்றி நடித்த இப்பட டிரைய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. பெரும் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் செப்டம்பர் 13ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
எவர்கிரீன் நடிகர் ரஹ்மான் இப்படம் பற்றி கூறியதாவது!

“பேட் பாய்ஸ்”  – பல ஆண்டுகளுக்கு பிறகு நகைச்சுவை டிராக்கில் நான் மிகவும் ரசித்து ரிலாக்ஸாக நடித்த படம். கடந்த சில ஆண்டுகளாக தொடர்ச்சியாக சீரியஸ் வேடங்களில் நடித்து அலுத்து போன வேளையில் தான் டைரக்டர் ஓமர் இந்த கதையை என்னிடம் சொன்னார். அவரும் எழுத்தாளர் சாரங்கும் கதை சொல்லும் போதே நான் சிரித்து..சிரித்து கொண்டேதான்  கேட்டேன். வயது பாரமட்சம் இல்லாமல் நம் மனதில் ஒரு சிறுபிள்ளைத்தனம், குழந்தைத்தனம் ,ஒரு ஹீரோயிசம் இருக்கும். இது எல்லோரது மனதிலும் இருக்கும். அப்படி ஒரு கனவு உலகில் வாழ்பவர் தான் ஆண்டப்பன் என்ற ஹீரோ கேரக்டர். அவனுக்கு படிப்பு கிடையாது. ஆனால் மனதில் நிறைய அன்பு இருக்கிறது. எல்லோருக்கும் உதவுவான் என்பது தான் அவனது ஒரே தகுதி. இது வரை நான் நடித்த படங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்ட வேடம். வித்தியாசமான body language, appearance, activities எல்லாம் ஆண்டப்பனுக்கு தான். இந்த கதையும் கதாபாத்திரமும் எனக்கொரு change ஆக அமைந்துள்ளது.என்ன நம்பிக்கையில் ஓமர் இந்த ஹீரோ கேரக்டருக்காக என்னை தேர்ந்து எடுத்தார் என்பது வியப்பாக உள்ளது. ஏனெனில் நான் இது நாள் வரை இப்படி ஒரு முழு நீள நகைச்சுவை படமோ, கதாபாத்திரமோ செய்ததில்லை. இதுவரை நடித்த மற்ற சினிமாக்களை விட மிகவும் ரிலாக்ஸாக இதில் நடித்தேன். எல்லோரையும் கவரும் ஒரு ஃபன் மூவி… இனி மேல் இது போன்ற காமடி கதைகளில் நடிக்க வேண்டும் என்பது தான் என் விருப்பம்… பேட் பாய்ஸ் மனதுக்கு மிகவும் நிறைவாக உள்ளது…. எல்லோரும் குடும்பத்துடன் ரசிக்க வேண்டிய படம்.”

ஆல்பி ஒளிப்பதிவு செய்ய வில்லியம் பிரான்சிஸ் இசை அமைக்கிறார். போனிக்ஸ் பிரபு சண்டை காட்சிகள் அமைத்துள்ளார். பேட் பாய்ஸ் பாடல்கள் மற்றும் டீஸர் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பு பெற்று வைரலாகி இருப்பது இப்படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடதக்கது.
Previous Post

அத்வே, பி ரவிசங்கர், திருமால் ரெட்டி, அனில் கடியாலா, எஸ்ஜி மூவி கிரியேஷன்ஸ் இணையும் அதிரடியான பான் இந்தியா திரைப்படமான, “சுப்ரமண்யா”, படத்தின் அசத்தலான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை, கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ் குமார் வெளியிட்டார் !!

Next Post

“கடைசி உலகப்போர்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!

Next Post

“கடைசி உலகப்போர்” திரைப்பட முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!

Popular News

  • பழநி தல வரலாறு

    பழநி தல வரலாறு

    1 shares
    Share 0 Tweet 0
  • ‘The Last Customer’

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘HIT 3’ புகழ் கோமலி பிரசாத் தமிழில் அறிமுகமாகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஹ்ரிதிக் ரோஷன், ஜூனியர் என். டி. ஆருக்கு ‘வார்-2’ திரைப்படத்தின் அதிரடியான புதிய அறிவிப்பை பிறந்தநாள் பரிசாக அளிக்க திட்டமிட்டுள்ளார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • பிக்பாஸ் அர்ச்சனா : “வலுவான புதுமையான கதாபாத்திரங்களே சினிமாவில் என் நோக்கம்!”

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

யோகி பாபு – ரூக்ஸ் மீடியா கூட்டணியில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நிறைவு

May 20, 2025

”‘மையல்’ என் வாழ்வை மாற்றிய படம்”- நடிகர் சேது!

May 20, 2025

சூர்யா நடிப்பில் வெங்கி அட்லூரி எழுதி இயக்கும் இரு மொழி படமான ‘#சூர்யா 46 ‘ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது

May 20, 2025

மைத்ரி மூவி மேக்கர்ஸ் & என்.டி.ஆர். ஆர்ட்ஸின் ஆக்‌ஷன் எபிக் ‘என்.டி.ஆர். நீல்’ திரைப்படத்திற்கு என்.டி.ஆர். பிறந்தநாளன்று அப்டேட் இல்லை!

May 20, 2025

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் ‘ ஏஸ் ‘ (ACE ) பட பத்திரிக்கையாளர் சந்திப்பு!

May 20, 2025

பவர்ஸ்டார் பவன் கல்யாணின் ஹரி ஹர வீர மல்லு ஜூன் 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது!

May 20, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.