• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சாரா கலைக்கூடம் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஆகக்கடவன.

by Tamil2daynews
September 23, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
44
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சாரா கலைக்கூடம் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக அனிதா லியோ மற்றும் லியோ வெ ராஜா இணைந்து தயாரிக்கும் திரைப்படம் ஆகக்கடவன.

 

புதுமுகமான ஆதிரன் சுரேஷ் கதை நாயகனாக நடித்துள்ளார். இவர் நாளைய இயக்குனர்கள் நிகழ்ச்சியில் வந்த சில குறும்படங்களிலும் அட்டக்கத்தி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு போன்ற படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் வின்சென்ட், சி ஆர் ராகுல், மைக்கேல், ராஜசிவன், சதீஷ் ராமதாஸ், தட்சணா மற்றும் நிவாஸ் நடித்துள்ளனர்.

இப்படத்தை கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் சென்னை திரைப்படக் கல்லூரியில்

பயின்ற முன்னாள் மாணவரான தர்மா,

திரைப்படக் கல்லூரியில் இவர் இயக்கிய ஒரு குறும்படம் 3 மாநில விருதுகளை பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஒளிப்பதிவு லியோ வெ ராஜா, இசை சாந்தன் அன்பழகன், படத்தொகுப்பை சுமித் பாண்டியன் மற்றும் புமேஷ் தாஸ் இணைந்து  செய்து இருக்கிறார்கள்..

இப்படத்தில் மூன்று பாடல்கள் உள்ளன, பாடல் வரிகளை விக்கி எழுத,வல்லவன் மற்றும் விக்கி  பாடியுள்ளனர்,

இப்படத்தைப் பற்றி இயக்குனர் தர்மா கூறுகையில்…

எண்ணம் போல் வாழ்க்கை என்பார்கள், ஆனால் நானோ நாம் பேசும் சொற்களை பொருத்தும் நம் வாழ்க்கை அமையும் * என்பேன்..

அதாவது, ஒருவர் வாயிலிருந்து வரும் வார்த்தையே அவர் வாழ்வின் நன்மை, தீமையை தீர்மானிக்கும், ஆம் ஒருவர் நன்மையானவற்றை பேசினால் அவர் வாழ்வில் நல்லதே நடக்கும் இதுவே எதிர்வினைக்கும் பொருந்தும் என்பதே பிரபஞ்ச விதி, இதை மையமாகக் கொண்டுதான் இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது,

இதற்கு இயல்பாக நடிக்க கூடிய புதுமுக நடிகர்கள் தேவைப்பட்டார்கள் அவர்களின் இயல்பான நடிப்பாலும் விறு விறுப்பான திரை கதையாலும் இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான அனுபவத்தை தரும் என்றார்,

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அடுதுள்ள குன்றத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி, தலைவாசல், சின்ன சேலம், சிறுவாச்சூர், கல்லாநத்தம்,தகரை போன்ற இடங்களில் படபிடிப்பு நடந்து முடிந்துள்ளது.

தற்போது போஸ்ட் ப்ரோடுக்ஷன் இறுதி கட்டப் பணிகளில் உள்ளோம்,ஓரிரு மாதத்தில் திரைக்கு வருகிறோம் என்றார்.
Previous Post

குழந்தை நட்சத்திரம் லக்‌ஷனா ரிஷியை, ‘வருங்கால கதாநாயகி’ என இயக்குனர்கள் கே.பாக்யராஜ், பேரரசு இருவரும் “எங்க அப்பா” ஆல்பம் இசை விழாவில் பாராட்டினார்கள்!

Next Post

திரைப் பிரபலங்கள் வாழ்த்த, பிரம்மாண்டமாக நடந்த ஜெயம் ரவியின் ‘பிரதர்’ இசை வெளியீட்டு விழா.

Next Post

திரைப் பிரபலங்கள் வாழ்த்த, பிரம்மாண்டமாக நடந்த ஜெயம் ரவியின் 'பிரதர்' இசை வெளியீட்டு விழா.

Popular News

  • டார்க் ஜெயண்ட் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • பாபுஜி புரொடக்ஷன்ஸ் அபிஜித் பாபுஜி தயாரிப்பில் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் இந்திரன்ஸ், மதுபாலா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் மனித உணர்வுகளை பேசும் ‘சின்ன சின்ன ஆசை’

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் அல்லு அர்ஜூனின் ’AA23’ திரைப்படத்தின் தீம் இசையை பயன்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.