• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

by Tamil2daynews
September 6, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சைக்கோ த்ரில்லர் படமாக உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’ படத்திற்கு யு/ஏ சான்றிதழ்

 

மகேந்திரா ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் மகேந்திரன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘இரவின் விழிகள்’. இப்படத்தை இயக்குநர் சிக்கல் ராஜேஷ் இயக்குகிறார்.
மகேந்திரா கதையின் நாயகனாக நடிக்க  கதாநாயகியாக நீமா ரே நடித்திருக்கிறார். இவர் கன்னடத்தில் வெளியான  பிங்காரா என்கிற படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் பெற்றவர். மேலும் முக்கிய வேடங்களில்  நிழல்கள் ரவி, மஸ்காரா அஸ்மிதா, கும்தாஜ், ஆண்சி, சேரன் ராஜ், சிசர் மனோகர், ஈஸ்வர் சந்திரபாபு, கிளி இராமச்சந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
இப் படம்  வலைத்தளங்களை வைத்து வித்தியாசமான கதை அம்சத்துடன் பார்வையாளர்களை இருக்கை நுனியில் அமர வைக்கும் விதமாக  சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இரவின் விழிகள் படம் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர்.
இந்த மாத இறுதியில் அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் படம் வெளியாகும் விதமாக தயாராகி வருகிறது.
விரைவில் இந்த படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
இப் படத்தின் படப்பிடிப்பு வெள்ளிமலை பகுதியில் நடைபெற்று வந்தபோது அந்தப் பகுதிக்கு சுற்றுலா வந்திருந்த சில இளைஞர்கள் படப்பிடிப்புத் தளத்தில் அத்துமீறி  படத்தின் கதாநாயகி நீமா ரேவை கையைப் பிடித்து இழுத்து வம்பு செய்ய முற்பட்டனர். இயக்குநர் சிக்கல் ராஜேஷ் அவர்களை பொறுமையாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்தும் பலன் அளிக்கவில்லை.
பின்னர் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்த ஒரு சில ( தளபதி ) விஜய் ரசிகர்கள் உதவியோடு படப்பிடிப்பிற்காக வைத்திருந்த சாட்டையை எடுத்து சுழற்றிய பிறகே அந்த ரோமியோக்கள் ஆளைவிட்டால் போதும் என தலை தெறிக்க ஓடினார்களாம். இந்த நிகழ்வால் கதாநாயகி நீமா ரே ரொம்பவே பயந்துபோய் விட்டாராம்.
அதேபோல அன்றைய தினம் இரவே ‘வாடா கருப்பா’ என்கிற ஆக்ரோஷமான பாடல் ஒன்று படமாக்கப்பட்டது. இந்த பாடல ஏற்படுத்திய அதிர்வில் அந்த பகுதியில் இருந்த பெண்கள் சிலருக்கு இயல்பாகவே சாமி வந்து ஆடத் துவங்கி விட்டனர். காலையில் நடந்த சம்பவத்திலேயே அதிர்ந்து போயிருந்த நாயகி நீமா ரே இதை பார்த்து இன்னும் மிரண்டு போனாராம். அதன் பிறகு அவரை ஒரு வழியாக சமாதானப்படுத்தியதில் மறுநாள் படப்பிடிப்பிலிருந்து இயல்பு நிலைக்கு மாறினாராம் நீமா ரே.
இந்த படத்திற்கு ஏ.எம் அசார் இசையமைத்துள்ளார். பாஸ்கர் ஒளிப்பதிவை கவனிக்க   ஆர்.இராமர் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். சண்டைப் பயிற்சியை சரவெடி சரவணன் மற்றும் சூப்பர்குட் ஜீவா ஆகியோரும் நடனத்தை எல்கே ஆண்டனியும் வடிவமைத்துள்ளனர்.
Previous Post

‘பிளாக்மெயில்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு!

Next Post

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Next Post

பிரைம் வீடியோ அறிவிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான அதிரடி திரில்லர் கூலி, செப்டம்பர் 11 முதல் உலகளவில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

    0 shares
    Share 0 Tweet 0
  • மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மாஸ் மகாராஜா ரவி தேஜா நடிப்பில், சிவா நிர்வாணா இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘இருமுடி’ திரைப்படத்தின் தெலுங்கு மற்றும் தமிழ் மொழி டிரெய்லர் வெளியானது!

August 13, 2026

நூறு சாமி திரைப்படம் ZEE5-இல் 100 மில்லியன் பார்வை நிமிடங்களை கடந்தது; காதல், குடும்பம் மற்றும் இரண்டாவது வாய்ப்புகளைப் பேசும் அதன் உணர்வுபூர்வமான கதையால் ரசிகர்களின் இதயங்களை வென்றது

August 13, 2026

அசோக் செல்வன் நடிக்கும் ‘அன்பில் அவன்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு

August 13, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!

August 12, 2026

நடிகர் வைபவ்வின் ‘மாறுவேஷம்’ திரைப்படம் யூ/ஏ சான்றிதழுடன் அக்டோபர் 1 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!

August 12, 2026

‘பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !

August 12, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.