• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)

by Tamil2daynews
October 18, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
ராஜ் B. ஷெட்டி (Raj B. Shetty ) நடிக்கும் ‘ஜுகாரி கிராஸ்’ (Jugaari Cross)

பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் ( Poornachandra Tejaswi’s ) ‘ஜுகாரி கிராஸ்’ நாவலின் உலகில் காலடி வைக்கும் ராஜ் B. ஷெட்டி!

சமீப காலங்களில் நாவல்களை அடிப்படையாகக் கொண்ட திரைப்படங்களின் எண்ணிக்கை குறைந்து விட்டது. பிரபல இலக்கிய படைப்புகளை திரை உலகில் கொண்டு வர வெகு சிலரே துணிகிறார்கள். ஆனால் இப்போது பிரபல எழுத்தாளர் பூர்ணச்சந்திர தேஜஸ்வியின் புகழ்பெற்ற நாவல் ‘ஜுகாரி கிராஸ்’ திரைப்படமாக உருவாகிறது.

தனது அடுத்தப்படமான ‘கரவளி’ மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இயக்குநர் குருதத்த கனிகா, தற்போது ‘ஜுகாரி கிராஸ்’ எனும் பிரபல நாவலை படமாக்கும் மிக தைரியமான முயற்சியில் களமிறங்கியுள்ளார்.

முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் டீசர்  தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பிரபல நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படத்தில், யார் ஹீரோவாக நடிப்பார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். டீசர் அந்த  ஆவலை நிவர்த்தி செய்துள்ளது. முன்னணி நட்சத்திரமான  ராஜ் B. ஷெட்டி இதில் ஹீரோவாக நடிக்கிறார்.

புதிய டீசர் மொட்டையடித்த தலை, தெறிக்கும் இரத்தம் மற்றும் சிவப்பு இரத்தினகற்களின் காட்சிகளுடன்,  மிக அழுத்தமான பின்னணி இசையும் கலந்து, ரசிகர்களின் ஆர்வத்தையும் எதிர்பார்ப்பையும் பல மடங்காக உயர்த்தியுள்ளது.
இயக்குநர் குருதத்த கனிகா மற்றும் நடிகர் ராஜ் B. ஷெட்டி முன்னதாக ‘கரவளி’ படத்தில்  இணைந்திருந்தனர். இப்போது மீண்டும் ‘ஜுகாரி கிராஸ்’ மூலம் இருவரும் கைகோர்த்துள்ளதால் இப்படத்தின் மீதான  எதிர்பார்ப்பு மேலும் உயர்ந்துள்ளது ‘கரவளி’ இன்னும் திரைக்கு வரவில்லை என்றாலும், ‘ஜுகாரி கிராஸ்’ பட வேலைகள் தொடங்கி விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது கதாபாத்திரங்களை மிகவும் கவனமாகத் தேர்ந்தெடுப்பதில் பெயர் பெற்றவரான ராஜ் B. ஷெட்டி, *‘சு ஃப்ரம் சோ’*படத்தில் குருஜியாகவும், *‘கரவளி’*யில் காளைகளுடன் நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இப்போது அவர் ‘ஜுகாரி கிராஸ்’ எனும் அழுத்தமான நாவலின்  உலகில் நுழைகிறார்.  இது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான படியாகும்.

இயக்குநர் குருதத்த கனிகாவுடன்  மீண்டும் ராஜ் B. ஷெட்டி இணைந்திருப்பது, இயக்குநர் மீதான அவரது நம்பிக்கையையும் உறுதியையும் காட்டுகிறது. டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில், படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

‘கரவளி’ படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் இறுதிக்கட்ட பணிகளில் குருதத்த கனிகா ஈடுபட்டு வருகிறார். அதே நேரத்தில், ‘ஜுகாரி கிராஸ்’ முன் தயாரிப்பு பணிகளிலும் இணைந்துள்ளார். இந்த படத்தை அவர் தனது குருதத்த கனிகா ஃபிலிம்ஸ் (Gurudatta Ganiga Films) என்ற நிறுவனத்தின் கீழ் தயாரித்து, இயக்குகிறார். ‘கரவளி’ படத்திற்கு  ஒளிப்பதிவு செய்த அபிமன்யு சாதானந்தன் மீண்டும் ‘ஜுகாரி கிராஸ்’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். சச்சின் பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தில் பங்குபெறவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்

Previous Post

சிலம்பரசன் TR – வெற்றிமாறன் – அனிருத் – கலைப்புலி எஸ் தாணு கூட்டணியில் உருவாகும் ‘அரசன்’படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியீடு

Next Post

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : ‘தி டார்க் ஹெவன் ‘படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

Next Post

உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும் : 'தி டார்க் ஹெவன் 'படக் குழுவினருக்கு இயக்குநர் மித்ரன் ஆர் .ஜவகர் பாராட்டு!

Popular News

  • தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

    0 shares
    Share 0 Tweet 0
  • வெப்பம் குளிர் மழை – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • 50 லட்சம் செலவில் ‘பங்களா’ செட்!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் விவேக் ஆத்ரேயா – டி வி வி என்டர்டெய்ன்மென்ட் கூட்டணியில் உருவான ‘சூர்யா’ஸ் சாட்டர் டே’ எனும் பான் இந்திய திரைப்படத்தின் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படம் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் ஆர்யாவின் “கேப்டன்” படப்பிடிப்பு நிறைவடைந்தது !

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.