• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

படவா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

by Tamil2daynews
March 8, 2025
in விமர்சனம்
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
படவா – விமர்சனம் ரேட்டிங் – 4 / 5

நந்தா கே.வி. இயக்கிய ஒரு அதிரடி தமிழ் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் விமல் மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசை ஜான் பீட்டர் செய்துள்ளார், மேலும் படத்தை ஜான் பீட்டர் தனது தயாரிப்புப் பணிகளுக்க ஜான் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

சூரியுடன் ஊர்..ஊஹூம்.. கிராமத்தைச் சுற்றி வருகிறார் நாயகன் விமல். அதோடு,  கண்ணில் படும் பொருட்களை களவாண்டு,  சாராயமாக உள்ளே இறக்குகிறார்கள்.  ஏதாவது அக்கப்போர் செய்து ஊர் மக்களை உண்டு இல்லை என்று ஆக்குகிறார்கள்.

நொந்துபோன மக்கள், விமலை நாடு கடத்த திட்டமிடுகிறார்கள். எல்லோரும் ஆளுக்கு கொஞ்சம் பணம் போட்டு, மலேசியாவுக்கு வேலைக்கு அனுப்புகிறார்கள். அங்கே சின்சியராக வேலை பார்க்கிறார் விமல்.ஆனாலும் திடுமென வேலை பறிபோக, ஊருக்குத் திரும்புகிறார். இங்கே தன்னை ஆளாளுக்கு டார்ச்சர் செய்வார்கள் என பயந்துகொண்டே வருகிறார்.ஆனால் ஊரே அவரை கொண்டுகிறது.இதற்குக் காரணம் என்ன என்பதையும்,  ஊரையே தனது சுயநலத்துக்காக பலிகடாவாக்கும் வில்லன் என்ன ஆனான் என்பதையும் சொல்வதுதான் மீதிக்கதை.

அடுத்தவருக்கு டார்ச்சர் கொடுப்பது,  காதலியிடம் வழிவது,  வில்லனிடம் ஆக்ரோசமாக மோதுவது என பல படங்களில் செய்த கதாபாத்திரம்தான் விமலுக்கு.  ஆனாலும் ரசிக்கவைக்கிறார் என்பது உண்மை.அதுவும், பஞ்சாயத்துத் தலைவரான பிறகு ஏற்படும் மாற்றங்களை தனது உடல் மொழியிலும் வெளிப்படுத்தி ஈர்க்கிறார்.அதே போல வழக்கமாக நாயகனுடன் சுற்றும் காமெடி கதாபாத்திரம்தான் சூரிக்கு. யெஸ்… இவரும் ரசிக்கவைக்கிறார்.நாயகியாக நடித்திருக்கும் புதுவரவு ஷ்ரிதா ராவ். ஒன்றிரண்டு காட்சிகளில் காதலித்து, ஒரு காட்சியில் கோபித்து, இரண்டு டூயட் பாடுவதோடு சரி.Vimal's 6-year-old 'Badava' inspired by Vishal's 'Madha Gaja Raja' gets a release date | Tamil Movie News - The Times of India
விமலின் அக்காவாக வரும் தேவதர்ஷினி, மாமாவாக வரும் நமோ நாராயணன் இருவருமே இயல்பாக நடித்து கவர்கின்றனர்.

வில்லனாக நடித்திருக்கும் கே.ஜி.எப் ராம் எப்போதும் போல உருட்டல் மிரட்டலுடன் வருகிறார்.. மற்றபடி சொல்லிக்கொள்ளும்படியான காட்சிகள் அவருக்கு இல்லை.ஜான் பீட்டரின் இசையில் பாடல்கள் லயிக்க வைக்கின்றன.  பின்னணி இசையும் படத்துக்கு பலம்.ராமலிங்கத்தின் ஒளிப்பதிவு சிறப்பு.  கிராமத்து அழகை, அள்ளித்தந்திருக்கிறது.

திரைக்கதையில் புதுமை இல்லை என்றாலும் ரசிக்கவைத்துவிடுகிறார் இயக்குநர் கே.வி.நந்தா. அதோடு, தமிழ்நாட்டை பாதிக்கும் கருவேல மர பாதிப்பை மிகச் சிறப்பாக சொல்லி இருக்கிறார்.  அதே நேரம், இந்த கருவேல மர பாதிப்பு குறித்து பெரிய அளவில் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ. இதற்காக நேரடியாக களத்தில் இறங்கினார். அதோடு,  உயர் நீதி மன்றத்தில் வழக்கும் தொடுத்தார். அவரை படத்தின் இறுதியிலாவது குறிப்பிட்டு இருக்கலாம்.
மற்றபடி, பாடம் நடத்துவது போல் இல்லாமல், படத்துடன் ஒட்டிய காட்சிகளில்.. அதே நேரம் மனதில் தைக்கும்படி நல்ல ககுரத்தை விதைத்திருக்கிறார் இயக்குநர்.இதற்கு, சூப்பர்குட் சுப்ரமணியன் கதாபாத்திரத்தை சரியாகப் பயன்படுத்தி இருக்கிறார்.

மொத்தத்தில் இன்றைய காலகட்டத்தில் கொலை, கொள்ளை என்று வரும் படங்களில் நடுவே கலகலப்பான காமெடியான திரைக்கதை கொண்டஇந்த படவா அனைவரையும் கவர்வான்.

மொத்தத்தில் இந்த படவா , சூப்பர் டா.
Previous Post

லெக் பீஸ் – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

Next Post

தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட ‘வருணன்- காட் ஆஃப் வாட்டர்” திரைப்படத்தின் முன்னோட்டம்

Next Post

தயாரிப்பாளர் அன்புசெழியன் வெளியிட்ட 'வருணன்- காட் ஆஃப் வாட்டர்'' திரைப்படத்தின் முன்னோட்டம்

Popular News

  • மக்கள் தலைவா – விமர்சனம்

    மக்கள் தலைவா – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • தமிழ் சினிமாவின் முதல் வாலிபால் திரைப்படம் “அட்டாக்கர்” படபூஜையுடன் இனிதே துவங்கியது

    0 shares
    Share 0 Tweet 0
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான ‘அரவிந்த்’ மூலம் ராக்ஸ்டார் அனிருத் புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறார்!

    0 shares
    Share 0 Tweet 0
  • சத்யஜோதி பிலிம்ஸ் – சீயான் 63 அடுத்த கட்டத்திற்கு நகர்வு! தொடங்கியது படப்பிடிப்பு !

    0 shares
    Share 0 Tweet 0
  • ஆஸ்திரேலியாவில் திருமணம் செய்து கொண்டார் தயாரிப்பாளர் தீபன் பூபதி; மணமகள் நிவேதிதா கிரி

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.