• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

தி கோட் – விமர்சனம்

by Tamil2daynews
September 6, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

தி கோட் –  விமர்சனம் 

 

வெங்கட் பிரபு இயக்கி விஜய் நடித்துள்ள தி கோட் திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. விஜயின் சினிமா கரியரில் வெளியாகும் கடைசி இரண்டு படங்களில் ஒன்று தி கோட். அதனால் இப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் குவிந்துள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற  வைத்த திரைப்படம் தி கோட்.

தி கோட் படத்தின் டிரைலரிலேயே கதை சொல்லப்பட்டிருக்கிறது. விஜய்( காந்தி) பிரபுதேவாப் (கல்யாண்), பிரசாந்த் (சுனில்) ஜெயராம்( நஸிர்) , அஜ்மல் அனைவரும் SATS எனப்படும் ஆண்டி டெரரிஸம் ஸ்பெஷலிஸ்ட் குழுவிற்காக ரகசியமாக சேலை செய்து வருகிறார்கள். இதே துறையில் பணியாற்றிய மேனன் (மோகன்) தீவிரவாதிகளுக்கு உதவி செய்து தேசத்துரோகியாக அறிவிக்கப்படுகிறார். படத்தின் தொடக்கத்தில் கென்யாவில் காந்தியின்  சாட்ஸ் குழு ஒரு மிஷனை நடத்தி முடிக்கிறார்கள். இதில் மேனனின் மகன் உட்பட அவரது குடும்பம் இறந்துவிடுகிறது . உயிர்தப்பும் மேனன் காந்தியை அவரது மகனான இன்னொரு விஜயை  வைத்தே பழிவாங்க நினைக்கிறார். படத்தின் முதல் பாதி முழுவதும் ஆக்‌ஷன் காமெடி ஃபேமிலி செண்டிமெண்ட் என செல்லும் கோட் இரண்டாம் பாகத்தில் தந்தை மகன் என இரு விஜய்களின் நடுவா மோதலாக தொடர்கிறது

சாதாரணமான ஒரு பழிவாங்கல் ஸ்டோரியை வைத்துக்கொண்டு அதன் நீது ஒரு  ஆக்‌ஷன் மசாலா த்ரில்லருக்கான திரைக்கதை சிறப்பாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர். வழக்கமாக வெங்கட் பிரபு தனது படங்களில் எடுத்துக்கொள்ளும் சுதந்திரத்தை இப்படத்திலும் எடுத்துக்கொண்டு தனக்கே உரிய மாஸான தருணங்களை உருவாக்கியிருக்கிறார்.
Goat movie images 4k 1200

வெங்கட் பிரபு படங்களில் இருக்கும் அடல்ட் காமெடிகள் விஜய்க்கு நன்றாக வொர்க் அவுட் ஆகியிருக்கின்றன.

முக்கியமாக பார்வையாளர்களை இயக்குநர் குறைத்து எடைபோடாமல் அதற்கேற்ற வகையில் படத்தை அடுத்தடுத்த கட்டத்தில் விறுவிறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்திருக்கிறார்கள். எப்படியான ட்விஸ்ட் என்றாலும் எப்படியும் ஆடியன்ஸ் கண்டுபிடித்து விடுவார்கள் என தெரிந்து  அதை நீண்ட நேரம் ரகசியமாக வைத்து பயனில்லை என்று இயக்குநர் தெளிவாக ட்விஸ்டுகளை தானே ரிவீல் செய்துவிடுகிறார். அதை ஒரு மாஸான தருணமாகவும் மாற்றிவிடுகிறார். அப்பா விஜயின் கதாபாத்திரம் மாஸ் என்றால் மகன் விஜய்க்கு முற்றிலும் வித்தியாசமான ஒரு இயல்பை கொடுத்திருக்கிறார்கள். சந்தானம் , எஸ்.ஜே சூர்யா , பிரகாஷ் ராஜ் என விஜய் எல்லா நடிகர்களின் மாடுலேஷனிலும் ரசிகர்களை என்டர்டெயின் செய்ய முயற்சி செய்திருக்கிறார்.
Movie Stills : Thalapathy Vijay from The GOATபடத்தின் ஏ ஐ மூலம் விஜயகாந்த் வரும் காட்சி படத்தின் கதையோடு சேர்ந்து வருவது கேப்டன் விஜயகாந்திற்கு ஸ்பெஷல் ட்ரிபியூடாக அமைந்துள்ளது. இது தவிர்த்து கிசுகிசுக்கப்பட்ட ஒரு சில நடிகர் நடிகைகள் கேமியோ ரோலில் வந்து க்ளைமேக்ஸ் வரை ஹைப் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

யுவன் ஷங்கர் ராஜாவின் இசை காட்சியின் விறுவிறுப்பான தன்மையை கூட்டும் வகையில் அமைந்துள்ளது. விசில் போடு பாடலுக்கு நிறைய விமர்சனங்கள் வந்தபின் திரையரங்கத்தில் ரசிகர்கள் கொண்டாடுவதற்கு ஏற்ற வகையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. க்ளைமேக்ஸ் காட்சியில் ஒரு பக்கம் சி.எஸ்.கே மேட்ச் இன்னொரு பக்கம் ஆக்‌ஷன் என ரசிகர்களுக்கு கொண்டாட்ட விருந்தாக அமைந்துள்ளது தி கோட்.

விமர்சனங்களை அடையாளம் கண்டு டீ ஏஜிங் தொழில்நுட்பத்தை பார்வையாளர்கள் முகம் சுளிக்காத வகையில் பயன்படுத்தி இருக்கிறார்கள்.
Venkat Prabhu interview on 'GOAT': Vijay, Rajinikanth and Kamal Haasan share a brilliant sense of humour - The Hinduமுதல் பாதியில் எமோஷன் ஒருபக்கம் ஆக்‌ஷன் இன்னொரு பக்கம் என சரியாக பேலன்ஸ் செய்த இயக்குநர் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் இருக்கும் தொய்வை மறைக்க நிறைய போராடுகிறார். நெகட்டிவ் ரோலில் விஜய் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்து ரசிகர்களின் உற்சாகத்தை குறையாமல் வைத்திருக்கிறார். ரஜினி , அஜித் , தோனி , மட்ட பாடலில் குத்தாட்டம் போடும் நடிகை, க்ளைமேக்ஸில் வரும் குழந்தைகளை கவர்ந்த நடிகர் என  அடுத்தடுத்த காட்சிகளில் ட்விஸ்ட்கள் இந்த தொய்வை மறைக்கின்றன. திரையரங்கத்தில் முதல் தடவை ரசிகர்களுடன் கொண்டாடுவதற்கு ஏற்ற எல்லா பிளச் பாயிண்ட்ஸ்களும் படத்தில் இருக்கின்றன.

ஆனால் இன்னொரு முறை சென்று பார்ப்பதற்கு என்று படத்தில் ஒன்றும் இல்லை. அதேபோல் யுவனின் பின்னணி இசையும் முதல் நாள் கொண்டாட்டத்தின் மேல் மட்டுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில இடங்களில் கருடன் படத்தின் பிஜிஎம் பயண்படுத்தி இருக்கிறார். பிரேம்ஜியின் ஒரு சில காமெடிகள் சிறப்பாக வர்க் அவு ஆகியும் அவருக்கு  சில காட்சிகள் மட்டுமே இருப்பது வருத்தம் தான். மீனாக்‌ஷி செளதரி , லைலா , அஜ்மல் , ஒரு சில காட்சிகளோடு பேட்டா வாங்கிக் கொண்டு டாட்டா சொல்லிவிடுகிறார்கள். நான் தான் வில்லன் என்று சொல்லிக்கொண்டு அவ்வப்போது  நடிகர் மோகன் வந்தாலும் அவரைப் பார்த்து பயமே வரவில்லை.

லியோ படத்தைப்போல் இப்படத்திலும் டைட்டில் கார்டு சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இளையராஜாவின் சொர்க்கமே என்றாலும் பாடல் ரீமிக்ஸ், மெட்ரோவில் நடக்கும் ஆக்‌ஷன் காட்சிகள் , இறுதியில் வரும் ப்ளூப்பர்ஸ், அவ்வப்போது அரிதாக வரும் க்யூட்டான விஜய் எல்லாம் ரசிகர்களுக்கு போனஸ்.

கார் சேசிங் காட்சிகளிலும் , ஆக்‌ஷன் காட்சிகளிலும் சித்தார்த் நுனியின் ஒளிப்பதிவு கவனமீர்க்கிறது.

மொத்தத்தில் தி கோட் விஜய் என்கிற ஒரு ஐகானை திரையரங்குகளில் சென்று கொண்டாடிவிட்டு வருவதற்காக எடுக்கப்பட்ட ஒரு பக்கா கமர்ஷியல் படம். குடும்பத்தோடு கொண்டாடலாம்.
Tags: GOAT Movie ReviewGOAT ReviewMeenakshi ChaudharyPrashanthThe GOATThe goat reviewVenkat PrabhuVijayYUvan Shankar Raja
Previous Post

பிரைம் வீடியோவின் புதிய அசல் நகைச்சுவை இணையத் தொடரான தலைவெட்டியான் பாளையம் எதிர்வரும் செப்டம்பர் 20 தேதி அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

Next Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் ‘கோலி சோடா ரைசிங்’ வெப் சீரிஸ், செப்டம்பர் 13 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

Next Post

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின், ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் 'கோலி சோடா ரைசிங்' வெப் சீரிஸ், செப்டம்பர் 13 முதல் ஸ்ட்ரீமாகிறது !!

Popular News

  • I”am Game – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

    0 shares
    Share 0 Tweet 0
  • நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘ராக் ஸ்டார் ‘ அனிருத் வெளியிட்ட #Hukum சென்னை இசை நிகழ்ச்சியின் அப்டேட்ஸ்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் ‘வெனோம்: தி லாஸ்ட் டான்ஸ்’ திரைப்படம் இந்தியாவில் ஒரு நாளுக்கு முன்னதாகவே வெளியாக இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

விமல் – ஸ்ரேயா கூட்டணியில் அதிரடி ரோம்-காம் ‘சண்டக்காரி’!

September 5, 2026

மோகன்லால் – விஷ்ணு மோகன் இணையும் படத்திற்கு ‘ஆபரேஷன் கங்கா’ என பெயர் சூட்டப்பட்டது

September 5, 2026

நடிகர்கள் த்ரிஷா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில், ராஜா கிருஷ்ண மேனன் இயக்கத்தில், பனோரமா ஸ்டுடியோஸ் நிறுவனம், லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கும் முதல் தமிழ் படத்தின் படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியது!

September 5, 2026

‘மூன்வாக்’ – 2026 தீபாவளி விருந்தாக மகிழ்ச்சி, சிரிப்பை அள்ளித் தரும் குடும்ப பொழுதுபோக்கு படமாக திரைக்கு வருகிறது

September 5, 2026

பெத்லகேம் குடும்ப யூனிட் – விமர்சனம்

September 5, 2026

நிவின் பாலி நடிக்கும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்: பட பத்திரிகையாளர் சந்திப்பு

September 5, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.