• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ. மகேந்திரன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

by Tamil2daynews
February 20, 2025
in சினிமா செய்திகள்
0
0
SHARES
8
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

எம்ஆர் பிக்சர்ஸ் ஏ. மகேந்திரன் வழங்கும், அறிமுக இயக்குநர் மேகராஜ் தாஸ் இயக்கத்தில், ராஜ் ஐயப்பா – டெல்னா டேவிஸ் நடிக்கும் ‘லவ் இங்க்’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது!

 

எம்ஆர் பிக்சர்ஸ், தயாரிப்பாளர் ஏ. மகேந்திரன் நல்ல கதையம்சம் சார்ந்த படங்களைத் தயாரிக்க வேண்டும் என்ற முனைப்புடன் ‘லவ் இங்க்’  படத்தைத் தயாரித்து வருகிறார். இந்தப் படத்தில் ராஜ் ஐயப்பா கதாநாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக  டெல்னா டேவிஸ் நடிக்கிறார். சரியான திட்டமிடலுடன் குறுகிய காலத்தில் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை இயக்குநர்  மேகராஜ் தாஸ் நேர்த்தியாக படமாக்கியுள்ளார்.  இப்போது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் நடிகர்கள் சுனில் ரெட்டி, கேபிஒய் புகழ் ராமர் மற்றும் இயக்குநர்-நடிகர் ரவி மரியா ஆகியோரும் இணைந்துள்ளனர்.
இயக்குநர் மேகராஜ் தாஸ் கூறும்போது, “படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதலே சரியான திட்டமிடல் இருந்ததால் எளிதில் எங்களால் படப்பிடிப்பை முடிக்க முடிந்தது. தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். படப்பிடிப்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் தொடங்கியுள்ளது. கேபிஒய் ராமர் மற்றும் ரவி மரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களோடு நடிகர் சுனில் ரெட்டி (‘டாக்டர்’, ‘ஜெயிலர்’, ‘பீஸ்ட்’ படப்புகழ்) வில்லனாக நடிக்கிறார்”.நடிகர் அஜித் குமாரின் ‘வலிமை’, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெப் சீரிஸ் ‘உப்பு புளி காரம்’ ஆகியவற்றில் தனது அற்புதமான நடிப்பிற்காக ராஜ் ஐயப்பா பாராட்டப்பட்டார். பல சீரியல்கள் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த டெல்னா டேவிஸ் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

ஒரு சில திரைப்படங்களில் இணை இயக்குநராகப் பணியாற்றிய மேகராஜ் தாஸ் எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் ஃபீல்-குட் ரொமாண்டிக் காமெடி ஜானரில் உருவாகிறது. நடிகர் யோகி பாபு இந்த படத்தில் டாக்டராக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரது நடிப்பு நிச்சயமாக ரசிகர்களை சிரிப்பில் ஆழ்த்தும்.
பட்டிமன்றம் ராஜா, மாறன், சுபாஷினி கண்ணன், கேபிஒய் வினோத், டிஎஸ்ஜி (‘மார்க் ஆண்டனி’ பட வில்லன். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்), மவுரிஷ் தாஸ், வினோத் முன்னா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப குழு:

ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்,
கலை: வி. ராமு தங்கராஜ்,
படத்தொகுப்பு: கிருஷ்ணன் சுதர்ஷன்,  மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்.

Previous Post

ஏ ஆர் முருகதாஸ், சிவகார்த்திகேயன் இணையும் பிரம்மாண்ட ஆக்சன் படமான “மதராஸி” பட ஃபர்ஸ்ட் லுக் வீடியோ வெளியானது !!

Next Post

விறுவிறுப்பான படப்பிடிப்பில் கருணாஸ் – கருணாகரன் நடிக்கும் ” சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் “

Next Post

விறுவிறுப்பான படப்பிடிப்பில் கருணாஸ் - கருணாகரன் நடிக்கும் " சுந்தரா டிராவல்ஸ் சூப்பர் பாஸ்ட் "

Popular News

  • சாவீ – விமர்சனம்   ரேட்டிங் – 3/5

    சாவீ – விமர்சனம் ரேட்டிங் – 3/5

    0 shares
    Share 0 Tweet 0
  • டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி

    0 shares
    Share 0 Tweet 0
  • திரு வீர், ஐஸ்வர்யா ராஜேஷ், பரத் தர்ஷன், மஹேஸ்வர் ரெட்டி மூலி, கங்கா என்டர்டெயின்மென்ட்ஸ் இணையும் “புரொடக்ஷன் நம்பர் 2 “ படத்திற்கு “ஓ…!சுகுமாரி” எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜனவரியில் வெளியாகிறது ஸ்ரீகாந்த் கதாநாயகனாக நடித்துள்ள ‘தி பெட்’

    0 shares
    Share 0 Tweet 0
  • செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

இயக்குநர் சுந்தர் சி வெளியிட்ட மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டர்!

December 5, 2025

இதயத் தூண்டுதல், கைவினை நுணுக்கம், அப்பாவின் சேமிப்பு — இதைக் கொண்டு 40 நிமிட குறும்படமாகத் தொடங்கிய ‘STEPHEN’, இப்போது உலகளாவிய மனோவியல் திரில்லராக உயர்ந்து, டிசம்பர் 5 முதல் Netflix-ல் ப்ரீமியர் ஆகிறது

December 5, 2025

லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ திரைப்படத்தின் பிரீமியரில் ‘டெர்மினேட்டர்’ நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனுடன் மீண்டும் இணைந்தார்!

December 5, 2025

செல்ரியன் புரொடக்ஷன் சார்பாக செல்வம் பொன்னையன் தயாரித்திருக்கும் கெட்ட வார்த்தை கேட்ட வார்த்தை…

December 5, 2025

நாகபந்தம் கிளைமேக்ஸ் : பெரும்பொருட்செலவில் உருவாகும் பிரம்மாண்டம்!

December 5, 2025

நடிகர் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இசை ஆல்பம் ‘வரும் வெற்றி’

December 5, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.