• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘ப்ளு ஸ்டார்’ – விமர்சனம்

by Tamil2daynews
January 26, 2024
in விமர்சனம்
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp
‘ப்ளு ஸ்டார்’ – விமர்சனம்
நீலம் புரொடெக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் எஸ். ஜெயக்குமார் இயக்கத்தில் நடிகர்கள் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், பகவதி பெருமாள் உள்ளிட்டோர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் ப்ளூ ஸ்டார் (Blue Star). இயக்குநர் ஜெயக்குமார் இதற்கு முன்னர் இயக்குநர் ரஞ்சித்திடம் உதவி இயக்குநராக இருந்த ஜெயக்குமார் இதற்கு முன்னர் Be Aware Of Caste என்ற ஆவணப்படத்தினை மிகச் சிறப்பாகவும் பெரும் நெருக்கடிக்கு மத்தியிலும் காட்சிப் படுத்தியிருப்பார் என்பது கவனிக்கத்தக்கது.

BLUE STAR படத்தினைப் பொறுத்தவரையில், டிரைலர் பார்த்த ரசிகர்கள் மத்தியில் இருந்த எதிர்பார்ப்பு ஊர் தெரு மற்றும் காலணித் தெரு மக்களுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மற்றும் அதனால் ஏற்படும் பிரச்னைகளை பேசும் படமாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பினை உண்டாக்கியிருந்தது. ஆனால் படத்தில் இதுமட்டுல் இல்லாமல் ஊர் தெரு மற்றும் காலணி தெரு இணைந்தால் என்ன நடக்கும் என்பதை சிறப்பான திரைக்கதையால் காட்சி படுத்தி உள்ளார் இயக்குநர். காதல் காட்சிகள் ரசிக்கும்படியாக இருப்பதால் லைக்குகளை அள்ளுகின்றார் கீர்த்தி பாண்டியன்.

படத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை வரும் இயல்பான காட்சிகளும் அதன் வசனங்களினாலும் நகைச்சுவை சிறப்பாக எடுபட்டுள்ளதால் தியேட்டரில் சிரிப்பும் கைத்தட்டலும் ஒலித்துக்கொண்டே இருந்தது.  பாடல்கள் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருந்தாலும் படத்தில் காட்சிப் படுத்திய இடங்களுக்காகவே இயக்குநருக்கு தனி பாராட்டுகள். பின்னணி இசையில் கோவிந்த் வசந்தா படத்தின் தரத்தை உயர்த்துகின்றார்.

ஒவ்வொரு கிரிக்கெட் அணிக்கும் கேங்ஸ்டர் படத்திற்கு இசையமைப்பதைப் போல் பேஸ் கிட்டாரில் முத்திரை பதித்துள்ளார். படத்தில் 10 நிமிடங்களுக்கும் குறைவாக வரும் ”புல்லட் பாபு” கதாப்பாத்திரம் கைத்தட்டல்களை அள்ளுகின்றது. தனக்கு கொடுக்கப்பட்டுள்ள குணச்சித்ர கதாப்பாத்திரத்தில் பகவதி பெருமாள் ஸ்கோர் செய்கின்றார். திரைக்கதைக்கு ஏற்ற வசனங்கள் படத்திற்கு பலம் சேர்க்கின்றது. அசோக் செல்வன் அம்மாவாக நடித்துள்ள லிசி ஆண்டனியின் காட்சிகளுக்கும் தம்பியாக நடித்துள்ள பிரித்விராஜன் இடையே நடக்கும் சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்கும் நல்ல வரவேற்பு.

படத்தின் மையம் கிரிக்கெட். கிரிக்கெட் மீது ஆர்வமுள்ள அனைவருக்கும் இந்த படம் ரசிக்கும் படியாக இயக்கியுள்ளார் இயக்குநர். கிரிக்கெட்டை மையமாக வைத்து இயக்குநர் தான் நம்பும் அரசியலை சிறப்பாக எந்த இடத்திலும் முகம் சுளிக்காமல் காட்டியுள்ளார். இதற்கு முன்னர் வந்த ஊர் தெரு மற்றும் காலணி தெரு அரசியலை பேசிய படங்கள் இவர்களுக்கு இடையேயான பிரச்னைகளை பேசியிருந்தது. காலணி தெருவில் இருப்பவர்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அவமானங்கள் குறித்து எவ்வளவுதான் எடுத்துச் சொன்னாலும் அது ஊர் தெருவில் இருப்பவர்களுக்குப் புரிந்ததா என்ற கேள்விக்குறி இருந்துவந்தது. ஆனால் இந்த படத்தில் ஊர் தெருவில் உள்ள சாந்தனுக்கு ஏற்படும் அவமானம் அதனால் சாந்தனுக்குள் ஏற்படும் மாற்றம் ரசிக்கும்படியாக இருந்தது.

படம் முழுக்க முழுக்க கற்பனையே எனக் கூறிவிட்டு மறைந்த அரசியல் தலைவர் பூவை மூர்த்தி கதாப்பாத்திரம் ஒரு இடத்தில் காட்சிபடுத்தப்பட்டிருப்பது கேள்வியை எழுப்புகின்றது. க்ளைமேக்ஸ்க்கு முன்னதாக வரும் காதல் காட்சிகள் பார்ப்பதற்கு அழகியலாக இருந்தாலும் படத்தின் வேகத்தை சற்றே குறைப்பதாக உள்ளது. பா. ரஞ்சித் தயாரிப்பில் முத்திரை பதித்த படங்களின் வரிசையில் இந்த படத்திற்கு கட்டாயம் இடம் கிடைக்கும்.

மொத்தத்தில் ப்ளூ ஸ்டார் கிரிக்கெட் பிரியர்களின் மனதில் பசை போட்டு ஒட்டிக் கொள்ளும்.
Tags: Ashok Selvanblue starBlue Star Movie ReviewKeerthi PandianMovie ReviewShanthanu
Previous Post

ஜீ. வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘ரெபல்’ மார்ச் 22ஆம் தேதி வெளியாகிறது

Next Post

‘சிங்கப்பூர் சலூன்’ – விமர்சனம்

Next Post

'சிங்கப்பூர் சலூன்' - விமர்சனம்

Popular News

  • சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    சூர்யாவின் தயாரிப்பில் உருவான ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும் (ராரா) தமிழ் திரைப்படத்தின் ‘காசு’ எனும் தலைப்பிலான புதிய பாடலை AMAZON PRIME VIDEO வெளியிட்டது

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – ஆர்யா இணைந்து வெளியிட்ட நடிகை ப்ரியா பவானி சங்கரின் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் முன்னோட்டம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ரெட்ரோ வெற்றி, மீடியா நண்பர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த சூர்யா!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்பட டிரெய்லர்: நோவா சென்டினியோ, ஜேசன் மோமோவா மற்றும் வித்யுத் ஜமால் இணையும் அதிரடி ஆக்‌ஷன்!

July 31, 2026

நடிகை சிம்ரனின் நெகிழ்ச்சியான மனிதநேய செயல் – மாற்றுத்திறனாளி சிறுமியின் கனவை நனவாக்கிய மறக்க முடியாத தருணம்!

July 31, 2026

ஏழு மாநிலங்களை சேர்ந்த 1000 ரசிகர்களுடன் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக நேரம் செலவிட்டு மகிழ்ந்த நடிகர் அல்லு அர்ஜுன்!

July 31, 2026

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘மொத ராத்திரி’ திரைப்படம் ஆகஸ்ட் 21ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது!

July 31, 2026
நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

நமித் மல்ஹோத்ராவின் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் ஐந்து இந்திய மொழிகளில் உலகளவில் வெளியீடு!

July 31, 2026

பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !

July 31, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.