• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா விமர்சனம்

‘சிங்கப்பூர் சலூன்’ – விமர்சனம்

by Tamil2daynews
January 26, 2024
in விமர்சனம்
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘சிங்கப்பூர் சலூன்’ – விமர்சனம்

 

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, மீனாட்சி சௌத்ரி, சத்யராஜ், கிஷன் தாஸ், ஜான் விஜய், தலைவாசல் விஜய், லால், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிங்கப்பூர் சலூன் (Singapore Saloon). வேல்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்த நிலையில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டுள்ளது. விவேக் மெர்வின் இசையமைத்துள்ள சிங்கப்பூர் சலூன் படத்திற்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முடி திருத்தும் தொழிலாளியாக வரும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை செய்ய முயற்சி செய்யும் காட்சியிலிருந்து இப்படம் தொடங்கி அவர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பதை ஃபிளாஷ்பேக் வழியாக விவரித்து இதிலிருந்து ஆர்.ஜே பாலாஜி மீண்டாரா? இல்லையா? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் அடிப்படை கதையாகும்.

தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் ஆர்.ஜே.பாலாஜி தனது சிறுவயது முதல் அந்த ஊரில் முடி திருத்தும் தொழிலாளியாக இருக்கும் லாலை தனது ரோல் மாடலாக ஏற்றுக் கொள்கிறார். தான் எதிர்காலத்தில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணராக வருவேன் என கனவு கண்டு கொண்டிருக்கிறார். இதற்காக பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சிகை அலங்கார பணியில் அடியெடுத்து வைக்கிறார். அந்த வகையில் இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான ஜான் விஜய்யிடம் வேலைக்கு செல்கிறார்.

பின்னர் அங்கிருந்து வெளியேறி தனியாக சிங்கப்பூர் சலூன் என்ற பிரமாண்டமான கடையை தொடங்க நினைக்கிறார். இந்த கடை தொடங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவுகிறது. இதனால் விரக்தியடையும் ஆர்.ஜே.பாலாஜி தற்கொலை முடிவுக்கு செல்கிறார். இப்படிப்பட்ட நிலையில் திட்டமிட்டப்படி சிங்கப்பூர் சலூன் கடை திறக்கப்பட்டதா? ஆர்.ஜே பாலாஜியின் தற்கொலை எண்ணம் தடுக்கப்பட்டதா? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை ஆகும்.
படம் முழுக்க முழுக்க ஆர்.ஜே.பாலாஜி வழியே கடத்தப்படுகிறது. மனிதருக்கு காமெடி கைவந்த கலை என்ற நிலையில், சென்டிமென்ட் காட்சிகளில் இன்னும் மெனக்கெட்டிருக்கலாம். ஹீரோயின் மீனாட்சி சௌத்ரிக்கு இப்படத்தில் பெரிய அளவில் வேலை இல்லை என்றாலும் விஜய்யின் அடுத்தப்பட ஹீரோயின் என்பதால் ரசிக்கலாம். இவர்களை தவிர சத்யராஜ் மற்றும் ரோபோ ஷங்கர் தனது அலப்பறையான நகைச்சுவை நடிப்பை கொடுத்து படத்தை தாங்கி பிடித்துள்ளார்கள். இவர்கள் தவிர்த்து சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ், ஜீவா ஆகியோரை விட அரவிந்த்சாமி கேரக்டர் நன்றாக அமைக்கப்பட்டுள்ளது. சில காட்சிகளே வந்தாலும் லாலின் கேரக்டர் ரசிக்க வைக்கிறது.

சிங்கப்பூர் சலூன் படத்தின் பலமே முதல் பாதி தான். இதில் காமெடி காட்சிகளை அடுக்கி தியேட்டர்களை மகிழ்ச்சியான ஒரு மனநிலைக்கு மாற்றி விடுவார்கள் என்பது நிச்சயம். ஆனால் இரண்டாம் பாதியின் திரைக்கதை முதல் பாதியில் இருந்து விலகி வேறு பாதைக்கு சென்றாலும், அது கடைசி வரை கதையுடன் ஒட்டவில்லை. ஜெட் வேகத்தில் சென்ற படம் திடீரென சம்பந்தமே இல்லாத காட்சியினால் அதன் பொலிவை இழக்கிறது. இரண்டாம் பாதியில் வலிந்து திணிக்கப்பட்ட சில காட்சிகளை நீக்கியிருந்தால் படம் ரசிக்க வைத்திருக்கும்.

மேலும் எதுவுமே இங்க குலத்தொழில் கிடையாது, Success is not a option..it must  போன்ற வசனங்கள் கவனிக்க வைக்கின்றது. பாடல்கள் காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. சுகுமாரின் ஒளிப்பதிவு தென்மாவட்ட அழகை மெருகூட்டும் வகையிலும், ராவேத் ரியாஸின் பின்னணி இசை சில இடங்களிலும் கவனிக்கவும் வைக்கிறது. சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு இப்படம் சமர்ப்பணம் என தெரிவிக்கப்பட்டாலும்,

சொல்ல வந்ததை முழுமையாக சொல்லவில்லை என்ற எண்ணம் படம் முடியும்போது நமக்கு தோன்றுவது நெருடலாக தெரிகிறது.

சிகை அலங்கார தொழில் செய்பவர்களின்  வாழ்வாதாரத்தை இன்னும் அழுத்தமாக பதிவு செய்திருந்தால் இந்த சிங்கப்பூர் சலூன் ஜொலித்திருக்கும்.
Tags: Lokesh KanagarajMeenakshi ChaudharyMovie ReviewRJ Balajisingapore saloonSingapore Saloon ReviewSingapore Saloon Review in Tamil
Previous Post

‘ப்ளு ஸ்டார்’ – விமர்சனம்

Next Post

‘தூக்குதுரை’ – விமர்சனம்

Next Post
‘தூக்குதுரை’ – விமர்சனம்

'தூக்குதுரை' - விமர்சனம்

Popular News

  • நல்லபடம் -விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0
  • இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

    0 shares
    Share 0 Tweet 0
  • அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘வேட்டுவம்’ பா.இரஞ்சித்தின் பிரம்மாண்ட அபோகலிப்டிக் ஆக்ஷன் திரைப்படம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

நல்லபடம் -விமர்சனம்

September 21, 2026

‘சிக்மா’ திரைப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நிகழ்வு!

September 21, 2026

இரா.சரவணன் இயக்கத்தில், நிவாஸ் கே. பிரசன்னா இசையில், அழுத்தமான படைப்பாக அதிர வைக்க வருகிறது ‘நந்தன் 2’.

September 21, 2026

அதிரடி ஆக்ஷனில் மிரளவைக்கும் ராஷ்மிகா: மைசா’ திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

September 21, 2026

#Love’ – அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் மட்டும்

September 20, 2026

பிரம்மாண்டமாக நடைபெற்ற ‘பத்தா’ இசை வெளியீட்டு விழா!

September 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.