• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

‘வேட்டையன்’ – விமர்சனம்

by Tamil2daynews
October 11, 2024
in சினிமா செய்திகள்
0
0
SHARES
33
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

‘வேட்டையன்’ – விமர்சனம் 

 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திலேயே முற்றிலும் வித்தியாசமான கதைக்கு முக்கியத்துவம் உள்ள படம் வேட்டையன்.

தாமதமான நீதி மறுக்கப்பட்ட நீதி என நம்புபவர் எஸ்.பி. அதியன்(ரஜினிகாந்த்). மனித உரிமைகள் முக்கியம் என சொல்லும் நீதிபதி சத்யதேவ்(அமித்பா பச்சன்) என்கவுன்ட்டருக்கு எதிரானவர். இந்த இரண்டு துருவங்களுக்கு இடையேயான கதை வேட்டையன்.

அரசு பள்ளி ஆசிரியையான சந்தியாவின்(துஷாரா விஜயன்) பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கு வேகமாக நீதி கிடைக்க வேண்டும் என நினைக்கும் அதியன், மீடியா, அரசியல் மற்றும் மக்கள் கொடுக்கும் அழுத்தத்தால் அப்பாவியை கொன்றுவிடுகிறார்.

அப்பாவியை கொன்றுவிட்டீர்கள் அதியன் என நீதிபதி சத்யதேவ் அவரிடம் கூற வேதனை அடைகிறார். இதையடுத்து சந்தியாவை கொலை செய்தவரை கண்டுபிடிக்க அதியன் முயற்சி செய்ய பல விஷயங்கள் வெளியே வருகிறது. அந்த சூழலில் அதியன் மீண்டும் என்கவுன்ட்டர் செய்வாரா இல்லை நிதானமாக செயல்பட்டு வேறு வழியை கையாள்வாரா?
Vettaiyan' Box Office Prediction Day 1: Rajinikanth's Film To Open On A Terrific Note

படம் துவங்கிய முதல் 30 நிமிடங்கள் ரஜினி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அறிமுக சண்டை, டான்ஸ், யூகிக்க முடியும் கதை ஆனால் வேகமாக செல்கிறது. இதனால் முதல் பாதி பரபரப்பாக செல்கிறது. ஆனால் இரண்டாவது பாதியில் அந்த வேகம் குறையத் துவங்குகிறது. படம் ரொம்ப நேரம் ஓடுவது போன்றும் தோன்றுகிறது.

கிளைமாக்ஸ் காட்சியில் ராணாவும், ரஜினியும் மோதுவதில் புதுமை எதுவும் இல்லை. தியேட்டர்களில் விசில் பறக்க வேண்டும் என்பதற்காக சண்டை காட்சிகள் எழுதப்பட்டுள்ளது. போலீஸ் என்கவுன்ட்டர்கள் பற்றி பல கேள்விகள் கேட்கிறது படம். விசாரணை நடத்தும் போது மக்களிடையே போலீசார் பாகுபாடு பார்ப்பது பற்றியும் படத்தில் காட்டியிருக்கிறார்கள்.
Vettaiyan :अमिताभ बच्चन और रजनीकांत 33 साल बाद एक साथ

கல்வி முறையை பணக்காரர்கள் எப்படி தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கனவுகளுடன் இருக்கும் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்து பிள்ளைகளை குறி வைக்கிறார்கள் என காட்டியிருக்கிறார்கள்.

படத்தை தன் தோள்களில் தாங்கியிருக்கிறார் ரஜினி. அவரின் சூப்பர் ஸ்டார் பவருக்கு முன்பு பிற கதாபாத்திரங்களின் வெயிட் குறைந்து கவுரவ கதாபாத்திரங்கள் போன்று தெரிகிறது. அதை தாண்டியும் பேட்டரியாக ஜொலிக்கிறார் ஃபஹத் ஃபாசில்.

தொழில்நுட்ப விஷயங்களில் உதவி செய்ய திருடனான பேட்டரியை தன்னுடன் வைத்துக் கொள்கிறார் அதியன். ஹார்லிக்ஸ் சாப்பிடும் பழக்கம் உள்ள பேட்டரி ரசிகர்களை சிரிக்க வைப்பதுடன் பல காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார்.
Vettaiyan movie review: Social justice drama can't avoid the Rajinikanth star image problem

அமிதாப் பச்சன் தனித்து தெரிகிறார். ஆனால் அமிதாப் பச்சன், ரஜினி சேர்ந்து வரும் காட்சிகள் வலுவாக இல்லை.

அதியன் ரஜினியின் மனைவியாக நடித்திருக்கிறார் மஞ்சு வாரியர். யூடியூப் சேனல் நடத்தும் மஞ்சுவுக்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை. ஆனால் ஒரு மாஸ் காட்சியில் தூள் கிளப்பியிருக்கிறார்.

கல்வியை வைத்து காசு பார்க்கும் தொழில் அதிபரான ராணா படத்தின் இறுதியில் வருகிறார். அனிருத்தின் பி.ஜி.எம். பெரிய பலம். நான்கு பாடல்களில் மனசிலாயோ மற்றும் ஹன்ட்டர் வந்தார் பாடல்கள் மட்டுமே மனசில் நிற்கிறது.

அது எப்படி என்கவுன்ட்டரில் பணக்காரர்கள் அல்ல மாறாக ஏழைகள் தான் குறி வைக்கப்படுகிறார்கள் என கேள்வி கேட்டிருக்கிறார் ஞானவேல். கல்வி முறையில் இருக்கும் ஓட்டைகள் குறித்து கேள்வி கேட்டிருக்கிறார்.சுவாரஸ்யமான கதையை கையில் எடுத்திருக்கிறார் ஞானவேல். ஆனால் சூப்பர் ஸ்டார் எனும் பெரும் சக்தி அதை மேலும் சுவாரஸ்யமாக்குவதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்..

மொத்தத்தில் இந்த வேட்டையன் வேட்டை மன்னன்
Previous Post

முதன் முதலாக ஹிந்தி பிக்பாஸ்க்கு‌ சென்ற தமிழ் நடிகை

Next Post

ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

Next Post

ஆர்எம்பி புரொடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் வி.ஜி. தனலட்சுமி கோபாலன் வழங்கும், அறிமுக இயக்குநர் பிரேம் நசீர் இயக்கத்தில் பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது!

Popular News

  • விக்டரி வெங்கடேஷ், நந்தமூரி கல்யாண் ராம், அனில் ரவிபுடி, சாஹு கரபாட்டி, ஷைன் ஸ்கிரீன்ஸ் வழங்கும் #VenkyAnil5 #NkrAR2, சுரேஷ் புரொடக்ஷன்ஸ், ஜீ ஸ்டூடியோஸ், சுமதி. அர்ச்சனா வழங்கும் திரைப்படம் பிரம்மாண்டமாக துவக்கம்

    0 shares
    Share 0 Tweet 0
  • ஓவிய கலைஞராக மிளிரும் ஷாம்லி

    0 shares
    Share 0 Tweet 0
  • தேவயானி நடிக்கும் அரசு கொரோனா விளம்பரம்.

    0 shares
    Share 0 Tweet 0
  • ஜோதிகா நடிப்பில் சூர்யா தயாரிக்கும் புதியபடம் பொன்மகள் வந்தாள் !!

    8 shares
    Share 8 Tweet 0
  • பத்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாட வந்த கே.ஜே.ஜேசுதாஸ்

    8 shares
    Share 8 Tweet 0

Recent News

மக்கள் தலைவா – விமர்சனம்

மக்கள் தலைவா – விமர்சனம்

June 20, 2026

சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது அரசாங்கத்தின் கடமை மட்டுமல்ல, மக்களாகிய நம் ஒவ்வொருவரின் பொறுப்பும் கடமையும்… நடிகர் சௌந்தரராஜா

June 20, 2026

சென்னையில் நடைபெற்ற “எங்கள் தங்கம்” படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு!

June 20, 2026

‘அன்பே டயானா’ ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் ரிலீஸ் – அட்டகாசமான போஸ்டருடன் வெளியீட்டு அறிவிப்பு !

June 20, 2026

நடிகர் சனந்த் நடிக்கும் ‘ஹார்ட்டின் ‘ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா

June 20, 2026

‘கடினமான நாட்களும் மதிப்புமிக்க பாடங்களாக அமைகின்றன’- ஸ்ருதிஹாசன்

June 20, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.