நம்மில் ஒருவர் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக சென்றது நமக்கு பெருமையே,இப்பெருமையை நமக்கு பெற்று தந்த “ஸ்ருதிகா”,தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகரான “தேங்காய் சீனிவாசன்” அவர்களின் பேத்தி ஆவார்.சினிமா குடும்ப பின்னணியில் பிறந்த இவர் நம் சூர்யா நடிப்பில் வெளியான “ஸ்ரீ” திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமாகி, தித்திக்குதே,நளதமயந்தி திரைப்படங்களிலும்,மலையாள திரைப்படத்திலும் நடித்து உள்ளார்.சில ஆண்டு கால இடைவெளிக்குப்பின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி வழங்கிய குக் வித் கோமாளி சீசன் 3, நிகழ்ச்சியில் பங்கேற்று,தனது குறும்புக்கார குணத்தினால் மக்கள் மனதை வென்றார்.அதைத்தொடர்ந்து ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றவர் இன்று ஹிந்தி பிக்பாஸ் சீசன் 18 நிகழ்ச்சியில்,போட்டியாளராக பங்கேற்று உள்ளார்.தமிழகத்தில் இருந்து அவர் வெற்றிபெற சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன.இந்த ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலர்ஸ் தொலைக்காட்சி தினமும் இரவு பத்து மணிக்கு ஒளிபரப்பு செய்கிறது,ஜியோ சினிமா வலைத்தளம் இந்நிகழ்ச்சியை 24 மணி நேரமும் ஒளிபரப்பு செய்கிறது.