இப்படம் சொல்ல வேண்டிய கதை நடிகை – அம்மு அபிராமி
ஸ்ரீ அண்ணாமலையார் மூவிஸ் தயாரிப்பில் மணிபாரதி இயக்க, செங்குட்டுவன், அம்மு அபிராமி நடித்து, சித்தார்த் விபின் இசையில் பேட்டரி படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் நடிகை, தொழில் நுட்ப கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

அசுரன் படத்தால் தான் இப்பட வாய்ப்புக் கிடைத்தது. ஆகையால், முதலில் இயக்குனர் வெற்றிமாறன் அவர்களுக்கு நன்றி. என்னைப் பாராட்டி பேசிய அனைவருக்கும் மிக்க நன்றி. குலுமணாலியில் புடவை கட்டி நடனமாட வேண்டும் என்கிற கனவு இப்படத்தில் நனவானது. மணிபாரதி சாரிடம் அனைவரிடமும் அன்பாகவும், அனுசரித்து போக வேண்டும் என்பதையும் அவரிடம் கற்றுக் கொண்டேன். இப்படம் சொல்ல வேண்டிய கதை என்றார்.